Published:Updated:

`பொங்கல் விடுமுறைக்கு வண்டலூர் பூங்கா செல்கிறீர்களா?’ - பூங்கா நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

`பொங்கல் விடுமுறைக்கு வண்டலூர் பூங்கா செல்கிறீர்களா?’ - பூங்கா நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!
`பொங்கல் விடுமுறைக்கு வண்டலூர் பூங்கா செல்கிறீர்களா?’ - பூங்கா நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள். கூட்டம் அதிகம் இருக்கும் காரணத்திற்காக பொதுமக்கள் சிரமங்களைத் தவிர்க்க பூங்கா நிர்வாகம் பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

``விடுமுறை தினங்களில் சுமார் பத்தாயிரம் பேர் வண்டலூர் பூங்காவுக்கு வருகிறார்கள். குறிப்பாகப் புத்தாண்டு, காணும் பொங்கல் போன்ற நாள்களில் அதைவிட அதிக அளவில் பூங்காவுக்கு மக்கள் வருகிறார்கள். வழக்கமாகச் செய்வாய் கிழமைகளில் வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. விலங்குகள் ஓய்வெடுப்பதற்கும், பூங்காவில் பராமரிப்பு பணிகளைச் செய்வதற்கும் இந்த விடுமுறை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் வரும் 15ம் தேதி (செய்வாய்கிழமை) பொங்கல் தினம் என்பதால் அன்று பூங்கா திறந்திருக்கும். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 15, 16, 17 ஆகிய மூன்று நாள்களிலும் காலை எட்டு மணி முதல் 6 மணிவரை பூங்கா திறந்திருக்கும். பார்வையாளர்களின் வசதிக்காக இருபது நுழைவுச் சீட்டு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பார்வையாளர்கள் www.aazp.in மற்றும் ‘vandalur zoo’ மொபைல் செயலி மூலமாகவும் நுழைவுப் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை இரண்டு சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்படும். பார்வையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சி.சி.டி.வி கேமராக்கள் மூலமாகத் தொடர் கண்காணிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக கேளம்பாக்கம் சாலையில் உள்ள கிரசென்ட் பல்கலைக் கழகம் அருகில் வாகனம் நிறுத்துமிடம் ஒன்றும் தேசிய நெடுஞ்சாலையில் வி.ஜி.பி திடலிலும் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வி.ஜி.பி. திடலில் 17ம் தேதி மட்டுமே வாகனங்களை நிறுத்த முடியும். வாகன நிறுத்துமிடத்தில் இருந்து பூங்காவிற்கு வந்து செல்ல இலவச பேருந்து வசதி 14ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மொபைல் டாய்லெட், குடிநீர் வசதி, ஆம்புலென்ஸ், மருத்துவ உதவி மையங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் உத்தரவுப்படி பிளாஸ்டிக் பைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுகிறோம்” எனப் பூங்கா நிர்வாகத்தினர் தெரிவிக்கிறார்கள்.