Published:Updated:

கதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு!

கதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு!
பிரீமியம் ஸ்டோரி
கதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு!

கதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு!

கதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு!

கதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு!

Published:Updated:
கதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு!
பிரீமியம் ஸ்டோரி
கதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு!

‘ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தின்போது, 12 நாள்கள்... எடப்பாடியின் மொத்தக் கூட்டமும் குடும்பம் சகிதமாக ‘பழனி’சாமியிடம் சரண் அடைந்துவிடுவார்கள். அதைத் தொடர்ந்து, ஒருநாள் முழுவதுமாக ‘பழனி’சாமியின் மொத்த ஜாகையும், அந்த மக்களின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும். வேறொன்றும் இல்லை. ஆண்டாண்டு காலமாக எடப்பாடியின் பெரும்பான்மையான சமூகமான பர்வத ராஜகுல மீனவ மக்களுக்கு, பழனி முருகன் கோயிலில் வழங்கப்பட்டிருக்கும் பாரம்பர்ய உரிமையைப் பற்றிய சுவாரஸ்யமான வரலாறே இந்தக் கட்டுரை!

கதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு!

தைப்பூசத்துக்கு முன்பாக சேலம் மாவட்டத்தில் இருக்கும் எடப்பாடி (முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த ஊர்) களைகட்டத் தொடங்கிவிடும்.  அனைவரும் குடும்பம் சகிதமாகப் பழனி முருகன் கோயிலுக்குப் பாதயாத்திரையைத் தொடங்கிவிடுவார்கள். இதன் உச்சமாக, தைப்பூசத்துக்குப் பிந்தைய ஒருநாள் முழுவதும் பழனி கோயில், அந்த மக்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அன்றைய தினம், படி பூஜை தொடங்கி முருகனுக்குப் பஞ்சாமிர்தம் தயாரிப்பதுவரை மொத்தச் செலவும் அவர்களுடையது. எப்போதுமே இரவு 9 மணிக்கு மேல் யாருக்குமே அனுமதி இல்லாத பழனி முருகன் கோயிலில், அன்றைய தினம் இரவு முழுவதும் அவர்கள் தங்கிக்கொள்ளலாம். என்றோ ‘எடப்பாடி’ செய்த உதவிக்கு ‘பழனி’சாமி எழுதிக்கொடுத்திருக்கும் நன்றி சாசனம் இது என்கிறார்கள். அப்படியான அந்த ஒருநாள்தான், ஜனவரி 26-ம் தேதி. நேரில் கோயிலுக்குச் சென்றோம். கூட்டம் அலைமோதியது. ஒருபுறம் 48-ம் ஆண்டு படி பூஜை ஏற்பாடுகள்… இன்னொரு பக்கம், 14 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தத் தயாரிப்பு வேலைகள்… என்று பழனி முருகனுக்கான பணிவிடைகளில் பரபரப்பாக இருந்தார்கள் எடப்பாடி ஊர் மக்கள். அது என்ன நன்றிக்கடன் என்று அறிய எடப்பாடியைச் சேர்ந்த தங்கலட்சுமியிடம் பேசினோம்.

கதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு!

“புதூர், கவுண்டம்பட்டி, சின்னமலனி, பழையபேட்டை, புதுப்பேட்டை, பழைய எடப்பாடின்னு எடப்பாடியின் ஆறு கிராமத்தினரும் ஒவ்வொரு வருஷமும் காவடி எடுத்துட்டு பழனிக்கு வந்துடுவோம். மழை, வெள்ளம்ன்னு எத்தனை தடங்கல்கள் வந்தாலும் இது நின்னதில்லை. பழனி கோயில்ல வேறு யாருக்குமே இல்லாத உரிமை, மீனவ சமூகமான பர்வத ராஜகுல மக்களாகிய எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கு. பல நூறு வருஷங்களுக்கு முன்பிருந்தே தொடர்ற பாரம்பர்யம் இது. இதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு. அந்தக் காலத்துல ஒருநாள் பழனி முருகனின் மரத் தேர் கிரிவலம் வந்துகிட்டு இருந்தப்போ சேற்றில் சிக்கி, சாஞ்சிருச்சாம். எவ்வளவு முயற்சி பண்ணியும் யாராலும் தேரை நகர்த்த முடியலை. குறிப்பிட்ட நேரத்துக்குள்ள தேர் கோயிலை அடையலைன்னா தெய்வக்குத்தம் ஆகிடும். அப்ப எடப்பாடியிலிருந்து வந்திருந்த எங்க மூதாதையர்கள்தான் படாதபாடுபட்டு, தேரை ஓட வெச்சிக் கொடுத்தாங்களாம்...” என்று நிறுத்த அருகில் இருந்த பொன்னுரங்கம் தொடர்ந்தார்.

“தேரை ஓட வெச்சுக் கொடுத்த நன்றிக்காக, அப்போது கோயிலை நிர்வாகம் பண்ணவங்க, ‘வருஷத்தில் ஒருநாள் கோயில் உங்களுடையது’ன்னு எங்கள் இன மக்களுக்குச் சொல்லிட்டாங்க. அன்னையிலிருந்து தொடரும் வழக்கம் இது. ஊருல இருந்து நடந்துபோகிற நாள் கணக்கை வெச்சு இந்த நாளை நிர்ணயிப்பாங்க. அந்த ஒருநாள் எங்களுக்குத் தரும் மனத் திருப்தியை வார்த்தையில சொல்ல முடியாது. பூர்வஜென்ம புண்ணியம் அது. எடப்பாடியிலிருந்து மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிற எங்க சமூக மக்கள் ஒரு லட்சத்துக்கு அதிகமானவங்க, அன்று பழனிக்கு வந்துடுவாங்க. நாங்க பொண்ணு, மாப்பிள்ளை பார்க்குறது, சம்பந்தம் பேசுறது எல்லாம் இந்த நாள்களில்தான்” என்றார் பூரிப்பாக.

கதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு!

பர்வத ராஜகுல மக்களின் எடப்பாடி ஊர் தலைவர் கிருஷ்ணனிடம் பேசினோம். “எந்த வருஷம் தேரை நகர்த்திக் கொடுத்த நிகழ்வு நடந்ததுன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, பல வருடங்களாகத் தொடரும் கணக்கை வெச்சிப் பார்க்கும்போது, இந்த வருஷம் 358-வது ஆண்டு விழா. இந்த விழாவுக்கென்றே எடப்பாடியில் அன்னதான கமிட்டி, பஞ்சாமிர்த கமிட்டி, காவடி கமிட்டி இருக்கு. மாட்டு வண்டியில் பெரிய முருகன் படத்தை வெச்சு ஊர் முழுக்க வசூல் செய்வோம். எடப்பாடியிலிருந்து நடந்து வர ஆறு நாள், இங்கிருந்து கிளம்பிப் போகையில ஆறு நாள்ன்னு 12 நாள்களுக்கும் மூணு வேளை வழியெல்லாம் அன்னதானம் போடுவோம். தேரை ஓட வெச்சதால இந்த உரிமை கிடைச்சதுன்னு ஒருதரப்பு சொல்றாங்க. இன்னொரு பக்கம் முருகனின் தாயான பார்வதி, மீனவக் குலத்தில் பிறந்ததால இந்த உரிமை எங்களுக்கு வழங்கப்பட்டிருக்குன்னும் சொல்றாங்க. எது எப்படியோ இது எங்களுக்கு கிடைச்சப் பெரும் பாக்கியம். முருகா..!” என்று நெக்குருகிக் கோபுரத்தை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டார்.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: வீ.சிவக்குமார்