Published:Updated:

`தை பிறக்கட்டும்... மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்’ - தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

`தை பிறக்கட்டும்... மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்’ - தலைவர்கள் பொங்கல் வாழ்த்து
`தை பிறக்கட்டும்... மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்’ - தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி உலக தமிழர்கள் அனைவருக்கும் அரசியல் தலைவர்கள் தங்களின் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

`தை பிறக்கட்டும்... மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்’ - தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

“அன்பிற்கினிய தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். மக்கள் அனைவருடைய இல்லங்களிலும் பொங்கட்டும் பொங்கல், இதயம்தோறும் தங்கட்டும் இன்பங்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

`தை பிறக்கட்டும்... மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்’ - தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

 “உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

`தை பிறக்கட்டும்... மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்’ - தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் 

“தை பிறக்கட்டும்... தீமைகளிலிருந்து  மக்களுக்கு விடுதலைக் கிடைக்கட்டும்! உழவர் திருநாளான பொங்கல் பெருவிழாவையும், தமிழ் புத்தாண்டையும் உற்சாகத்துடன் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதற்கேற்ப தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும்  துயரங்களுக்கும் தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தது, காவிரி பிரச்னையில் தமிழகத்துக்குத் தொடர்ந்து இழைக்கப்படும் துரோகம், மாநில அரசின் அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசால் அபகரிக்கப்படுவது உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் நாளாக இந்த ஆண்டு தைத்திருநாள் அமையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

`தை பிறக்கட்டும்... மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்’ - தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயாலாளர் டி.டி.வி.தினகரன்

“உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என ட்விட்டியுள்ளார். 

`தை பிறக்கட்டும்... மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்’ - தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர்

 “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்கிற முதுமொழி. தமிழ் மக்களின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட தை முதல் நாளை, தமிழர்கள் திருநாளாகக் கொண்டாடப்படுவது தமிழ் மக்களுக்குப் பெரும் சிறப்பாகும். இந்த ஆண்டு இந்தியாவுக்குத் தை பிறந்து ஆட்சி மாற்றம் நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

`தை பிறக்கட்டும்... மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்’ - தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி

“தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாளையும், தமிழ்ப் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு எனது இனிய நல்வாழ்த்துகள்.

ஆயிரமாயிரம் வருத்தங்களும் துயரங்களும் இருந்தாலும் அவற்றுக்கு மருந்து போடும் வலிமையும்,  நற்குணமும் காலத்துக்கு உண்டு. எனவே, புல்லின் மீதுள்ள பனித்துளி வெயில் பட்டதும் மறைவதைப்போல புதிதாகப் புலரும் தைத் திங்கள் மக்களின் துயரத்தையும் வருத்தத்தையும் நீக்கும். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும் வளர்ச்சியும், வளமும் நலமும் பொங்க வேண்டும்; நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் செழிக்க வேண்டுமென மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

பொங்கல் வாழ்த்து - திருவாவடுதுறை ஆதீனம்

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே திருவாவடுதுறை குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். அவர், ``தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் திருநாள் பல்வேறு சிறப்புகளை உடையது. புண்ணியங்களை மேன்மேலும் பெருக்குவதிலும், பாவங்களை தவிர்ப்பதிலும், அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட்டால் உலகின் வளங்கள் பெருகும். இயற்கை பேரிடர்கள் வராமல் நீங்கும்' இந்த தைப்பொங்கல் எல்லோருக்கும் வளங்கள் பல பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு வாழ்வதற்கு உறுதுணையாக வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.