Published:Updated:

களைகட்டப்போகும் கச்சத்தீவு திருவிழா! - யாழ்ப்பாண ஆயர் அழைப்பு

களைகட்டப்போகும் கச்சத்தீவு திருவிழா! - யாழ்ப்பாண ஆயர் அழைப்பு
களைகட்டப்போகும் கச்சத்தீவு திருவிழா! - யாழ்ப்பாண ஆயர் அழைப்பு

களைகட்டப்போகும் கச்சத்தீவு திருவிழா! - யாழ்ப்பாண ஆயர் அழைப்பு

வரும் ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்ரவரி 23 ,24 தேதிகளில் நடக்க உள்ளதாக யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் கிறிஸ்துவர்களின் தவ காலத்தில் நடப்பது வழக்கம். இந்த திருவிழாவில் இந்தியாவில் இருந்தும் இலங்கையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். 1982-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த மோதலை தொடர்ந்து, கச்சத்தீவு திருவிழாவுக்கு இந்திய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், 2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக இந்திய பக்தர்கள் கச்சத்தீவு திருவிழாவுக்குச் சென்று வந்தனர்.

 
 

கடந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவுக்கு இந்திய பக்தர்கள் செல்ல இருந்த நிலையில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லாமல் இந்திய பக்தர்கள் புறக்கணித்தனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் பிப்ரவரி மாதம்  23, 24-ம் தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவுக்கான  பணிகள் தொடங்க உள்ளதாகவும், இருநாட்டு பக்தர்களும் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் எனவும் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசத்தின் செயலாளர் சுதர்சன் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய பக்தர்களின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்து தர தமிழகத்திலுள்ள பங்குத்தந்தைகளுக்கு அவர் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அடுத்த கட்டுரைக்கு