Published:Updated:

கருணாநிதிக்கு இரங்கற்பா... காக்கியை உதறிய கவி!

கருணாநிதிக்கு இரங்கற்பா... காக்கியை உதறிய கவி!
பிரீமியம் ஸ்டோரி
News
கருணாநிதிக்கு இரங்கற்பா... காக்கியை உதறிய கவி!

கருணாநிதிக்கு இரங்கற்பா... காக்கியை உதறிய கவி!

ருணாநிதிக்காக இரங்கற்பா வீடியோ வெளியிட்ட திருச்சியைச் சேர்ந்த பெண் காவலர் செல்வராணியை விசாரணை என்ற பெயரில் போலீஸார் அலைக்கழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து, தமது 21 வருட காவலர் பணியை அவர் உதறியிருக்கிறார்.

திருச்சி மாநகரக் காவல் நுண்ணறிவுப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தவர் செல்வராணி. இவர், ‘கவிசெல்வா’ என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுவதுடன், பல்வேறு கவியரங்கங்களில் கவிதை வாசித்துள்ளார். 40-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவாக, ‘இரங்கற்பா வீடியோ’ ஒன்றை தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். அடுத்த சில தினங்களில் துறை ரீதியாக நடவடிக்கைக்கு அவர் உள்ளானார்.

கருணாநிதிக்கு இரங்கற்பா... காக்கியை உதறிய கவி!

செல்வராணியிடம் பேசினோம். “8-ம் வகுப்பு படித்த போதிலிருந்து கவிதைகள் எழுதிவருகிறேன். கடலூரில் ஆசிரியர் படிப்பு முடித்த எனக்கு, 1997-ல் வேலை கிடைத்தது. தமிழ் ஆளுமைகளில் கருணாநிதியைத் தகப்பனாகக் கருதுகிறேன். அவர் அரசியல் நிலைப்பாடு எனக்குத் தேவையில்லை. ஆனால், அவரின் தமிழ் ஆளுமை எனக்குப் பிடித்தமானது. அதனால், அவரின் மறைவுக்கு ‘இரங்கற்பா வீடியோ’ வெளியிட்டேன். அதுகுறித்து விளக்கம் கேட்டு, துறையில் இருந்து நோட்டீஸ் வந்தது. விளக்கம் கொடுப்பதற்குள் இடமாற்றல் உத்தரவு வந்தது. அந்த உத்தரவை ஏற்க மறுத்தேன். தொடர்ந்து என்னை உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரித்தார்கள். விசாரணையில், ‘இரங்கற்பாவில் கருணாநிதியை அப்பா எனக் குறிப்பிட்டுள்ளீர்களே, நீங்கள் கருணாநிதியை எப்படி அப்பா என அழைக்கலாம். அவர் உங்களுக்கு உறவா’ என்பது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கேள்விகளைக் கேட்டார்கள். அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் பணியில் தொடர்ந்தால், உயரதிகாரிகள் என்னைப் பழிவாங்கத் துடிப்பார்கள். அழுவதற்குக்கூட காவல்துறையில் உரிமையில்லை என்றால், அந்தப் பணியில் ஏன் தொடரவேண்டும்?

இன்னும் 16-வருடப் பணியும், பதவி உயர்வும் உள்ளன. மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வந்தது. வேலை இல்லாவிட்டால் என் குழந்தைகள், கணவர், உடல்நிலை சரியில்லாத மாமியார் என என்னைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், எல்லாவற்றை விடவும் தன்மானம் முக்கியம். அதனால், 21-வருடக் காவல் பணியை, நான் மிகவும் நேசிக்கும் காக்கிச்சட்டையைத் துறந்தேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா என்றால், கருணாநிதி தகப்பன்தான். இனி யாரின் அனுமதிக்காகவும் காத்திருக்காமல், எவ்வித நெருக்கடியும் இல்லாமல் சுதந்திரமாகக் கவிதை எழுதுவேன்” என்றார் செல்வராணி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கருணாநிதிக்கு இரங்கற்பா... காக்கியை உதறிய கவி!

இதற்கிடையே கடந்த 4-ம் தேதி திருச்சி வந்திருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், செல்வராணியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். அப்போது, “நீங்கள் தலைவரை அப்பா என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அண்ணனாக நான் இருப்பேன்” என்று ஸ்டாலின் சொல்ல, நெகிழ்ந்து போயிருக்கிறார் செல்வராணி!

- சி.ய.ஆனந்தகுமார் 
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்