Published:Updated:

நம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்!

நம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்!
பிரீமியம் ஸ்டோரி
நம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்!

நம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்!

நம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்!

நம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்!

Published:Updated:
நம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்!
பிரீமியம் ஸ்டோரி
நம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்!

மிழகத்தின் தலைசிறந்த தொழிலதிபர்களை அடையாளப் படுத்தி கௌரவிக்கும் நாணயம் விகடனின் ‘பிசினஸ் ஸ்டார் அவார்டு’ விருது வழங்கும் நிகழ்வு சென்ற வாரம் சென்னையில் நடந்தது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் வெவ்வேறு துறைகளில் சாதித்த சாதனைத் தொழிலதிபர்கள் விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பெற்றனர். 

விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், ஆனந்த விகடனின் ஆசிரியருமான பா.சீனிவாசனின் வரவேற்புரையுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்நாடு சி.ஐ.ஐ அமைப்பின் தலைவரும், பொன்ப்யூர் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எம்.பொன்னுசாமி சிறப்புரை ஆற்றினார். தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழக அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றிப் பேசிய அவர், ``தொழில் துறையில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட இன்னும் நிறைய வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பினை எல்லாத் தொழில்முனைவர்களும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

நம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்!

இதைத் தொடர்ந்து, ‘டெக்னாலஜி அஸ் எ பிசினஸ் எனேபிலர்’ (Technology as a business enabler) என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. தொழில் வளர்ச்சிக்குத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தக் கலந்துரையாடல் தெளிவாக எடுத்துச் சொன்னது. 

அடுத்து, தமிழகத்தின் மிகச் சிறந்த தொழில் முனைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில், எம்.எஸ்.எம்.இ ஸ்டார் அவார்டு ஈரோட்டைச் சேர்ந்த டி.எம்.டபிள்யூ சி.என்.சி சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஒ என்.சண்முகத்துக்கு வழங்கப் பட்டது. சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனமான ஸ்விங் ஸ்டெட்டர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எ.ஆனந்த் சுந்தரேசன் இந்த விருதினை வழங்கினார். இன்ஜினீயரிங் கல்லூரிப்  பேராசிரியர் வேலையை விட்டுவிட்டு, சிறிய முதலீட்டில் தொழில் தொடங்கிய சண்முகம், இன்று 150 கோடி ரூபாய்க்கு மேல் டேர்ன் ஓவர் செய்துவருகிறார்.

அடுத்து, மிகச் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கான ஸ்டார்ட் அப் சாம்பியன் விருது ஃப்ரெஷ்ஒர்க் நிறுவனத்தின் சி.இ.ஒ க்ரிஷ் மாத்ருபூதத்துக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு சி.ஐ.ஐ-ன் சேர்மன் பொன்னுசாமியும், சாந்தி கியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் அமைப்பின் தலைவருமான எல்.ராம்குமாரும் இணைந்து இந்த விருதினை வழங்கினார். ஃப்ரெஷ்ஒர்க் நிறுவனத்தைத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அதன் மதிப்பை ரூ.10,500 கோடிக்கு உயர்த்திவர். கிரிஷ் விருதினைப் பெற்றுக்கொண்டு, ‘சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தை ஏறு’ என தனக்குப் பிடித்த ரஜினியின் பாடல் வரிகளைச் சொன்னபோது அரங்கமே கைதட்டி வரவேற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்!

“என்னைப் போலவே எங்க திருப்பூர்ல 200 பேருக்கு மேல இருப்பாங்க. எங்க ஊர் மக்களோட உழைப்புதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவங்களுக்கே இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என்றார் ரைசிங் ஸ்டார் ஆந்த்ரபிரினர் விருதுபெற்ற ‘ஈஸ்ட்மேன் எக்‌ஸ்போர்ட்ஸ் குளோத்திங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரன். கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதனும், அரவிந்த் ஐகேர் சிஸ்டம் நிறுவனத்தின் புராஜெக்ட்ஸ் இயக்குநரான டாக்டர் எஸ்.அரவிந்தும் இந்த விருதினை வழங்கினர்.

சோதனைகள் பல வந்தபோதும் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றவர் லைப் செல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.அபயகுமாருக்கு பீனிக்ஸ் ஆந்த்ரபிரினர் அவார்டு வழங்கப்பட்டது. ஸ்ரீராம் குரூப்பின் நிறுவனர் ஆர்.தியாகராஜன் இந்த விருதினை வழங்கினார்.

லாபத்தை மட்டுமே லட்சியமாக நினைக்காமல், சமூக அக்கறையுடன் செயல்பட்டுவரும் மதுரையைச் சேர்ந்த ‘தான்’ (DHAN) நிறுவனத்துக்கு ‘சோசியல் கான்ஷியல்னஸ் ஆந்த்ரபிரினர் அவார்டு’ அளிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் சார்பில் இந்த நிறுவனத்தின் இயக்குநர் எம்.பி.வாசிமலை விருதினைப் பெற்றுக்கொண்டார். தைரோகேர் நிறுவனத்தின் சி.இ.ஒ டாக்டர் அ.வேலுமணி, வள்ளலார் ஐ.ஏ.எஸ் இந்த விருதினை வாசிமலைக்கு அளித்தனர்.

நம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்!

லாஜிஸ்டிக்ஸ் துறையில் பல புத்தாக்க நடவடிக்கையின்மூலம் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுவரும் டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.தினேஷுக்கு பிசினஸ் இன்னோவேஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை ஈக்விட்டாஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மன் என்.ரங்காச்சாரி வழங்கினார்.

எந்தவொரு செயலுக்கும் வழிகாட்டுதல் அவசியம். பிசினஸில் அது மிகவும் அவசியம். அப்படி வழிகாட்டும் அமைப்புகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் பிசினஸ் மென்டர் (இன்ஸ்ட்டிடியூஷன்) விருது சென்னையைச் சேர்ந்த டை (TiE) அமைப்புக்கு அளிக்கப்பட்டது. ‘டைசென்னை’ அமைப்பின் தலைவர் சங்கரும், அதன் செயல் இயக்குநர் அகிலா ராஜேஷ்வரும் பெற்றுக்கொண்டனர். கே.பி.ஆர் மில்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.பி.ராமசாமி இந்த விருதினை அளித்தார். 

இளம் தொழில்முனைவர்களுக்குத் தொழில் வழிகாட்டும் மதுரையைச் சேர்ந்த டாக்டர் பரத் கிருஷ்ண சங்கருக்கு ‘பிசினஸ் மென்டர் விருது’ வழங்கப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ள பரத், தமிழகத்தின் பல தொழில் முனைவர்களுக்கு வழிகாட்டிவருகிறார் பரத். அவருக்கு ரானே நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹரீஸ் லக்‌ஷ்மன் வழங்கினார்.

நம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்!

ரூ.5,000 முதலீடு செய்து, இன்றைக்கு 8,500 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் செய்துவரும் சுகுணா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சௌந்தரராஜனுக்கு செல்ஃப் மேட் ஆன்ந்த்ரபிரினர் அவார்டு அளிக்கப்பட்டது. இந்த விருதினை அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரும் மனிதவளத் துறைப் பிரிவின் தலைமை அதிகாரியு மான ஆர்.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார். பாரத் மேட்ரிமோனியின் சி.இ.ஒ முருகவேல் ஜானகிராமன் இந்த விருதினை வழங்கினார்.

தொழில் துறையில் மகத்தான பங்களிப்பைச் செலுத்தியதற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது ஜி.ஆர்.டி நிறுவனத்தின் சேர்மன் ஜி.ராஜேந்திரனுக்கு அளிக்கப்பட்டபோது அரங்கமே எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தியது. “என் குடும்பம் ரொம்பப் பெருசு. எங்கிட்ட வேலை பாக்குறவங்க எல்லாருமே என்னோட குடும்பம்தான். என் அம்மாவுக்கு இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன்’’ என ராஜேந்திரன் கூற, பார்வையாளர்கள் பலரும் கண்கலங்கினர். முருகப்பா குழுமத்தின் ஆலோசகர் எ.வெள்ளையன் இந்த விருதினை வழங்கி கௌரவித்ததுடன், சிறப்புரையும் ஆற்றினார். ‘‘விருது பெற்றவர்கள் அனைவரைப் பற்றியும் ‘கேஸ் ஸ்டடி’ செய்ய வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களை ‘கேஸ் ஸ்டடி’யாக செய்து படிப்பதைப்போல, நம் நாட்டு நிறுவனங்களையும் ‘கேஸ் ஸ்டடி’யாக நாம் படிக்க வேண்டும்’’ என்றார் அவர்.

- சக்தி தமிழ்ச்செல்வன், கானப்ரியா, படங்கள்: க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism