Published:Updated:

நம்ம திருநெல்வேலியை நல்லா தெரிஞ்சுப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நம்ம திருநெல்வேலியை நல்லா தெரிஞ்சுப்போம்!
நம்ம திருநெல்வேலியை நல்லா தெரிஞ்சுப்போம்!

நம்ம திருநெல்வேலியை நல்லா தெரிஞ்சுப்போம்!

பிரீமியம் ஸ்டோரி
நம்ம திருநெல்வேலியை நல்லா தெரிஞ்சுப்போம்!

ங்கள் மாவட்டத்தை அறிந்துகொள்ளுங்கள் (Know your District) என்ற தலைப்பில், ஒவ்வொரு மாவட்டம் பற்றியும் 200 தகவல்கள் கொண்ட  இணைப்பிதழ் சுட்டி விகடனில் வெளியாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நீட் மற்றும் இதரப் போட்டித் தேர்வுகளில் பயன்படுத்தும் OMR ஷீட், வினாத்தாள் மூலம் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு, பரிசும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன. சேலம், சென்னை, மதுரை, தருமபுரியைத் தொடர்ந்து, திருநெல்வேலியிலும் நடந்தது.

இந்தத் தேர்வில் நெல்லை மாவட்டத்தின் 13,000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றார்கள். அவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வு எழுதிய வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் பரிசளிப்பு விழா 23.01.2019  அன்று நடைபெற்றது.

நம்ம திருநெல்வேலியை நல்லா தெரிஞ்சுப்போம்!

திருநெல்வேலியின் வண்ணாரப் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஃபிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், நெல்லைச் சரகக் காவல்துறை துணைத் தலைவர் கபில்குமார் சரட்கர், நெல்லை மாநகரின் நகர சுகாதார அலுவலர் சதீஷ்குமார், மயோபதி மருத்துவமனை மருத்துவர் ராமசாமி ஆகியோர் பங்கேற்று மாணவர்களிடம் சிறப்புரையாற்றி, பரிசுகளை வழங்கினர்.

விழாவில் பேசிய டி.ஐ.ஜி கபில்குமார் சரட்கர், “அனைத்து மாணவர்களும் பாடநூல் தாண்டிய அறிவுக்கு பல நூல்களை வாசிப்பது அவசியம். நூலகமும் இணையமும் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள உறுதுணையாக இருக்கும். இதனால், போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு எளிதில் வெற்றிபெறலாம்’’ என்றார்.

ஸ்காட் குழுமங்களின் பொதுமேலாளர் சேவியர், ‘‘நாம் பிறந்த ஊர், நகரம் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது பொதுஅறிவுக்கு மட்டுமல்ல, நம் மண்ணுக்குச் செய்யும் மரியாதையும் கூட.’’ என்றார்.

நம்ம திருநெல்வேலியை நல்லா தெரிஞ்சுப்போம்!

எழுத்தாளர் நாறும்பூ நாதன், மாணவர்களிடம் திருநெல்வேலி பற்றிய கேள்விகள் கேட்டு, பதில் அளித்த மாணவ,  மாணவிகளுக்கு ரொக்கப் பணமும்,   புத்தகங்களும் பரிசாக வழங்கினார்.

நம்ம திருநெல்வேலியை நல்லா தெரிஞ்சுப்போம்!


ஃபிரான்சிஸ் சேவியர் பள்ளியின் முதல்வர் ஜான் லாரன்ஸ், ``இதே போல பக்கத்து மாவட்டங்களுக்கும் (Know your  Neighbour District) செய்யுங்கள், நிச்சயம்  எங்கள் பள்ளி அதில் கலந்து கொள்ளும்.’’ என்று உறுதியளித்தார்.
 
நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள், ‘‘திருநெல்வேலி பற்றி இதுவரை தெரியாத பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டோம். இவ்வளவு சிறப்பான மண்ணில் பிறந்திருக்கோம்னு நினைத்துப் பெருமைப்படுகிறோம். OMR ஷீட்டைப் பயன்படுத்தி முதன்முறையாகப் தேர்வு எழுதியது புதுமையான அனுபவமாக இருந்தது’’ என்றார்கள்.

நம்ம திருநெல்வேலியை நல்லா தெரிஞ்சுப்போம்!

ஆசிரியர் மகாலட்சுமி என்பவர், “இந்த இணைப்பிதழ், மாணவர்களின் பொதுஅறிவை மேம்படுத்துவதில் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. ஆசிரியர்களாகிய எங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது’’ என்றார்.

பரிசுபெற்ற மாணவர்களுக்குச் ‘சோலைவனம்’ பண்ணையின் சார்பாக, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 

மு.ஜாஸிம் ஹைரானா தாபீஆ

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு