இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளில் குளறுபடி நிகழ்ந்ததால், மாணவர்களுக்குக் கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வழக்கு போட்டார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, 49 கேள்விகளுக்கு தலா நான்கு மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்களைத் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்று தீர்ப்பு வழங்கியது.

‘இப்படி மதிப்பெண் கொடுத்தால், பெரும் குழப்பம் வரும்’ என உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ வழக்கு போட்டது. ஆகஸ்ட் 30-ம் தேதி இந்த வழக்கு விசாரணையில், ‘கருணை மதிப்பெண் வழங்க முடியாது’ என்று சொல்லி, தமிழக மாணவர்களின் கடைசி நம்பிக்கையையும் தகர்த்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், இந்த வழக்கு குறித்துத் தொடர்ந்து உரையாடி வருபவரும், இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் இருந்தவருமான கல்வியாளர் ராம்பிரகாஷிடம் பேசினோம்.

‘‘கேள்விகளின் தமிழாக்கம் எந்தவிதத்தில் சரியில்லை?’’

‘‘தமிழ்வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்கள் சிறுநீர் நாளம் என்றுதான் படித்திருப்பார்கள். ஆனால், கேள்வியில் அதற்குப் பதிலாக ‘யுரேட்டர்’ என்று ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். சிறுத்தைக்கு ‘சீட்டா’ என்றும், வௌவாலுக்கு ‘வவ்வனவால்’ என்றும், என்னவென்று பிரித்தறிய முடியாத அளவுக்கு அவர்களின் தமிழ்ப்படுத்தல்கள் இருந்தன. இப்படிப் பல வகைகளில் 68 பிழைகள் வினாத்தாளில் இருந்தன. இதனால் 49 கேள்விகள் தவறுதலாக இருந்தன. ‘இந்தக் குளறுபடிக்குத் தமிழக மொழிபெயர்ப்பாளர்கள்தான் காரணம். தமிழக அரசு பரிந்துரைத்த அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளைத் தமிழில் மொழிபெயர்த்தனர்’ என்று சி.பி.எஸ்.இ சொன்னது. ‘இவை டைபோகிராபிகல் எர்ரர்’தான் என மிகச்சாதாரணமாகச் சொல்லிவிட்டனர். இதை, ஏதோ தெரியாமல் நடந்துவிட்ட தவறு என்று சொல்ல முடியாது. ‘இனி ஆங்கிலத்தில்தான் நீட் தேர்வு எழுத வேண்டும்’ என்பதற்காக உருவாக்கப்பட்ட மறைமுக நெருக்கடியே இது.’’

‘‘உச்ச நீதிமன்றத்தில் இந்த விவாதம் எப்படிச் சென்றது?’’

சி.பி.எஸ்.இ சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங் வாதிடும்போது, ‘இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவற்றை ஆங்கிலத்தில்தான் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். மருத்துவம் படிக்க வேண்டுமென்றால் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்’ என்றார். ‘பிறகு எதற்காகத் தமிழில் கேள்விகள் கேட்டீர்கள்?’ என்றால் அவரிடம் பதில் இல்லை. ‘பிற நாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்லும்போது அங்குள்ள மொழிகளைக் கற்றுக்கொள்கிறீர்களே, அதுபோல ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்ளலாம்’ என்றார் அவர். உச்ச நீதிமன்றத்திலேயே இப்படியான எதிர்வினைகளைக் கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தது. தாய்மொழிக் கல்வியில் படித்த எத்தனையோ பேர் சிறந்த மருத்துவர்களாக இருந்தார்கள்; இருக்கிறார்கள். தமிழ்நாடே அதற்குச் சிறந்த உதாரணம். மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் நம்மைவிட முன்னேறிய நாடுகளாக அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்றவை உள்ளன. அந்த நாடுகளின் மாணவர்கள் உயர்கல்வியைத் தங்கள் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.’’

‘‘இந்தக் குளறுபடியால் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?’’

‘‘கிட்டத்தட்ட 800 மாணவர்கள் இதில் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 48 மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் இந்த மாணவர்களுக்குத் தனியாக கவுன்சலிங் வைத்துச் சேர்க்கை நடத்த வேண்டும். இந்தக் கோரிக்கையைத்தான் உச்ச நீதிமன்றத்தில் வைக்க இருக்கிறோம். செப்டம்பர் 26-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது இதைக் கேட்போம். அது ஏற்கப்படாவிட்டால், மாநில மொழிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இனி உயர்கல்வி என்பது பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். நாளடைவில் தாய்மொழிவழிக் கல்வி என்பதே இருக்காது. கிராமப்புற மற்றும் விளிம்புநிலை குடும்பங்களிலிருந்து வருங்காலத்தில் ஒருவரும் மருத்துவர் ஆக முடியாது.’’

‘‘தமிழக அரசு இதில் உங்களுக்கு உதவவில்லையா?’’

‘‘எங்கள் வருத்தம் என்னவென்றால், இந்த வழக்கில் தமிழக அரசு அக்கறை காட்டவே இல்லை. ‘நாங்கள் நீட்டை எதிர்க்கிறோம். அதனால் நீதிமன்றத்துக்கு வரமாட்டோம்’ எனச் சொல்லிவிட்டனர். இது பொறுப்பிலிருந்து நழுவும் போக்கு. இந்த வழக்கைப் பொறுத்தவரை, ‘நீட் தேவையா, இல்லையா’ என்பது வாதமல்ல. தமிழக அரசு இனியாவது இதில் தலையிட்டு நம் மாணவர்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும். இல்லாவிட்டால், இன்னும் பல அனிதாக்களை நாம் இழக்க நேரிடும்.’’

- தமிழ்ப்பிரபா
படம்: ப.பிரியங்கா
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

அந்த நான்கு பேர்!

தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2,447 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. ஆனால், இந்த ஆண்டு தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து எம்.பி.பி.எஸ் சேர்ந்திருக்கும் மாணவர்கள், நான்கு பேர் மட்டுமே! நீட் தேர்வை எழுதுவதற்கு பள்ளியில் படிப்பதையும் தாண்டி பல மாதங்கள் சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது என்பதற்கு இன்னொரு புள்ளிவிவரம் ஆதாரமாக உள்ளது. இந்த ஆண்டு தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களில் 1,680 பேர் 2017-ம் ஆண்டில் பிளஸ் 2 பாஸ் செய்தவர்கள். இவர்கள் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து ஓராண்டு படித்து, அதைவைத்து நீட் தேர்வு எழுதி அட்மிஷன் பெற்றுள்ளனர்.