Published:Updated:

தமிழக கோவில்களைப் பாதுகாக்க கமிட்டி வேண்டும்' - பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

தமிழக கோவில்களை பாதுகாக்க கமிட்டி அமைக்க வேண்டும் பொன்னர் வேண்டுகோள் !

தமிழக கோவில்களைப் பாதுகாக்க கமிட்டி வேண்டும்' - பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
தமிழக கோவில்களைப் பாதுகாக்க கமிட்டி வேண்டும்' - பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழு பொன் விழா மாநாடு மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழு மாநிலத் தலைவர் தெய்வ பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மேடையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ``ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழு ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அதில் ஆலய சொத்துகளைப் பாதுகாப்பது, பக்தர்களின் நலன்களைக் கருதி அவர்களின் சிரமங்களைக் குறைப்பது உள்ளிட்டவையும் அடங்கும்.

1986-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள மொத்த கோயில் சொத்துகள் 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கராக இருந்தது. அந்தச் சொத்துக்கள் 30 ஆண்டுகள் கழித்து தற்போது 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கராக சுருங்கியது, சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் கணக்கில் வராமல் போய்விட்டது. இந்த 50,000 ஏக்கர் நிலம் எங்கே போனது. தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் 38,000 கோயில்கள் உள்ளன. தனியாரிடம் பல லட்சம் கோயில் உள்ளது. அந்தக் கோயில்களுக்கான சொத்துகள், பொருள்கள், சிலைகளைக் கணக்கெடுக்க அந்த, அந்தப் பகுதி இந்து பெரியவர்கள் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். சிலை மீட்புக் குழு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எனது தனிப்பட்ட வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று பேசி முடித்தார். மாநாட்டில் ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழுவின் 50-வது பொன் விழா ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டது. அதை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.