Published:Updated:

ஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்!

ஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்!

அழகான சாதனை

ஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்!

அழகான சாதனை

Published:Updated:
ஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்!

கின்னஸ் உலக சாதனைக்காக  ‘சன்ஸ்க்ருதி’ அமைப்பின் பெண்கள் பலர் சேர்ந்து முழுக்க துணியால் செய்த பொம்மைகளை சென்னையில் செப்டம்பர்  8, 9-ம் தேதி களில் காட்சிப்படுத்தவிருக்கின்றனர். ஒன்றல்ல, இரண்டல்ல... மொத்தம் 1,500 பொம்மைகள்! கிருஷ்ணர், ராதை, ஆண்டாள், ரங்கமன்னார், பலவிதமான அலங்காரத்தில் மணப்பெண்கள், மணமக்கள் ஊர்வலம், திருமணக் காட்சி, பரதம், ஒடிசி, கதக், குச்சிபுடி, கதகளி என அனைத்து மாநில நடனமாடும் பெண்கள்... இப்படி வகைக்கு ஒன்றாக பொம்மைகளின் அணிவகுப்பு நீண்டுகொண்டே போகிறது.

சென்னை போரூரைச் சேர்ந்த ரூபா சஞ்சய், ‘சன்ஸ்க்ருதி’ உருவான கதையை விவரிக்கிறார்... ‘`காகிதக் கூழில் பொம்மைகளைச் சுலபமா செய்றதுக்கு நானே ஒரு வழி கண்டுபிடிச்சு, அதை வீடியோ பண்ணி ஃபேஸ்புக்ல போட்டேன். அதை ஏராளமானவர்கள் பார்த்து, ஷேர் பண்ணி, பெரிய குரூப்பே ஃபார்ம் பண்ற அளவுக்கு வந்துடுச்சு. இப்ப அந்த குரூப்ல 2,700 பெண்கள் இணைஞ்சிருக்காங்க. எல்லோரும் அவங்கவங்க தயாரிப்புகளை ஃபேஸ்புக்கில் போட்டாங்க. இது பலருக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. அதைத் தாண்டி வெளியுலகத்துக்கும் இதைப் பத்தித் தெரியணும் என்றால், இவங்களுடைய தயாரிப்புகள் எல்லாத்தையும் ஒரு காட்சியாக வைக்கணும்னு நினைச்சோம். அப்போதான் இந்தக் கலையைக் கத்துக்க நினைக்கிறவங்களுக்கும் உபயோகமாக இருக்கும். அதுக்காக ஆரம்பிச்ச அமைப்புதான் ‘சன்ஸ்க்ருதி’ '’ என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் ரூபா.

ஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்!

‘சன்ஸ்க்ருதி’ அமைப்பின் தலைவர், 70 வயதைத் தாண்டிய கல்யாணி தேவநாதன். முக்கியப் பொறுப்புகளில் சுதா ராமன், ரூபா சஞ்சய், அனுராதா நிஷா, ஸ்ரீவித்யா மோகன், கார்த்தியாயினி, டாக்டர் அன்புசெல்வி, சுகுணா மற்றும் ஆண்டாள் ஆழ்வான் ஆகியோர் இருக்கிறார்கள். அனைவருமே ஒவ்வொரு வகை பொம்மை செய்வதில் கைதேர்ந்தவர்கள். ஆர்டரின் பெயரில் இவர்களின் பொம்மைகள் அமெரிக்கா போன்ற அயல்நாடுகளுக்கும் பறக்கின்றன.

`` ‘இவ்வளவு பண்ணின நாம ஏன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறக்கூடாது’னு அது சம்பந்தமான எல்லா முயற்சிகளையும் முன்னெடுத்தோம். எங்களுக்கு கின்னஸ் அமைப்பினர் கொடுத்திருக்கிற டைட்டில் ‘டெக்ஸ்டைல் டால்ஸ்’. அதாவது துணியை மட்டுமே வெச்சு செய்யும் பொம்மைகள். ஏற்கெனவே இந்த கேட்டகிரியில் 1,000 பொம்மைகள் செய்த ஒரு சாதனை இடம்பெற்றிருக்கு. அதனால நாங்க 1,500 பொம்மைகள் செய்து அந்த சாதனையை முறியடிக்கத் திட்டமிட்டிருக்கோம்’’ என்கிறார் ‘சன்ஸ்க்ருதி’யின் மற்றோர் உறுப்பினர் கார்த்தியாயினி. இவர் நங்கநல்லூரில், கையால் தயாரிக்கப்படும் திருமணத் தாம்பூலப் பைகள் மற்றும் ரிட்டர்ன் கிஃப்ட்டுகளை (எக்கோ ஃப்ரெண்ட்லி) விற்பனை செய்யும் கடை நடத்துகிறார்.

‘‘சில வருஷங்கள் முன்னர் வரை நான் ஐசிஐசிஐ வங்கியில் சீஃப் மேனேஜர். எப்போ பார்த்தாலும் நம்பர்களுடனேயே வாழ்கிற மாதிரி ஓர் உணர்வு. டக்குன்னு வேலையை விட்டுட்டேன். எல்லோரும் ‘யாராவது இப்படி லட்சக்கணக்கில் சம்பளம் வர்ற வேலையை விட்டுட்டு பொம்மை செய்வாங்களா’ன்னு ஆச்சர்யமா பார்த்தாங்க. ஆனா, எனக்கு இதில் ஆத்ம திருப்தி கிடைக்குது. நாலு பேரை வெச்சு பொம்மைகள் செய்ற அளவுக்கு ஆர்டர் வருது’’ என்கிறார் கார்த்தியாயினி.

சன்ஸ்க்ருதியின் இணைச் செயலர் அனுராதா நிஷா, ஐஐஎம் பட்டதாரி. ஐ.டி நிறுவன வேலையை உதறிவிட்டு பொம்மைகள் செய்து கொண்டிருக்கிறவரின் ஸ்பெஷல், வினைல் பொம்மைகளில் அலங்காரம் செய்வது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்!

சீனியர் சிட்டிசன் சுகுணா, கணவருடன் சேர்ந்து பொம்மைகள் செய்கிறார். பாசிமணியில் மடிசார் கட்டிய பொம்மையில் இவருடைய கலையின் நேர்த்தி கண்ணைக் கவர்கிறது. அமைப்பின் துணைத் தலைவர் சுதா ராமன், பிரபல மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மணிப்புரி பொம்மைகள் இவருடைய ஸ்பெஷல். ஆண்டாள், பேப்பர் மெஷ் பொம்மைகளில் கலக்கிக்கொண்டிருக்கிறார். ஸ்ரீவித்யாவின் கைவண்ணம், ஷில்பகார் பொம்மைகள். கடலூரில் குழந்தைகள் நல நிபுணராக இருக்கும் அன்புசெல்வி, மக்காச்சோளத் தட்டை, சோளத்தின் மேல் தோல்களைப் பதனிட்டு, அவற்றில் பொம்மைகள் செய்கிறார்.

`` ‘நீங்க செய்து கொடுத்த ராதாகிருஷ்ணர் முகத்தில்தான் காலையில் விழிப்பேன்’னு வாடிக்கையாளர் சொல்ற வார்த்தைகள் தர்ற உணர்வுக் கும் நிறைவுக்கும் எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது’’ என்று கண்கள் மலரக் கூறுகிறார் அனுராதா நிஷா.

கல்யாண ஆர்டர்கள், தீமாட்டிக் கொலு என்பதைத் தாண்டி, சமுதாய நோக்கிலும் இவர்களின் சிந்தனை விரிந்திருக்கிறது. ‘`இந்தக் கலையில் ஆர்வம் இருக்கும் திருநங்கைகளுக்கு இதைச் சொல்லிக்கொடுத்து, வொர்க் ஷாப் வைக்கிறதுக்கு உதவ நினைக்கிறோம். பொம்மை பிசினஸ் பண்ற எங்க உறுப்பினர்களிடம் வேலைக்கு அமர்த்தி அவங்களுக்கு வருவாய்க்கு ஏற்பாடு செய்ற திட்டமும் இருக்கு’’ என்கிற இந்தக் குழு, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வாழ்த்துவோம்!

- பிரேமா நாராயணன்

படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்