Election bannerElection banner
Published:Updated:

ஐந்தாவது முறையாக தேசிய விருது - தூத்துக்குடி துறைமுகத்துக்கு கிடைத்த பெருமை!

ஐந்தாவது முறையாக தேசிய விருது - தூத்துக்குடி துறைமுகத்துக்கு கிடைத்த  பெருமை!
ஐந்தாவது முறையாக தேசிய விருது - தூத்துக்குடி துறைமுகத்துக்கு கிடைத்த பெருமை!

ஐந்தாவது முறையாக தேசிய விருது - தூத்துக்குடி துறைமுகத்துக்கு கிடைத்த பெருமை!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் செலவு நிர்வாகத்தின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய விருதினைப் பெற்றுள்ளது. இத்துறைமுகம் ஐந்தாவது முறையாக இவ்விருதினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியத் துறைமுகங்களில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், இரண்டு சரக்குப் பெட்டக தளம் உட்பட 14 கப்பல் தளங்களுடன் செயல்பட்டு வருகிறது. சரக்குகளைக் கையாளுதல், நிலக்கரி இறக்குமதி ஆகியவற்றில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இதற்காக பல தேசிய விருதுகளையும் பெற்று வருகிறது. இந்திய அடக்கவிலை நிர்ணயக் கணக்கியல் நிறுவனம் சார்பாக 2017-ம்  வருடத்திற்கான போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவின் கீழ் இத்துறைமுகத்திற்கு ”செலவு மற்றும் நிர்வாக தேசிய விருது” வழங்கப்பட்டுள்ளது.  

இவ்விருது வழங்கும் விழா புது டெல்லியில் நடைபெற்றது. மத்திய ரயில் மற்றும் நிலக்கரி அமைச்சர் பியுஷ் கோயல் தேசிய விருதினை வழங்கினார். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் சார்பாக கணக்கு ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கியல் அதிகாரி சாந்தி, இவ்விருதினைப் பெற்றுக் கொண்டார். இத்துறைமுகம் ஐந்தாவது முறையாக தேசிய விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த 2008, 2012, 2015 மற்றும் 2016 ஆகிய நான்கு ஆண்டுகளில் பெற்றுள்ளது.

சிறந்த முன்மாதிரியான செயல்திறன், மனிதவள மேம்பாடு, எல்.இ.டி., விளக்குகள் அமைப்பின் மூலம் மின்சார சேமிப்பு, சூரிய மின் ஆலை அமைப்பினை செயல்படுத்துதல், சரக்கு கையாளுவதை இயந்திரமாக்குதல் மூலம் ஒட்டுமொத்த செலவீனம் குறைப்பு மற்றும் துறைமுக வர்த்தகத்தின் போது சரக்குகளை வேகமாக வெளியேற்றுவதற்கான லாஜிஸ்டிக் செலவினங்களை குறைத்தல் ஆகியவற்றிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2017-18-ம் நிதி ஆண்டின் இத்துறைமுகத்தின் இயக்க விகிதாச்சாரம் 39.28 சதவீதமாக அமைந்தது இந்திய துறைமுகங்களில் சிறப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு