Published:Updated:

“புத்தகக் காட்சியா... ஜவுளிக்கடையா?” - ஆண்டுதோறும் தொடரும் சர்ச்சை!

“புத்தகக் காட்சியா... ஜவுளிக்கடையா?” - ஆண்டுதோறும் தொடரும் சர்ச்சை!
பிரீமியம் ஸ்டோரி
“புத்தகக் காட்சியா... ஜவுளிக்கடையா?” - ஆண்டுதோறும் தொடரும் சர்ச்சை!

“புத்தகக் காட்சியா... ஜவுளிக்கடையா?” - ஆண்டுதோறும் தொடரும் சர்ச்சை!

“புத்தகக் காட்சியா... ஜவுளிக்கடையா?” - ஆண்டுதோறும் தொடரும் சர்ச்சை!

“புத்தகக் காட்சியா... ஜவுளிக்கடையா?” - ஆண்டுதோறும் தொடரும் சர்ச்சை!

Published:Updated:
“புத்தகக் காட்சியா... ஜவுளிக்கடையா?” - ஆண்டுதோறும் தொடரும் சர்ச்சை!
பிரீமியம் ஸ்டோரி
“புத்தகக் காட்சியா... ஜவுளிக்கடையா?” - ஆண்டுதோறும் தொடரும் சர்ச்சை!

மிழகத்தின் பல மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டாலும், சென்னை புத்தகக் காட்சிக்கு இருக்கும் வரவேற்பே தனிதான். இந்த ஆண்டும் சென்னைப் புத்தகக் காட்சி ஆன்லைன் நுழைவுச் சீட்டு, 800-க்கும் அதிகமான புத்தகக் கடைகள், 17 நாள்கள் விறுவிறு விற்பனை என்று களைகட்டியது. அதேசமயம் ஒவ்வோர் ஆண்டும் தொடரும் சர்ச்சைகளும் புகார்களும் இந்த ஆண்டும் களையப்படவில்லை என்பதுதான் வேதனை.

நுழையும்போதே தொடங்குகிறது பிரச்னை. நுழைவாயிலுக்கும் அரங்குக்குமான தூரம் மிக அதிகம். பார்க்கிங் வசதிக்கு படாதபாடுபட வேண்டியிருந்தது. குடிநீர் இருந்தும் குடிக்க முடியாமல் கானல் நீரானது கதை. அரங்குகளில் நீண்ட வரிசையாக இருந்ததால் புத்தகங்களைக் கண்டுபிடிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. சம்பிரதாயமாக நடந்த பொதுமேடை நிகழ்ச்சிகளும் பெரியதாக ஈர்க்கவில்லை. வழக்கம்போல கழிப்பிடம் படுமோசம். இவை மட்டுமல்ல... எங்கோ மூலையில் அமைந்திருந்த எழுத்தாளர் சந்திப்பு இடம், நெறிப்படுத்தப்படாத உணவுக் கடைகள் எனப் புத்தகக் காட்சியிலும் வாசகர்கள் சந்தித்த சிரமங்கள் ஏராளம். இவ்வளவு அதிருப்திகளுக்கு இடையேதான் இந்தப் புத்தகக் காட்சியில் 18 கோடி ரூபாய்க்கு 75 லட்சம் நூல்கள் விற்பனையானதாக வெளியிடப்பட்ட தகவல், சர்ச்சையை மேலும் சூடாக்கியுள்ளது.

“புத்தகக் காட்சியா... ஜவுளிக்கடையா?” - ஆண்டுதோறும் தொடரும் சர்ச்சை!

