Published:Updated:

இப்போ மெரினா... அப்போ இல்லை!

இப்போ மெரினா... அப்போ இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
இப்போ மெரினா... அப்போ இல்லை!

இப்போ மெரினா... அப்போ இல்லை!

இப்போ மெரினா... அப்போ இல்லை!

இப்போ மெரினா... அப்போ இல்லை!

Published:Updated:
இப்போ மெரினா... அப்போ இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
இப்போ மெரினா... அப்போ இல்லை!

து சென்னைக்கு 379வது பிறந்தநாள்.    ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22 சென்னை தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1639ஆம் ஆண்டு இதே நாளில்தான் கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்ஸிஸ் டே செயின்ட் ஜார்ஜ் கோட்டையை உருவாக்க நிலம் வாங்கி சென்னை நகரை நிர்மாணித்தார் என்கிறது வரலாறு. 

இப்போ மெரினா... அப்போ இல்லை!

சென்னையின் அடையாளங்களில் பிரதானமானது மெரினா... பொதுமக்களின் சுற்றுலாத்தலம். அரசியல்ரீதீயாக மோஸ்ட் வான்டட் இடமும்கூட. உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை. அது எப்படித் தோன்றியது தெரியுமா?

மெரினாவின் கடற்கரை இப்போது கடற்கரைச் சாலை எங்கிருக்கிறதோ அங்குதான் முன்பிருந்தது.என்பது நமக்கு ஆச்சர்யமளிக்கும் செய்திதானே? சென்னை அப்போது வணிகத்துக்கு முக்கியமான இடமாக இருந்தது. ஆங்கிலேயர்கள் சரக்குகளை ஒரே இடத்துக்குக் கொண்டுவந்தால் அதைச் சந்தைகளுக்குக் கொண்டுசெல்வது வசதியாக இருக்குமென்று கருதியதால், ஒரு கோட்டை தேவைப்பட்டது. அதற்காகத்தான் 1640-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார்கள். அது கடற்கரைக்கு வெகு அருகிலேயேதான் கட்டப்பட்டது. அப்படியிருந்தும் அவர்களுக்கு ஒரு சிக்கலிருந்தது. சென்னையின் கடலோரம் ஆழமற்றதாக இருந்தது. அது கப்பல்கள் கரை வரைக்கும் வருவதைத் தடைசெய்தது. கப்பல்கள் இரண்டு மைல் தொலைவிலேயே நங்கூரமிட்டு நிற்க வேண்டியிருந்தது. சரக்குகள் கட்டுமரங்களில் கரைக்குக் கொண்டுவரப்பட்டன. சென்னையைச் சுற்றியிருந்த கடலோரங்களில் நீரோட்டத்தின் வேகம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால் படகுகள்கூடச் சிரமப்பட்டே சென்றுவந்தன. இதனால், இங்கிலாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட சரக்குகளில் பாதிக்கும் மேலாக இந்தக் கடைசி இரண்டு மைல்களில் வீணாகிக்கொண்டிருந்தன. அந்தப் பகுதியில் மோதும் வேகமான அலைகள்தான் அதற்குக் காரணமென்று ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்டார்கள். அலைமுறிச் சுவர்களைக் கட்டி செயற்கையாகத் துறைமுகம் அமைக்க வேண்டுமென்று 1769-ல் கோட்டையைச் சேர்ந்த வணிகக் குழுவில்  இருந்த வாரன் ஹாஸ்டிங் பரிந்துரைத்தார். கடலோரத்தில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஆழப்படுத்துவார்கள். அங்கு மீண்டும் மணல் சேர்ந்து ஆழம் குறையக்கூடாது என்பதற்காக, அங்கிருந்து சிறிது தூரத்தில் கடலுக்குள் சுவர் எழுப்பி அந்தப் பகுதியில் மட்டும் அலை  வந்து கரையை மோதாமலிருக்குமாறு செய்வார்கள். துறைமுகம் அமைப்பதற்கு இயற்கையாகவே ஆழமான கடலோரப் பகுதியைத்தான் தேர்வுசெய்வார்கள். இங்கு அப்படியில்லாததால் இப்படிச் செய்ய வேண்டியிருந்தது.

அவரது ஆலோசனையை அப்போது மறுத்துவிட்டார்கள். ஆனால், 1861-ல் மீண்டும் துறைமுகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப் பட்டது. அப்போது துறைமுகம் கட்டுவதற்கு ஆகும் செலவாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது. தொடர்ச்சியான முயற்சிகளில் பலவும் தோல்வியடைந்து இறுதியாக 1876-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் இரண்டு கிலோ மீட்டர் அளவுக்குக் கரையோரக் கடல்பகுதியை ஆழப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து கடலுக்கடியில் நீரோட்டத்தின் வேகத்தைத் தடைசெய்வதற்காகச் சுமார் 480 அடி நீளம் கொண்ட அலைமுறிச் சுவர் எழுப்பப்பட்டது. அதன்மூலம் அங்கு 17 பெரிய கப்பல்கள் நிறுத்துவதற்குத் தகுந்தவாறு வசதி செய்தார்கள். அந்த எண்ணிக்கை வருங்காலங்களில் அதிகமாகும் வகையில் மேம்படுத்தப்பட்டது. இந்த அலைத்தடுப்புச் சுவர்களின் மூலமாக 170 ஏக்கர் பரப்பளவிற்கு அலைகள் எழும்பாமலிருக்கச் செய்ய முடிந்தது. இதற்கு அப்போது ஆன செலவு 5,65,000 ரூபாய்.

வங்கக் கடல் வடக்குநோக்கிய நீரோட்டம் கொண்டது. மெரினாவில் நின்று பார்த்தால் அலைகள் நேரடியாகக் கரையை மோதாமல் வலதுபுறமிருந்து சிறிது சாய்வாகவே வந்து மோதுவதைப் பார்க்கலாம். உதாரணமாக, ஒரு செருப்பை அலையில் போட்டீர்களென்றால் அது நேரடியாக உங்களிடம் திரும்பி வராமல் சாய்வாக உங்களுக்கு இடதுபுறமாகச் சென்று கரையேறும். இப்படியாகத் தெற்குக் கடற்கரைகளிலிருந்து கொண்டுவரும் மணல் படிவுகளைச் சென்னைக் கடலோரம் முழுவதும் பரவலாகக் கரையில் ஒதுக்கிவிட்டுச் செல்லும். தெற்கிருந்து வடக்கே கொண்டுவரப்படும் மணல் படிமங்கள் நீரோட்டத்தோடு பயணித்து மெரினா வரை சமமாக வருகின்றது. அதற்கு அடுத்ததாக துறைமுகத்துக்காகக் கட்டப்பட்ட அலைதடுப்புச் சுவர்களிருப்பதால் அதைக் கடந்து செல்ல முடியாமல் அலைகள் சுமந்துவந்த மணல் மெரினாவிலேயே படியத் தொடங்கிவிட்டது. இதுவே சிறிதாக இருந்த மெரினாவை ஆசியா விலேயே பெரிய கடற்கரையாக மாற்றியது.

சென்னைத் துறைமுகத்தில் அலைகளைத் தடுப்பதற்காகக் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்களில் மோதும் அலைகள் சுழற்சி முறையில் வடக்குநோக்கிச் செல்லும். பொதுவாக அலைகள் தாங்கள் கிளம்பும் இடத்திலிருந்து கரையிலிருக்கும் மணல் படிமங்களையும் சிறிதளவு கொண்டுவந்து வேறோர் இடத்தில் சேர்த்துவிடும். ஆனால், இங்கு துறைமுகத்தில் கட்டப்பட்டிருக்கும் அலைத்தடுப்புச் சுவர்கள் மணலைத் தடுத்து மெரினாவிலேயே குவித்துவிடுகின்றன. அதோடு அலைகளின் வேகத்தையும் அதிகப்படுத்துகின்றன. அதனால் அங்கிருந்து எடுத்துச்செல்ல எதுவுமில்லாமல் வெறுங்கையோடு செல்லும் அலைகள் துறைமுகத்துக்கு அடுத்ததாக இருக்கும் ராயபுரம், காசிமேடு, எண்ணூர்க் கடற்கரை களிலிருக்கும் மணலை அள்ளிச் செல்கின்றது. இதனால் அங்கு மணல் அரிப்பு ஏற்படுகின்றது.

“துறைமுகம் அமைப்பதற்காக அலைமுறிச் சுவர்கள் கட்டப்பட்டன. அலைகள் கொண்டு வரும் மணலை அந்தச் சுவர் தொடர்ந்து சுமந்துசெல்ல விடுவதில்லை. இதனால் வடக்குநோக்கிச் செல்லும் அலைகள் மணலை மெரினாவிலேயே விட்டுச்செல்கின்றன. அதனால்தான் மெரினா வளர்ந்துகொண்டி ருக்கிறது. சுவரைக் கடந்துசெல்லும் அலைகளில் படிவுகளில்லாததால் அங்கிருக்கும் கரையோர மணலை அரித்தெடுத்துக் கொண்டு மேலும் வடக்குநோக்கிப் பயணிக்கின்றன” என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலவியல் பேராசிரியரான எல். இளங்கோ.

1884-ம் ஆண்டில் பிரோமனேட் (Promenade) என்ற கடலோர உலவும் சாலையை கிராண்ட் டஃப் என்பவர் கட்டும்போது அந்தச் சாலைக்கு (அதாவது தற்போதைய கடற்கரைச் சாலை) வெகு அருகிலேயே மெரினாவின் கரை இருந்தது.

“1960-களில் பள்ளி விடுமுறையின்போது மெரினாவே எனக்குப் பொழுதுபோக்கு. அப்போ தெல்லாம் சாலையிலிருந்து அலைகளிடம் செல்ல மூன்று நிமிடங்கள் நடந்தாலே போதும். ஆனால் இப்போது குறைந்தது 15 நிமிடங்கள் ஆகின்றன. பீச் மணலும் இப்போதுபோல் நடக்கச் சிரமமாக இருந்ததில்லை. கரையோரம் நின்று வடக்கே பார்த்தால் அப்போதெல்லாம் துறைமுகம் தெரியாது. ஆனால், இப்போது அப்படியில்லை. மெரினாவின் இந்த அபரிமித வளர்ச்சிக்குத் துறைமுகத்தின் கடலடிச் சுவர்களைத் தாண்டி மணல் படிவுகளை அலைகளால் சுமந்து செல்லமுடியாததே காரணம். அதனால் அனைத்து மணலும் மெரினாவிலேயே குவிந்து கொண்டிருக்கின்றன” என்கிறார் புவியியல் பேராசிரியை விஜயா.

தொடர்ச்சியாக மெரினாவின் நீளம் அதிகமாகி வருவதால் கூவம் கழிமுகப்பகுதியை மணல் திட்டுகள் அடைத்துக் கொண்டேயி ருக்கின்றன. இதைப் போலவே அடையாற்றின் கழிமுகப்பகுதியும் கடற்கரை மணல் அதிகமாகப் படிவதால் அடைப்பு ஏற்படும் அபாயத்திலுள்ளது. தமிழக அரசு தொடர்ச்சியாகக் கழிமுகப் பகுதிகளைத் தூர்வாரி மணல் திட்டுகளை அகற்றி ஆழப்படுத்தி ஆற்றுநீர் கடலில் சேர்வதற்கேற்ப வசதி செய்துகொண்டு தானிருக்கிறது. இருப்பினும் தூர்வாருவது மட்டுமே இதற்கான தீர்வில்லை. சென்னைக் கடலோரத்தின் முக்கியக் கழிமுகங் களைக் காக்க அறிவியல்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியம்.

மெரினா சென்னையின் அடையாளம். ஆபத்தாகிவிடக் கூடாது.

க.சுபகுணம் - படம்: ஆ.முத்துக்குமார்