Published:Updated:

`பரிசுகளை அள்ளிய காளை ரயில் மோதி பலி!’ - புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் சோகம்

`பரிசுகளை அள்ளிய காளை ரயில் மோதி பலி!’ - புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் சோகம்
`பரிசுகளை அள்ளிய காளை ரயில் மோதி பலி!’ - புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் சோகம்

`பரிசுகளை அள்ளிய காளை ரயில் மோதி பலி!’ - புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் சோகம்

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளிய பிடிபடாத காளை ஒன்று, ரயில்வே கேட்டை கடக்கமுயன்றபோது, விரைந்து வந்த ரயில் மோதி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை நகருக்கு அருகிலுள்ள கோயில்பட்டி மலையகருப்பர் கோயில் விழாவை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. திருச்சி ரோடு ஐ.டி.ஐ. அருகே அய்யனார் திடலில் காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டியில் தமிழக அமைச்சர்கள் 5 பேர் கலந்து கொண்டனர்.  விமரிசையாகவும் ஆரவாரத்துடனும் நடந்த இந்தப் போட்டியில் பெயர் பெற்ற பல ஜல்லிக்கட்டுக் காளைகள் பங்குபெற்றன. ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியைக் காண்பதற்க்கென்று  உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கைத்தறித் துறை அமைச்சர் ஒ.எஸ் மணியன், வருவாய்த் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் வந்திருந்தனர். இதுதவிர, மாவட்ட ஆட்சியர் கணேஷ் மற்றும் நாட்ஆளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். போட்டிகளில் பங்கேற்கும் வீரமிகு காளைகளுக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் மோட்டார் பைக்குகள், சைக்கிள்கள், எல்.ஈ.டி. டிவிக்கள் தங்கக் காசுகள், விமான டிக்கட்டுகள் வெள்ளிக் காசுகள், பீரோ, ஆடு, பசு மாடுகள், மிக்சி,கிரைண்டர்கள் என 1500-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், அன்னவாசல் அருகிலுள்ள மாங்குடி  எனும் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா  என்பவரது  காளையும் பங்கேற்றது. அந்த காளை இதுவரை கலந்துகொண்ட போட்டிகளில்தோல்வியை காணாத காளை என்ற பெயர் பெற்றது. மைக்கில் அதனைப் பற்றிய அறிவிப்பு வந்தவுடனேயே, மாடுபிடி வீரர்கள் மத்தியில் பரபரப்பு எழுந்தது. அந்தக் காளையின் தோரணையும் மிரட்டும் உருவமும் எவ்வளவு பெரிய மாடுபிடி வீரரையும் கொஞ்சம் பீதிக்குள்ளாக்கி விடும். வாடிவாசலை விட்டு  சீறிப்பாய்ந்து வெளியே வந்தபோதே மாடுபிடி வீரர்கள் கணித்து  விட்டார்கள். காளையை நெருங்கினால் காயம்தான் என்று. ஆனாலும் முயற்சியை விடாமல் சில வீரர்கள் காளையை அடக்கி பெயர் வாங்க முயற்சி செய்தார்கள். ஆனால், அருகில்  நெருங்க முடியவில்லை. அடக்கவும் முடியவில்லை. சுப்பையா காளை சுற்றிச்சுற்றி வந்து வீரர்களுக்கு போக்குக் காட்டி கம்பீரமாக நின்றது. முடிவில் அந்தக் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அதன் உரிமையாளருக்கு மின்விசிறி , ரொக்கப்பரிசு, மிக்சி மற்றும்  சைக்கிள் என்று பல பரிசுகள் அளிக்கப்பட்டன. பரிசுகளைப் பெற்றுக்கொண்டு அதனை கூட வந்தவர்களிடம் கொடுத்துவிட்டு காளையைப் பிடிப்பதற்காக சுப்பையா விரைந்த போதுதான் அந்தத் துயரம் நிகழ்ந்தது. அவிழ்த்து விடப்பட்ட இந்தக்காளை சிட்டாக ஓடியது.

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற இடத்துக்கும் சற்று தூரத்தில்  கருவேப்பிள்ளையான் ரயில்வே கேட்  உள்ளது. அதனை அந்தக்காளை  கடக்க முயன்றது. அப்போது சென்னையிலிருந்து புதுக்கோட்டை வழியாக   ராமேஸ்வரம் செல்லும் ரயில் விரைந்து வந்து கொண்டிருந்தது. இதனை கவனிக்காமல் ரயில்வே கேட்டை அந்த காளை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராமல் அந்தக் காளையின் மீது ரயில்  மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே சுப்பையா காளை பலியானது. கூட்டம் வெகுவாகத் திரண்டு விட்டது. இறந்த காளையின் முன்பு  உரிமையாளர் குடும்பமே கதறி அழுதனர். ஜல்லிக்கட்டு காளை என்பது அதனை வளர்ப்போர் குடும்பத்தின் மூத்த பிள்ளையைப் போல வளர்க்கப்படுவதுண்டு. காளை அடிபட்டோ, உடல்நலக் குறைவாலோ இறந்துவிட்டால் அந்தக் குடும்பமே இடிந்து போய்விடும். அப்படித்தான் தங்கள் வீட்டுக் காளை ரயிலில் அடிப்பட்டு இறந்து விட்டது என்ற தகவல் அறிந்ததும் மாங்குடி கிராமத்திலிருந்து கதறிக்கொண்டு விரைந்து வந்த சுப்பையாவின் மனைவி தலையில் அடித்துக்கொண்டு,"என் புள்ளை போயிடுச்சே..நோய் அண்டாம,நோக்காடு அண்டாம பார்த்து பார்த்து வளர்த்தேனே..இப்படி ரயில்ல அடிபட்டு சாகவா வந்தே என் செல்லமே" என்று சொல்லியபடி கதறி அழுதது பார்ப்போர் மனதை பிசைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு காளைகள் இறப்பது அபூர்வம். இது புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வருடத்தில் நிகழும்  இரண்டாவது சம்பவம். சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கரின் வளர்ப்புக்காளையான 'கொம்பன்'வாடிவாசலில் அடிபட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு