Published:Updated:

ஒவ்வொரு நொடியையும் கொண்டாடினோம்!

ஒவ்வொரு நொடியையும் கொண்டாடினோம்!
பிரீமியம் ஸ்டோரி
ஒவ்வொரு நொடியையும் கொண்டாடினோம்!

அவள் விகடன் ஜாலி டேகே.குணசீலன் - படங்கள் : சாய் தர்மராஜ், ச.ம.அரவிந்த்

ஒவ்வொரு நொடியையும் கொண்டாடினோம்!

அவள் விகடன் ஜாலி டேகே.குணசீலன் - படங்கள் : சாய் தர்மராஜ், ச.ம.அரவிந்த்

Published:Updated:
ஒவ்வொரு நொடியையும் கொண்டாடினோம்!
பிரீமியம் ஸ்டோரி
ஒவ்வொரு நொடியையும் கொண்டாடினோம்!
ஒவ்வொரு நொடியையும் கொண்டாடினோம்!

வருடம் முழுக்க வீட்டைத் தோளிலும் மனதிலும் சுமக்கும் பெண்களை, ஒரு நாள் முழுக்க மகிழ்ச்சி, உற்சாகம், ஆட்டம், பாட்டம் என கொண்டாடவைக்கும் திருவிழா... அவள் விகடன் மற்றும் வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் வழங்கும் ஜாலி டே! ஜூலை  29 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற இக்கொண்டாட்டம் பவர்டு பை கலர்ஸ் தமிழ், ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், காளீஸ்வரி நிறுவனத்தின் எல்டியா ப்யூர் கோகனட் ஆயில்... அசோசியேட் ஸ்பான்சர் உதயம் பருப்பு வகைகள்.

ஒவ்வொரு நொடியையும் கொண்டாடினோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னதாக, முன்தேர்வுப் போட்டிகள் ஜூலை 26-ம் தேதி குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியிலும், 27, 28-ம் தேதிகளில் பாரத் கலை அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்றன. 29-ம் தேதி, தஞ்சாவூர் பிஎல்ஏ திருமண மண்டபம் அதிகாலை முதலே வாசகிகளின் வரவால் நிரம்பி வழிந்தது. அனைவரின் முகத்திலும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. காலை 10 மணிக்கு நம் தொகுப்பாளர்கள், சின்னத்திரை ஸ்டார் ‘சுட்டி’ அரவிந்த் மற்றும் சன் மியூசிக் ஸ்டார் பார்வதி நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். நம் வாசகிகள் குத்துவிளக்கேற்ற, பரதநாட்டியம், வளைகரங்களின் கரகோஷம் என உற்சாகம் தொற்றிக்கொண்டது.

‘தஞ்சையின் பெருமைகள் என்னவென்று சொல்லுங்கள்’ என சுட்டி அரவிந்த் கேட்டார். பெரிய கோயில், தலையாட்டி பொம்மை, சரஸ்வதி மஹால் நூலகம் என பட்டியலிட்டனர் பெண்கள். கூட்டத்தினரை ‘அழகிய தமிழ் மகள்’, ‘பேரழகி’ என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து போட்டிகளில் பங்கு பெறவைக்க, கச்சேரி களைகட்டத் தொடங்கியது. வாசகி கனகலட்சுமி பல பாடல்களின் இரண்டு வரிகளை மட்டுமே தொகுத்து 15 நிமிடங்களுக்கு மேல் நான்-ஸ்டாப்பாக பாடி அனைவரையும் அசரவைத்தார்.

ஒவ்வொரு நொடியையும் கொண்டாடினோம்!

தனி நடனம், குழு நடனம், தனிப் பாடல், நடிப்பு, டப்ஸ்மாஷ், ரங்கோலி, பெஸ்ட் செல்ஃபி, அடுப்பில்லா சமையல் என பல போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. சின்னத்திரை பிரபலங்கள் வடிவேல் பாலாஜி, சித்ரா, டிஎஸ்கே மற்றும் ஷ்யாம் ஆகியோர் உற்சாகத்துடன் போட்டிகளை நடத்த, வாசகிகளுக்கு `டபுள் தமாக்கா’ மகிழ்ச்சி.

கலர்ஸ் டி.வி சார்பாக நடத்தப்பட்ட போட்டியில், அதில் ஒளிபரப்பாகும் ‘பேரழகி’ சீரியலை குறிப்பிடும் வகையில்,  ‘தஞ்சையின் பேரழகி’ என்ற போட்டி நடத்தப்பட்டது. அந்த சீரியலில் கதாநாயகியாக  நடிக்கும் காயத்ரி, தஞ்சையின் பேரழகியைத் தேர்ந்தெடுக்க, அவருக்கு கலர்ஸ் டி.வி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், நகைகளின் எடைகளை சரியாக கணிக்கும் போட்டி நடத்தி, அதில் சிக்ஸர் அடித்த பெண்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.

ஒவ்வொரு நொடியையும் கொண்டாடினோம்!

காளீஸ்வரி நிறுவனத்தின் எல்டியா ப்யூர் கோகனட் ஆயில் சார்பாக ‘பியூட்டிஃபுல் ஹேர்’ போட்டி நடத்தப்பட்டது. விதவிதமான சிகை அலங்காரங்களில் வந்து பரிசுகளை அள்ளிச் சென்றனர் பெண்கள். காலை மாலை தேநீர், ஸ்நாக்ஸ் மற்றும் மதிய உணவுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நிச்சயப் பரிசும் வரிசைகட்ட, ‘வாவ்’ என்று ஆனந்தமாகினர் வாசகிகள்.

திருச்சியில் இருந்து வந்திருந்த வாசகி நதியா, காலை முதல் தன் விசிலால் அரங்கத்தை அதிரவைத்துக்கொண்டே இருந்தார். ‘எப்பவும் வீடு, குடும்பம் என்றே இருப்போம். இன்னிக்கு எங்க பொறுப்புகள், சுமைகள், கவலைகளில் இருந்தெல்லாம் விடுபட்டு, எங்களுக்கே எங்களுக்காக ஒவ்வொரு நொடியையும் கொண்டாடுறது புத்துணர்வை அளிப்பதாக இருக்கு. இந்தப் புத்துணர்ச்சி, இன்னும் பல மாதங்களுக்கு எங்களை உற்சாகமா இயங்கவைக்கும்’ என்றபடி ஒரு விசில் போட்டார் நதியா.

ஒவ்வொரு நொடியையும் கொண்டாடினோம்!

மிக்ஸி, கிரைண்டர், காஸ் அடுப்பு என மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் கொடுக்கப்பட்டன. பின்னர், அந்த க்ளைமாக்ஸ் நொடி... பம்பர் பரிசான ஃப்ரிட்ஜ், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகிக்கு வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் சார்பாக கொடுக்கப்பட்டதும், அரங்கமே அவரை வாழ்த்தி ஆர்ப்பரித்தது. குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட வாசகிகள் நிகழ்ச்சியின் முடிவில் கலைய மனமில்லாமல் விடைபெற்றுச் சென்றனர்.

‘அவள் எங்களின் தோழி. ‘அவள் ஜாலி டே’ இன்னிக்கு எங்களுக்கு பல புதிய தோழிகளை பரிசா கொடுத்திருக்கு. மெனி தேங்க்ஸ்!’ -  இப்படி வாசகிகள் நம்மிடம் தெரிவித்த  நன்றிகள் நெகிழ்வித்தன.