Published:Updated:

மணிவிழா - மனைவிக்கு மரியாதை

மணிவிழா - மனைவிக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
மணிவிழா - மனைவிக்கு மரியாதை

கொண்டாட்டம்எஸ்.கதிரேசன்

மணிவிழா - மனைவிக்கு மரியாதை

கொண்டாட்டம்எஸ்.கதிரேசன்

Published:Updated:
மணிவிழா - மனைவிக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
மணிவிழா - மனைவிக்கு மரியாதை

ழக்கமாக எல்லோரும் ஆண்களுக்கு `மணி விழா’ (60-வது பிறந்த நாள் விழா)வைக் கொண்டாடிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கே ஒருவர் தன் மனைவியின் மணி விழாவைக் கொண்டாடி, தானும் மகிழ்ந்து தன் குடும்பத்தினருக்கும் இன்ப அதிர்ச்சி  தந்ததிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, ‘மதுரா டிராவல்ஸ்’ உரிமையாளர் வீ.கே.டி பாலன்தான். உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு மக்கள் பயணம் செய்ய பயண ஏற்பாடுகளைச் செய்து தரும் முன்னணி நிறுவனத்தை நடத்தி வரும் வீ.கே.டி.பாலனிடம், ``மனைவிக்கு மணிவிழா கொண்டாடும் யோசனை எப்படி வந்தது?” என்று  கேட்டோம்.  

மணிவிழா - மனைவிக்கு மரியாதை

“பொதுவா கோயில் திருவிழா, விசேஷம், விரதம்... இதெல்லாம்  வாழ்க்கையில மகிழ்ச்சியைத் தரக்கூடிய சமூக விழாக்கள். ஆனா, ஒவ்வொரு தனிமனுஷனுக்கும் வரக்கூடிய பிறந்த நாள், திருமண நாள், 25-வது மண நாள், சஷ்டியப்த பூர்த்தி (மணி விழா), சதாபிஷேகம் எல்லாம் அவனுக்கே அவனுக்கென நடக்கும் விழாக்கள் என்கிறதால அதுல வழக்கத்தைவிட கூடுதலான மகிழ்ச்சி இருக்கிறது இயல்பானது.

எல்லோருக்கும் வருவது போல எனக்கும் சஷ்டியப்த பூர்த்திங்கிற மணிவிழா வந்துச்சு. அதை விழாவா கொண்டாடுறதுங்கிற சம்பிரதாயத்தை எங்க வீட்டுலயும் கடைப்பிடிக்க நினைச்சாங்க. ‘வழக்கம்போல உங்க பொறந்த நாள்னா அநாதை ஆசிரமம், முதியோர் இல்லம்னு போவீங்க. இந்த வருஷம் நீங்க போகக் கூடாது. உங்களோட மணி விழாவை நாங்க கொண்டாடணும். அதனால அன்னிக்கு நீங்க எங்ககூடதான் இருக்கணும். நாங்க சொல்றமாதிரிதான் கொண்டாடணும்’கிறது என் மனைவியின் அன்புக்கட்டளை. கூடவே என் சம்பந்தி வீட்டார், என் மகன், மருமகள், மகள் மருமகன், உறவினர்கள், நண்பர்கள், எல்லாரும் சேர்ந்துக்கிட்டு விழா ஏற்படுகளைப் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.  
 
திருக்கடையூர் அபிராமி கோயிலில் அர்ச்சனை, பூஜைகள் செய்வதற்கும், பக்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் விழாவை நடத்துவதற்கும் சென்னையிலிருந்து எல்லோரும் போய் வருவதற்கு பஸ்ஸுக்கும் அட்வான்ஸ் கொடுத்துட்டாங்க.

பிறந்த நாள் அன்னிக்கு இருக்கணும்னு சொல்றாங்கனு நினைச்சேன். ஆனா, எனக்கு தெரியாம சீக்ரெட்டாகவே இத்தனை ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இந்த விஷயங்கள் யாவும்  மெள்ள என் காதுக்கு வந்துச்சு. ஆனா, எனக்குத் தெரியும்கிறது அவங்களுக்குத் தெரியாது. எனது பிறந்த நாளான ஜனவரி 26 நெருங்கி வந்தது.

நான் என் மனைவியை அழைத்து, ‘இதுவரை நான் விரும்பியபடி என் பின்னேயே நீ நடந்து வந்துட்டே. இனியும் நீ அப்படியே வருவேன்னு நினைக்கிறேன். எனக்கு  இந்த விழாவைக்  கொண்டாடுறதுல விருப்பமில்லை’னு உறுதிபட சொல்லிட்டேன். `ஆமா, என் சொல்படி என்ன நடந்திருக்கு? நீங்க விரும்பியபடிதானே எல்லாமே நடந்திருக்கு’னு சொன்னாங்க. என் பிள்ளைகள் உறவினர்கள் எல்லாம், `அதெப்படி நீங்க மறுக்கலாம்? அட்வான்ஸ் எல்லாம் கொடுத்துட்டோம்.ஏற்பாடுகள் அனைத்தும் செஞ்சிட்டோம். இப்போ என்ன செய்வது?’னு கேட்டாங்க. 

மணிவிழா - மனைவிக்கு மரியாதை

நான் அவங்ககிட்ட, ‘நீங்க என் மேல இருக்கிற அன்பினால இப்படிச் சொல்றீங்க. நீங்க அட்வான்ஸ் கொடுத்த இடத்தில சொல்லுங்க. அவங்க ரிடர்ன் கொடுத்தா கொடுக்கிறாங்க... இல்லாட்டினாலும், பரவாயில்ல விட்டுடுங்க’னு சொல்லிட்டேன். `என்கிட்ட கேட்டிருந்தால் என் கருத்தைச் சொல்லியிருப்பேனே’னு  சொன்னேன். அதன்பிறகு அவர்களும் வேண்டாவெறுப்பாக எல்லாவற்றையும் கேன்சல் செய்தார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கும் என் பிடிவாதம் தெரிஞ்சிருந்ததால வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொண்டனர். நாட்கள் வருடங்களாக உருண்டோடின. மூன்று ஆண்டுகளாயின. நான் என் மகளையும்  மகனையும் அழைத்து, ‘மணி விழா கொண்டாடலாம்னு மூணு வருஷத்துக்கு முன்பு சொன்னீங்களே. அந்த சஷ்டியைக் கும்பிடலாம்னு சொன்னேன். ஆம், அது கொண்டாடுவது அல்ல, சஷ்டியைக் கும்பிடுவது. உங்க அம்மாவுக்கு இப்போது 60 வயதாகிறது. உங்கள் அம்மாவாகிய என் மனைவி, என்னை மணமுடித்த காலம் முதல் பட்ட துன்பங்கள், துயரங்கள் ஏராளம். சோகம், கண்ணீர் ஏராளம் ஏராளம். சொல்லில் சொல்லமுடியாதவை. அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது மணி விழாவை இந்த ஆண்டு கொண்டாடுவோம்’ என்றேன். அவர்களுக்கோ ஒரே இன்ப அதிர்ச்சி.

என் மனைவியின் 60-வது பிறந்த நாள், அவளுக்கு மணி விழா, நான் மணமகனாக. நான் பெரிதும் மதிக்கும் மாமனிதர் ஐயா ஆயக்குடி ராமகிருஷ்ணன் தலைமையில்,எனது சொந்த ஊரான திருச்செந்தூரில் உள்ள, என் தாத்தா, பாட்டி, என் தாய் தந்தையரின் நினைவிடத்தில் (மூதாதையரின்  சமாதி) வைத்து, கணவனை இழந்த என் மாமியார் கையால் தாலியைத் தொட்டு எடுத்து தர, என் மனைவி கழுத்தில் தாலியைக் கட்டினேன்.

எங்களுடைய உற்றார் உறவினர்கள், சொந்த பந்தங்கள் வந்திருந்தனர். இங்கு சென்னையில் எனது அலுவலகத்தில் பணிபுரியும் என் அன்பு ஊழியர்கள் 40  பேர் தனி பஸ்ஸில் திருச்செந்தூர் வந்து வாழ்த்திட, விழா சீரும் சிறப்புமாக நடை பெற்றது’’ என்கிறார் தன் கண்களில் வழியும் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்தபடி.

மணி விழா தம்பதி வீ.கே.டி.பாலன் தங்களின் இனிப்பான இல்லறத்தில் இடை விடாது கடைப்பிடிக்கும் வாழ்வியல் குறிப்புகள்:

*எந்தச் சூழ்நிலையிலும் நான், அவளை ஏமாற்ற மாட்டேன் என்ற நம்பிக்கை என் மனைவிக்கு அபரிமிதமாக உள்ளது. அதற்கேற்றாற்போல நான் இன்று வரை நடந்து வருகின்றேன்; என்றும் நடப்பேன்.

*அவளுக்குக் கிடைக்காத ஒரு சுகத்தை அது அமிர்தமே ஆனாலும்,  வேண்டாம் என்றே நினைப்பேன். 

*ஆடை அணிகலன்கள் அணிவதில் அவளுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால், ஒருவரையொருவருவர் கட்டுப்படுத்த மாட்டோம். ஒருவர் விருப்பத்தை மற்றவர்கள் மீது திணிக்க மாட்டோம்.

*என் மனைவிக்கு இறை நம்பிக்கை அதிகம் உண்டு. எனக்குக் கிடையாது. அவள் கோயிலுக்குப் போவாள். நான் தடுக்க மாட்டேன்.  நான் கோயிலுக்குப் போவது வீண் என்று நினைப்பேன்; அவள் என்னைக் கட்டாயப்படுத்த மாட்டாள்.

*நான் பல விஷயங்களில் பிடிவாதக்காரன் என்பதால், எனக்கு அளவு கடந்த கோபம் வரும். ஆனால், வாய் மூடி மௌனியாக இருப்பாள். அந்த மௌனமே என்னை அடக்கும் அங்குசமாக இருக்கும்.

*அவள் துணையின்றி ஓர் இரவைக்கூட என்னால் கழிக்க முடியாது. அது என் பலமா, பலவீனமா என்று தெரியவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவளிடம் பொய் பேச மாட்டேன்.

*என் மனைவி யாரை பார்த்தும் பொறாமைப்பட மாட்டாள். யாரை பற்றியும் புறம்பேச மாட்டாள். அந்தக் குணம் எனக்கும் உண்டு. இது எங்கள் இருவருக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை.

*திருமணமானதிலிருந்தே எங்கள் இருவருக்கும் ஒரு லட்சியம் உண்டு. நம் பிள்ளைகள் யாரிடமும் கையேந்தக்கூடாது. நாமும் நம் பிள்ளைகளிடம் எந்தச் சூழ்நிலையிலும் கையேந்தக் கூடாது என்பதுதான் அந்த லட்சியம். அந்த வாழ்க்கையை இறைவன் கொடுத்து விட்டான்.

*என்னை இழந்து என் மனைவி வாழலாம். பிள்ளைகள், பேத்திகள் என அவளுக்கு வாழ்க்கை ஓடிவிடும். அவள் இல்லாவிட்டால், என் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும்.