Published:Updated:

முக்குளித்து முத்தெடுத்த மூன்று நோபல் பெண்கள்!

முக்குளித்து முத்தெடுத்த மூன்று நோபல் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
முக்குளித்து முத்தெடுத்த மூன்று நோபல் பெண்கள்!

வாவ் பெண்கள்

முக்குளித்து முத்தெடுத்த மூன்று நோபல் பெண்கள்!

வாவ் பெண்கள்

Published:Updated:
முக்குளித்து முத்தெடுத்த மூன்று நோபல் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
முக்குளித்து முத்தெடுத்த மூன்று நோபல் பெண்கள்!

2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள், சமீபத்தில் நார்வே மற்றும் ஸ்வீடன் நோபல் கமிட்டிகளால் அறிவிக்கப் பட்டன. அமைதிக்கான நோபல் பரிசை, நடியா முராத் மற்றும் டென்னிஸ் முக்வேகய் ஆகியோருக்கு அளிப்பதாக நார்வே நாட்டுக் குழு அறிவித்தது.

போர் மற்றும் கடின காலங்களில் வன்புணர்வை ஆயுதமாகப் பயன் படுத்துவதைத் தடுக்கும் பணிக்குத்தான் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு. பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான செயற்பாட்டாளரான நடியாவின் கதை, கல்மனதையும் கரைக்கக்கூடியது.

2014-ம் ஆண்டு வட இராக்கின் சிஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்த கோஜோ எனும் சிறு கிராமத்தில் 19 வயது மாணவியாக நடியா வாழ்ந்துவந்தார். 2014 ஆகஸ்ட் 15, இவரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. ``என் உலகம் மிகவும் சிறியது. வரலாறு படிக்க ஆசைப்பட்டேன். முதலில் ஐ.எஸ் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன். அன்று மதியம் எங்கள் ஊரில் உள்ள அனைவரையும் பள்ளியில் கூடச்சொன்னார்கள் ஐ.எஸ் அமைப்பினர். பெண்கள் தனியாக, ஆண்கள் தனியாகப் பிரித்து அழைத்துச் சென்றனர். ஒரு மணி நேரத்தில் 320 ஆண்களைச் சுட்டுக்கொன்றனர். என் தாய் மற்றும் ஆறு சகோதரர்கள் அன்று கொல்லப்பட்டார்கள்’’ என்று பின்னால் ஐ.நா சபையில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார் நடியா.

முக்குளித்து முத்தெடுத்த மூன்று நோபல் பெண்கள்!

`அதன் பிறகு நடந்தது கொடும்கனவு' என்கிறார் நடியா. மூன்று மாதக் காலம் மொசூல் நகரில் வதைமுகாமில் அடைக்கப் பட்டு, பாலியல் வன்புணர்வுக்குள்ளானார். பாலியல் அடிமைகளாக இருந்த யாசிதி மற்றும் குர்து இளம்பெண்கள், ஐ.எஸ் தீவிரவாதிகளால் சந்தைகளிலும், சமூக ஊடகங்களிலும் ஏலம்விடப்பட்டனர். அதிலிருந்து தப்பிக்க முகத்தை பேட்டரி ஆசிட் கொண்டு தேய்த்தும், தலைமுடியைக் கோரமாக்கிக்கொண்டும் பெண்கள் நின்றனர். அவர்கள் முகங்களைக் கழுவி அழைத்துச் சென்றனர் தீவிரவாதிகள்.

`சிலர், பாலங்களிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். பலர், மணிக்கட்டுகளை அறுத்துத் தற்கொலை செய்துகொண்டனர். நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் மாடி அறை முழுவதும் ரத்தத் தீற்றலாக இருந்தது. நான் தற்கொலை செய்துகொள்ள விரும்பவில்லை. அவர்களாகவே என்னைக் கொல்லட்டும் என்று என் சாவுக்காகக் காத்திருந்தேன்’ என்று பின்னாளில் தன் சுயசரிதைப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் நடியா.

ஷரியா கோர்ட் ஒன்றில் ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவனால் `வாங்கப் பட்ட’ நடியா, அவனது வீட்டில் சிறை வைக்கப்பட்டார். அங்கிருந்து ஒருமுறை தப்ப முயல, மயக்கம் வரும் வரை ஆறு ஐ.எஸ் வெறியர்களால் வன்புணர்வு செய்யப்பட்டார். பயங்கரவாதி ஒருவன், ஞாபகமறதி காரணமாக வீட்டுக்கதவை சரியாகப் பூட்டாமல் சென்றுவிட, தப்பி ஓடி பக்கத்து வீட்டில் தஞ்சம் புகுந்தார் நடியா. அதன் பிறகு அந்தக் குடும்பத்தின் உதவியால் ருவாங்கா அகதிகள் முகாமை அடைந்தவர், அங்கு ஒரு கன்டெய்னரில் வசித்துவந்தார். பிப்ரவரி 2015-ல் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு செய்தி அமைப்பிடம் தன் கதையை முதன்முதலில் சொன்னார் நடியா. ஜெர்மனி செல்ல, முகாமிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட
1,000 பேரில் நடியாவும் ஒருவர்.

