Published:Updated:

`சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம்’ - இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

`சூரியனை ஆய்வு செய்ய  ஆதித்யா விண்கலம்’ - இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
`சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம்’ - இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா விண்கலம் அமைப்புப் பணி 4 ஆண்டுகளில் நிறைவடையும் என்று கடலூரில் கூறினார் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.

கடலூர் மாவட்ட நிர்வாகம், இந்திய மருத்துவக் கழகம், கடலூர் சிறகுகள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடலூர் நகர அரங்கில் 2-வது தேசிய குழந்தைகள் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது.  கண்காட்சியை இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ``நிலவுக்கு இஸ்ரோ விண்கலம் அனுப்பும் சந்திராயன்-2 பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்திராயன் திட்டம் ரஷ்யாவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதேபோன்ற திட்டத்தை ரஷ்யாவும், சீனாவும் இணைந்து மேற்கொண்டது தோல்வியில் முடிந்ததால் இந்தியா தனது கட்டுமானத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. எனவே செயற்கைக்கோள், நிலவில் இறங்கும் விண்கலம் உள்ளிட்டவைகளை தயாரித்து வருவதால் காலதாமதமாகி வருகிறது. 

மேலும், நிலவில் மனிதனை இறக்கி மறுபடியும் அந்த விண்கலத்தைப் பூமிக்கு திருப்ப வேண்டியிருப்பதால் இத்திட்டத்தை அதிக கவனத்துடன் கையாண்டு வருகிறோம். அதேபோன்று, சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யும் ஆதித்யா திட்டமும் நடைமுறையில் உள்ளது. ஆதித்யா  விண்கலத்தில் 5 கருவிகளைப் பொருத்தி சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட பகுதியில் விண்கலத்தை நிலைநிறுத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதன் ஆரம்பக் கட்டப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இப்பணிகள்  வரும் 4 ஆண்டுகளுக்குள் நிறைவுபெறும் என்றார். இந்த கண்காட்சி வரும் 21-ம் தேதி வரையில் நடைபெறுகிறது.