Published:Updated:

ராமலீலா நாடகத்தில் அசத்தும் இஸ்லாமியக் குடும்பம்!

சத்யா கோபாலன்
ராமலீலா நாடகத்தில் அசத்தும் இஸ்லாமியக் குடும்பம்!
ராமலீலா நாடகத்தில் அசத்தும் இஸ்லாமியக் குடும்பம்!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு இஸ்லாமியக் குடும்பம் மூன்று தலைமுறைகளாக நவராத்திரியின்போது ராமலீலா நாடகம் நடத்தி வருகிறது. 

ராமலீலா நாடகத்தில் அசத்தும் இஸ்லாமியக் குடும்பம்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் முகமது ஷபீர் கான், இவர் தன் மகன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் இணைந்து மூன்று தலைமுறைகளாக ராம அவதாரத்தின் சிறப்புகளைக் கூறும் நாடகத்தை நடத்தி வருகிறார். இஸ்லாமியரான இவர் இந்துக் கடவுளின் சிறப்புகளைக் கூறுவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதுபற்றிப் பேசிய ஷபீர் கான், `` 1972-ம் ஆண்டு முதல் எங்கள் குடும்பம் இந்த நாடகத்தை நடத்தி வருகிறோம். என் இரண்டு மகன்கள் மற்றும் தற்போது என் பேரன்கள் வரை இந்த நாடகத்தில் கலந்துகொண்டு வருகின்றனர். எனக்கு 13 வயது இருக்கும்போதே ராமலீலா நாடகத்தில் நான் நடிக்கத் தொடங்கிவிட்டேன். இங்கு இந்து, முஸ்லிம் என அனைவரும் இணைந்துதான் இந்த நாடகத்தில் நடிப்போம். கடவுள், இந்து முஸ்லிம் என யாரையும் தனியாகப் பிரிக்கவில்லை நாம் அனைவரும் ஒன்றே” எனத் தெரிவித்துள்ளார்.