இதுகுறித்து பேசிய பாரதி புத்தகாலயத்தின் மேலாளர் நாகராஜன், “அரங்குகள் அதிகமாகிவிட்டன. ஒருவர் பத்து நாள்கள் தினமும் வந்தால்கூட இவ்வளவுப் பெரிய புத்தகக் காட்சியைச் சுற்றிப் பார்த்து, புத்தகங்களை வாங்க முடியுமா என்று தெரியவில்லை. இதனால் பதிப்பகங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டது. எனவே வருங்காலத்தில் இலக்கியம், சிறுவர் நூல்கள், ஆன்மிக நூல்கள், ஆங்கிலம், தமிழ் பதிப்பகங்கள் என்று தனித்தனியாக வகை பிரித்து அரங்குகளை அமைக்க வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் கண்ணன், “எங்களுடைய அரங்கு வெறும் விற்பனைக்கூடமாக மட்டுமல்லாமல் பண்பாட்டு நிகழ்வுகள், வாசகர்கள் - எழுத்தாளர்கள் சந்திப்பு, புத்தக வெளியீடுகள் போன்ற நிகழ்ச்சி களைக் கொண்டதாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு எங்களிடமிருந்த நூல்களைக் காட்சிப்படுத்து வதற்கே போதுமான இடம் ஒதுக்கப்படவில்லை. புத்தகக் காட்சிக்குத் தொடர்பில்லாத ஊசி பாசிக் கடைகளுக்கெல்லாம் இடம் கொடுத்திருந்தனர். ஒரு பதிப்பகத்தில் கிடைக்கும் நூல்களை, வேறு பதிப்பகத்திலும் வாங்கிக்கொள்ளலாம் என்கிறார் கள். இது புத்தக் காட்சியா? ஜவுளிக் கடையா? பெரிய பதிப்பகங்களுக்கு அதிக இடம் கொடுப்பதால் சிறியப் பதிப்பகங்களின் விற்பனை பாதிக்கப் படுகிறது என்று சொல்பவர்கள், இந்த ஆண்டு எந்தெந்த சிறு பதிப்பகங் களுக்கு விற்பனை கூடியிருக்கிறது என்று பட்டியல் கொடுக்கட்டும். 18 கோடி ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்பனையாகி யிருக்கிறது என்று சொல்கிறார்கள். அரங்குகள் எல்லாம் விற்பனை விவரங்களை எழுதிக்கொடுக்க நான்கு நாள்கள் ஆகும். எனவே, இந்தத் தொகையை உடனடியாகக் கணக்கிட்டுக் கூறியதில் எல்லாம் எனக்கு உடன் பாடில்லை” என்றவர், சில தீர்வுகளையும் முன்வைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“புத்தகக் காட்சியா... ஜவுளிக்கடையா?” - ஆண்டுதோறும் தொடரும் சர்ச்சை!

“புத்தக அரங்கை இன்னும் பெரிதாக ஆக்கலாம். வெறும் புத்தகம் வாங்குவது மட்டும்தான் வாசகர்களின் நோக்கம் என்றால், போன் செய்தோ ஆன்லைனிலோ புத்தகங்களை வாங்கி விடமுடியும். அப்படி இருக்கும்போது, ஒரு வாசகனைப் புத்தகக் காட்சிக்கு வரவழைக்க, நூல்களை ஒரே இடத்தில் கிடைக்கச்செய்வது முதல் தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்பனை செய்வது என்று பல விஷயங்களைச் செய்துகொடுக்க வேண்டும். தனி அரங்கை ஏற்படுத்தி அதில் புத்தகங்களை வெளியிடலாம். எழுத்தாளர் சந்திப்புக்கான அரங்கு இருக்கிறது என்றாலும், அதை ஓரத்தில் குடோன் போலத்தான் வைத்திருக்கிறார்கள். அதைச் சரிசெய்ய வேண்டும். எழுத்தாளர்கள் வந்திருப்பதை அறிவிப்பது, நூல் வெளியீடுகளை அறிவிப்பதைக் கூடுதலாகச் செய்யவேண்டும்” என்றார்.

இந்தச் சர்ச்சைகள் குறித்துத் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் வைரவனிடம் கேட்டோம்.

“புத்தகக் காட்சியா... ஜவுளிக்கடையா?” - ஆண்டுதோறும் தொடரும் சர்ச்சை!

“18 கோடி ரூபாய் என்பது தோராயமானதுதான். ‘எட்டு அரங்கு’ கடைகள் அருகிலிருக்கும் ஓர் அரங்கு, இரண்டு அரங்குகள் கடைகளின் விற்பனை பாதிக்கப்படுகிறது என்று கடந்த காலங்களில் குற்றச்சாட்டு வந்தது. அதனால், இந்த ஆண்டு யாருக்கும் ‘எட்டு அரங்கு’ கடை ஒதுக்கப்படவில்லை. எழும்பூர் கன்னிமாரா நூலகத்தின் நிரந்தரப் புத்தகக் காட்சியில் இலக்கியம், ஆன்மிகம், பொது நூல்கள் எனத் தனித் தனியாக வரிசைகளை வைத்திருக்கிறோம். ஆனால், சிறிய இடமான அங்கேயே அது சரிப்பட்டு வரவில்லை. இவ்வளவுப் பெரிய இடத்தில் அது எப்படிச் சரிப்பட்டு வரும்? எங்களால் முடிந்த அளவு செய்திருக்கிறோம். குறைகளைத் தாராள மாகச் சொல்லட்டும். அவை அடுத்தடுத்தப் புத்தகக் காட்சிகளில் எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும்” என்றார் பொறுமையாக.

அடுத்தடுத்து வரும் புத்தகக் காட்சிகள் வாசகர்களுக்கு மகிழ்ச்சியானதாகவும் புதிய வாசகர்களை ஈர்க்கும்படியாகவும் அமையவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்!

- ச. அழகுசுப்பையா
படங்கள்: பெ.ராக்கேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism