Published:Updated:

திருச்செந்தூரில் வரும் மே 28-ல் வைகாசி விசாகத் திருவிழா - 3 நாள்கள் பூஜை நேரம் மாற்றம்

திருச்செந்தூரில் வரும் மே 28-ல் வைகாசி விசாகத் திருவிழா - 3 நாள்கள் பூஜை நேரம் மாற்றம்
திருச்செந்தூரில் வரும் மே 28-ல் வைகாசி விசாகத் திருவிழா - 3 நாள்கள் பூஜை நேரம் மாற்றம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வரும் மே 28-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மே 27 முதல் 29-ம் தேதி வரை, 3 நாள்கள் பூஜை காலங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வரும் மே 28-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மே 27 முதல் 29-ம் தேதி வரை, 3 நாள்கள் பூஜை காலங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும் கடற்கரையோரத் தலமுமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவும் ஒன்று. முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படும் இத்திருவிழா வரும் மே மாதம் 28-ம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவில் கலந்துகொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்ய தூத்துக்குடி மட்டுமல்லாமல் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் மாலை அணிந்தும் விரதமிருந்தும் பாதயாத்திரையாக திருச்செந்தூர் வருவார்கள்.

இத்திருவிழாவை முன்னிட்டு மே 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மூன்று நாள்கள் பூஜை காலங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 
இது குறித்து திருக்கோயில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வரும் 27-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு,  4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை, காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

மே 28-ம் தேதி,வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை, காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.

மே 29-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறுகிறது. 5 மணிக்கு  உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை, பகல் 10.30  மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் மற்றும் தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு