Published:Updated:

புதுக்கோட்டை அருகே வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு - 410 காளைகள் சீறிப்பாய்ந்தன!

புதுக்கோட்டை அருகே வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு - 410 காளைகள் சீறிப்பாய்ந்தன!
புதுக்கோட்டை அருகே வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு - 410 காளைகள் சீறிப்பாய்ந்தன!

புதுக்கோட்டை அருகே வன்னியன்விடுதி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 410 காளைகள் சீறிப்பாய்ந்தன. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு அடக்கி பரிசுகளை தட்டிச் சென்றனர்.

புதுக்கோட்டை அருகே வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு - 410 காளைகள் சீறிப்பாய்ந்தன!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதி கிராமத்தில் உள்ள சித்திவிநாயகர் மாயன்பெருமாள் கோயில் திடலில் ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 59வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமை வகித்துத் துவங்கி வைத்தார். தஞ்சை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 575 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. ஜல்லிக்கட்டு போட்டியில், முதலாவதாக, கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.

புதுக்கோட்டை அருகே வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு - 410 காளைகள் சீறிப்பாய்ந்தன!

தொடர்ந்து, வெளி ஊர்களில் இருந்து வந்த காளைகள்  ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இரு பிரிவாக 200 இளைஞர்கள் காளைகளை அடக்கக் களத்தில் இறங்கினர். மொத்தமாக 410 காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து வெளியே சீறிப்பாய்ந்து வந்த சில காளைகள் வீரர்களின் பிடிக்கு சிக்காமல் நேரடியாக வெளியே சென்றது. குறிப்பிட்ட சில மாடுகள் மைதானத்திற்குள் நின்று விளையாடியது. சில வீரர்கள் மட்டுமே காளைகளை திமிலைப்பிடித்து லாபமாக அடக்கினர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்குக் கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட ஏராளமான பரிசுப்பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. சீறிப்பாய்ந்த பல காளைகள் வீரர்களைத் தூக்கி வீசியது.

இதில், 8 பேர் லேசான காயமடைந்தனர். காளைகள் மற்றும் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள்  ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டுகழித்தனர்.