சென்னை மாநகரில், கடற்கரையை ஒட்டி எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ளது மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு

ஆராய்ச்சி நிலையம் (Central Institute of Brackishwater Aquaculture-CIBA). இங்கு உவர் நீரில் மீன் வளர்ப்பு, இறால், நண்டு வளர்ப்பு உள்ளிட்ட ஆராய்ச்சிகளும் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இந்த நிலையத்தின் இயக்குநர் முனைவர் விஜயன், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது,

‘‘கடலோரங்களில் நன்னீரும் கடல் நீரும் சங்கமித்து உருவாகும் நீர்நிலைகள் மிகவும் வளமானவை. கடலில் உற்பத்தியாகும் சிலவகையான இறால்கள் மற்றும் மீன்களின் குஞ்சுகள் கடலிலிருந்து உவர்நீர் நிலைகளுக்குக் குடியேறி அங்கு வளர்ச்சியடைந்து மீண்டும் கடலுக்கு இனப்பெருக்கத்திற்குச் செல்லும்.

இவ்வகை இறால் மற்றும் மீன்களை உவர்நீர் குளங்களிலோ அல்லது கூண்டுகளிலோ வளர்ப்பதையே உவர்நீர் மீன் வளர்ப்பு என்கிறோம். இன்று நாட்டின் கடல் பொருள் ஏற்றுமதியில் 60% (சுமார் 32,000 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டும் தொழிலாக வளர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், முறையான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டல்தான். இதன்படி ஒரு ஹெக்டேரில், 100 நாள்களில் லட்ச கணக்கில் வருமானம் பெற முடியும்.

பத்திரிகையாளர் சந்திப்பில்...

இப்படி வருவாய் கொடுக்கும் மீன் வளர்ப்பை மேலும் வளரச் செய்ய, முதல் முறையாக ‘சர்வதேச உவர்நீர் மீன் வளர்ப்பு மாநாடு’ (Braqcon-2019) ஜனவரி 22 முதல் 25-ம் தேதி வரை, எங்கள் நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. மீன் வளர்ப்பு விவசாயிகள் கூட்டம், மீன் வளர்ப்புக் கண்காட்சி, மீன் வளர்ப்புத் தொழில் முனைவோர் சந்திப்பு, மீன் உணவுப் பாதுகாப்பு மற்றும் இடுபொருள்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், மூத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இதில் முதல் நாள், அதாவது 22-ம் தேதி விவசாயிகளுக்கான மீன் வளர்ப்பு மாநாடு நடைபெறவுள்ளது. நிகழ்வில் கலந்துகொள்ள கட்டணம் உண்டு. ஆந்திர மாநிலத்திலிருந்து கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு அம்மாநில அரசு சார்பில், கட்டணம் செலுத்தியுள்ளனர். தமிழ்நாட்டு விவசாயிகளுக்கான கட்டணத்தை, தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். இந்தப் பயனுள்ள நிகழ்வை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அழைக்கின்றோம்’’ என்று அழைப்புவிடுத்தார்.

தொடர்புக்கு

முனைவர் எம்.குமரன்,

செல்போன்:94449 41082