Published:Updated:

சேலை கட்டி பொங்கல் வைத்த சீனப் பெண்கள்!- பல்கலைக்கழகத்தில் நடந்த கொண்டாட்டம்

சேலை கட்டி பொங்கல் வைத்த சீனப் பெண்கள்!- பல்கலைக்கழகத்தில் நடந்த கொண்டாட்டம்
சேலை கட்டி பொங்கல் வைத்த சீனப் பெண்கள்!- பல்கலைக்கழகத்தில் நடந்த கொண்டாட்டம்

கடந்த செவ்வாய்க்கிழமை (15.01.2019) உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் தைத் திங்கள் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் முத்தாய்ப்பாகச் சீனாவிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சேலை கட்டி பொங்கல் வைத்த சீனப் பெண்கள்!- பல்கலைக்கழகத்தில் நடந்த கொண்டாட்டம்

சீனாவில் இயங்கிவரும் கல்விநிறுவனமான யுன்னான் மீன்சு பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அங்கு முதன்முறையாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா பற்றி அந்தப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பயிற்றுநரான நிறைமதி கிக்கி சாங் அவர்களிடம் கேட்டோம்.  

பொங்கல் விழா கொண்டாடியதன் பின்னணி குறித்து...

``பொங்கல் விழா என்பது, தமிழர்களின் மிக முக்கியமான விழாவாகும். தமிழ் மொழி படிக்கின்ற மாணவர்கள் எல்லோருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விழா. இவ்விழாவில் கலந்துகொள்வதன் மூலம் புத்தகங்களில் விளக்கிக் காட்ட முடியாத பகுதிகளை நேரில் கற்றுக்கொள்ளலாம். மேலும், இப்பல்கலைக்கழகத்தின் பிற மாணவர்கள் பங்கேற்று, தமிழ் பண்பாட்டை அறிந்துள்ளனர்" எனப் பெருமிதமடைந்தார் நிறைமதி கிக்கி சாங். மேலதிக சீனர்கள், சிறப்பு வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டையும் செம்மொழியான தமிழ் மொழியையும் மேலும், அறிய வேண்டுமெனும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். 

சேலை கட்டி பொங்கல் வைத்த சீனப் பெண்கள்!- பல்கலைக்கழகத்தில் நடந்த கொண்டாட்டம்

உழவுத் தொழிலுக்கு சீனப் பண்பாடு தரும் வழிபாட்டுக்கும் தமிழ்ப் பண்பாடு தரும் வழிபாட்டுக்கும் என்ன வேறுபாடு?

சீனப் பண்பாடு தமிழ்ப் பண்பாடு இரண்டும் மிகவும் தொன்மையான சிறந்த பண்பாடு. இரு பண்பாட்டிலும் வேளாண்மை கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பண்டைக்காலத்தில், எல்லா வம்சங்களின் பேரரசர்களும் சிறப்பான கோயில்களைக் கட்டியமைத்து, ஆண்டுதோறும் பல முறைகளாக அங்கு வந்து, விளைச்சல் அதிகம் பெறவும் பேரழிவு இல்லாத ஆண்டைப் பெறவும் வழிபட்டனர். தற்போது, சீன விவசாயிகள் நவீனமான அறிவியல் மற்றும் கருவிகளைப்  பயன்படுத்துகின்றனர். . 'தேவன்' வழிபாடு தவிர, அறிவியலை மென்மேலும் சார்ந்துள்ளனர். சீன விவசாயிகளுக்கான சிறப்பு விழாவான அதிகாரபூர்வ அறுவடை விழா 2018-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும்  செப்டம்பர் 23-ம் நாள் கொண்டாடப்படும். இவ்விழா, தமிழர்களின் பொங்கல் விழாவைப் போன்றது. சீன விவசாயிகள் கலை நிகழ்ச்சிகளின் மூலமும், சிறப்பு உணவுகள் தயாரிப்பது மூலமும் நண்பர்களோடு சேர்ந்து இவ்விழாவைக் கொண்டாடுவர். 

சேலை கட்டி பொங்கல் வைத்த சீனப் பெண்கள்!- பல்கலைக்கழகத்தில் நடந்த கொண்டாட்டம்

நிறைமதி கிக்கிசாங்

மாணவர்களுக்குத் தமிழ் விழாக்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்த வேண்டிய ஆர்வம் உள்ளதா?

நிச்சயமாக உள்ளது. தமிழ்ப் பண்பாடு தமிழ் விழாக்களின் பின்னணியில் உள்ளன. பல்வேறு தமிழ் விழாக்களைப் பற்றி எமது வகுப்பில் கலந்துரையாடுவேன். தமிழ் திரைப்படங்கள், செய்தித் தகவல்கள், காணொளிகள், விளையாட்டு, முதலிய வழிகளில் விளக்கிக் காட்டுவேன் என கூறுகிறார் நிறைமதி கிக்கிசாங். 

சேலை கட்டி பொங்கல் வைத்த சீனப் பெண்கள்!- பல்கலைக்கழகத்தில் நடந்த கொண்டாட்டம்

எலெக்ட்ரிக் அடுப்பில் பொங்கல் வைத்தது சரி!  அரிசி, கரும்பு, இஞ்சி, மஞ்சள் எல்லாம் கிடைத்ததா? 

கரும்பு, இஞ்சி, மஞ்சள் எல்லாமே பொங்கல் விழாவுக்கான மங்களப் பொருள்கள்தான். 6 கரும்புகள் கிடைத்தன. ஆனால், இஞ்சி, மஞ்சள் போன்ற பொருள்கள் சீனாவில் கிடைக்கவில்லை. அரிசி கிடைத்தது. இவற்றைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் பொங்கினோம்.

மேலும், மாணவர்கள் உண்ட உணவுகளான வெண்பொங்கல், சாம்பார், சுண்டல் போன்றவற்றை அத்துறையில் பணியாற்றும் தமிழகப் பேராசிரியர் சுந்தரம்  லக்ஷ்மனன், அவர்தம் மனைவியும்  தயாரித்தனர் . 

சேலை கட்டி பொங்கல் வைத்த சீனப் பெண்கள்!- பல்கலைக்கழகத்தில் நடந்த கொண்டாட்டம்

இவ்விழாவில் தமிழ் வகுப்பு மாணவர்கள் மட்டுமல்ல, அப்பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மற்றும் யோகாக் கல்லூரியின் பிற மாணவர்களும் பங்கேற்றனர். பொங்கல் விழாவையொட்டி நடத்தப்பெற்ற கோலம் வரைதல், கும்மி அடித்தல் போன்றவை நடத்தப்பட்டன. முதன்முறை இவற்றைச் செய்த மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.