2015  டிசம்பர் 18 அன்று ஐ.நா பாது காப்பு கவுன்சலின்முன் தன் வலிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார் நடியா.  `ஆள் கடத்தல், பாலியல் அடிமைகள்’ குறித்து நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒருவர், பாதுகாப்பு கவுன்சலில் பேசியது அதுவே முதன்முறை. செப்டம்பர் 2016-ல் ஐ.நா முயற்சியாக ஐ.எஸ் தலைவர்களின் மீதான சர்வதேச சட்ட நடவடிக்கை தொடங்கியபோது, சட்ட நடவடிக்கை கிளையன்ட்டாக நடியாவை நியமித்தது ஐ.நா. இதன் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்ட நடியா, தொடர்ந்து பல தளங்களில் குர்து-யாசிதி மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக `நடியாஸ் இனிஷியேட்டிவ்’ என்ற அமைப்பைத் தொடங்கி பணியாற்றிவருகிறார். பெண்கள் மற்றும் ஆள் கடத்தலுக்கு எதிரான ஐ.நா-வின் முகமாக இயங்குகிறார். பெண்களுக்கு எதிரான ஐ.எஸ் அமைப்பின் கொடுமைகளை சாட்சியங்களாகச் சேகரித்துவரும் நடியா, சிஞ்சர் பகுதியின் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.

ஜூன் 2017-ல் சொந்த ஊர் திரும்பிய நடியா, தன் உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தலையும் மீறி மீள் கட்டமைப்பு மற்றும் குடியமர்வுப் பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார். `தி லாஸ்ட் கேர்ள்’ என்று பெயரிடப்பட்ட இவரது சுயசரிதைப் புத்தகம், உலகமெங்கும் பரபரப்பாக விற்பனையாகிவருகிறது. அமைதிக்கான பரிசை, வரும் டிசம்பர் மாதம் ஸ்டாக்ஹோம் நகரில் இவருக்கு வழங்கி கெளரவிக்கவுள்ளது நோபல் கமிட்டி.

முக்குளித்து முத்தெடுத்த மூன்று நோபல் பெண்கள்!

ம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இயற்பியல் துறைக்கான நோபலை இரு வேறு ஆய்வாளர்களுடன் பகிரப்போகிறார் ஒரு பெண். டோன்னா ஸ்ட்ரிக்லேண்ட், இயற்பியலுக்காக நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண். இவருக்கு முன் 1903-ம் ஆண்டு மேடம் கியூரியும் 1963-ம் ஆண்டு மரியா கொப்பார்ட் மேயரும் இந்தப் பரிசை வென்றிருக்கிறார்கள். கனடாவின் ஓண்டாரியோ நகரில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் டோன்னா, லேசர் கதிர்கள் குறித்த அவரது ஆய்வுக்காக நோபல் பெறுகிறார். இவரது ஆய்வு மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளில் பெரும் மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது.

வேதியியல் துறைக்கான நோபலைப் பகிர்ந்துகொள்ளப்போகும் ஃப்ரான்செஸ் அர்னால்டு, அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். என்சைம்கள் பற்றிய ஆய்வுக்காக அவருக்கு நோபல் வழங்கப்படுகிறது. வேதியியல், பயோ-கெமிஸ்ட்ரி, பயோ-இன்ஜினீயரிங், மாலிக்யூலர் பயாலஜி, மைக்ரோ பயாலஜி எனப் பல துறை அறிவுகொண்ட ஃப்ரான்செஸ், சாதாரண மெக்கானிக்கல் இன்ஜினீயராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். இப்போது புரத இன்ஜினீயராக வலம்வருகிறார்.

முக்குளித்து முத்தெடுத்த மூன்று நோபல் பெண்கள்!

``இயற்கை, நமக்குக் கிடைத்த பெரிய கொடை. தன்னைத் தானே புதிய என்சைம்கள்கொண்டு சரிசெய்யும் திறமை இயற்கைக்கு உண்டு. இயற்கையின் அதே டிசைனைத்தான் நான் பிரதி எடுக்கிறேன்” என்று கூறுகிறார் ஃப்ரான்செஸ்.

- நிவேதிதா லூயிஸ்