Published:Updated:

கிறிஸ்துமஸ் பண்டிகையில் முளைப்பாரி ஊர்வலம்! மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய தூத்துக்குடி பெண்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையில் முளைப்பாரி ஊர்வலம்! மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய தூத்துக்குடி பெண்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகையில் முளைப்பாரி ஊர்வலம்! மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய தூத்துக்குடி பெண்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம், தொழில் சிறக்க நேர்த்திக்கடனாகவும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், தூத்துக்குடியில்  பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகச் சென்று கடலில் கரைத்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையில் முளைப்பாரி ஊர்வலம்! மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய தூத்துக்குடி பெண்கள்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள், பிரார்த்தனைகள் நடைபெற்றன. வீடுகளிலும், இயேசு பாலன் பிறப்பை முன்னிட்டு குடில்கள் அமைத்திருந்தனர்.

   இந்துக் கோயில்களில், திருவிழாக்களின்போது தங்களின் பிராத்தனைகள் நிறைவேற வேண்டி, பெண்கள் கும்மிப்பாடல்கள் பாடி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அவற்றை ஆறு, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளில், கடலில் கரைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர், சிலுவைப்பட்டி, சவேரியார்புரம், தருவைகுளம், ராஜபாளையம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்துக் கோயில்களின் திருவிழாக்களில்  நடத்தப்படுவதுபோலவே  கும்மிப் பாடல்கள் பாடி,  முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகச்சென்று  கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடினர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையில் முளைப்பாரி ஊர்வலம்! மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய தூத்துக்குடி பெண்கள்

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், "கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 7 நாள்களுக்கு முன், கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் மண்தொட்டிகளில்  நவதானியங்களை விதைத்து வளர்ப்போம். கிறிஸ்துமஸ் அன்று, அவற்றை தேவாலயத்தில் வைத்து ஆராதனை செய்து, பிரார்த்தனை செய்வோம்.

கிறிஸ்துமஸ் பண்டிகையில் முளைப்பாரி ஊர்வலம்! மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய தூத்துக்குடி பெண்கள்

சில பகுதிகளில் அவரவர் வீடுகளிலேயே மண்தொட்டியில் முளைப்பாரி  வைப்பார்கள். கிறிஸ்துமஸ் அன்று சர்ச்சுக்கு எடுத்து வருவார்கள். அன்று மாலையோ அல்லது அதற்கு அடுத்த நாள் காலையிலோ, பெண்கள் முளைப்பாரித் தொட்டியை வீதிகள் வழியாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பார்கள். முளைப்பாரி, செழுமையின் அடையாளம். கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து நடப்பவை நல்லதாக இருக்க வேண்டும் எனவும், மீன்பிடித்தல் தொழில் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் இயேசு கிறிஸ்துவுக்கு செலுத்தும் காணிக்கை" என்றனர்.

 மேளதாளம் முழங்க, பெண்கள் முளைப்பாரியைத் தூக்கிச் சென்றபோது,  ஊர்வலத்தின் முன் இளைஞர்கள் களியல் ஆட்டம், சிலம்பாட்டம் ஆடியபடிச் சென்றனர். இந்த ஊர்வலம் கடற்கரைக்குச் சென்றதும், அங்கு கும்மிப் பாடல்களைப் பாடி முளைப்பாரியை கடலில் கரைத்தனர்.