Published:Updated:

அலங்காநல்லூர், பாலமேட்டில் கலெக்டர் ஆய்வு! - தயாராகும் ஜல்லிக்கட்டுப் போட்டி

அலங்காநல்லூர், பாலமேட்டில் கலெக்டர் ஆய்வு! - தயாராகும் ஜல்லிக்கட்டுப் போட்டி
அலங்காநல்லூர், பாலமேட்டில் கலெக்டர் ஆய்வு! - தயாராகும் ஜல்லிக்கட்டுப் போட்டி

மதுரையில் ஆண்டுதோறும் தை முதல் நாள் அவனியாபுரம், அதற்கும் அடுத்த நாள்களில் பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும். கடந்து 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக மிகப்பெரும் போராட்டம் நடைபெற்று. ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டதில் ஜல்லிக்கட்டைப் பற்றிய விழிப்புஉணர்வு மேலோங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வரும் 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் அலங்காநல்லூரிலும் நடைபெறு உள்ளது.

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வாடிவாசல், கேளரி, காளைகள் வரிசைப்படுத்தும் இடம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த பணிகளை ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

ஆய்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ``விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளைச் சிறப்பாக நடத்த சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காளைகளின் வருகையைப் பொறுத்து எத்தனைக் காளைகளுக்கு அனுமதி வழங்குவது என முடிவெடுக்கப்படும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது'' என்று தெரிவித்தார்.