Published:Updated:

சமூக சேவைக்குக் கிடைத்த கெளரவம்! - விருது வழங்கிய ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்

சமூக சேவைக்குக் கிடைத்த கெளரவம்! - விருது வழங்கிய ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி

சென்னையில் உள்ள தொழில் அமைப்புகளில் பழைமை யானது ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ். 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கடந்த 29-ம் தேதி தனது 73-வது சேம்பர் தின விழாவைக் கொண்டாடியது. அன்றைய தினம், சமூகத்துக்கு நற்பணியாற்றிய இரண்டு தொழிலதிபர்களுக்கு ‘சாம்பியன் ஆஃப் ஹியூமானிட்டி அவார்ட்’ என்ற விருதை தந்து கெளரவித்தது.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தினார் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் தலைவர் ராஜேந்திரகுமார். ‘‘இந்த அமைப்பு தொழில் துறையினருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பாலமாக இருந்து தொழில் துறையின் மேம்பாட்டுக்குப் பாடுபட்டு வருகிறது” என்றார்.

சமூக சேவைக்குக் கிடைத்த கெளரவம்! - விருது வழங்கிய ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்

அடுத்ததாக, சமூகத்துக்குச் சேவை ஆற்றுவதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட அசோக் குமார் மேத்தாவுக்கும், டாக்டர் பரத் கிருஷ்ண சங்கருக்கும் விருது வழங்கி கெளரவித்தார் கவர்னர் பன்வாரி புரோஹித்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அசோக் குமார் மேத்தாவின் பூர்வீகம் ராஜஸ்தான். பல ஆண்டுகளுக்குமுன்பே சென்னைக்குப் புலம்பெயர்ந்தது அவரது குடும்பம். அவரது சகோதரருடன் இணைந்து தொழில்துறையில் ஈடுபட்டவர், பலவிதமான தொழில்களைச் செய்துவருகிறார். சென்னையில் புகழ்பெற்ற ஜெயின் ஹவுஸிங் நிறுவனத்தை நடத்திவரும் இவர், சங்கர நேத்ராலயா உள்பட பல மருத்துவமனைக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு நிதி உதவி செய்ததற்காக விருது வழங்கப்பட்டது. 

டாக்டர் பரத் கிருஷ்ண சங்கர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். சார்ட்டர்ட் அக்கவுன்டன்சி படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர். இவரது வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட அபராஜிதா நிறுவனம், தொழில் நிறுவனங்கள் அரசிடமிருந்து பெறவேண்டிய அனுமதிகளைப் பெற்றுத்தரும் சேவையைப் பல்வேறு நிறுவனங்களுக்குத் தருவதில், இந்தியாவில் முதன்மையான நிறுவனமாக இருக்கிறது. மதுரையில் இருந்தபடி உலக அளவில் பேசப்படும் நிறுவனமாக மாற்றிக் காட்டியிருக்கும் டாக்டர் பரத் கிருஷ்ண சங்கருக்கு விருது வழங்கப்பட்டது. 

அசோக் குமார் மேத்தா, தனக்குக் கிடைத்த விருதினை அவரது அன்னைக் கும் சகோதரருக்கும் சமர்ப்பிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். ‘‘ சமூக சேவைகள்தான் எனக்கு  மனமகிழ்ச்சியை யும் மனநிறைவையும் தருகிறது. சங்கர நேத்ராலயாவிற்குக் கண்பொறை நோய் சிகிச்சைக்காக வருபவர்கள், தெளிவான பார்வை கிடைத்ததும் அடையும் மகிழ்ச்சியைப் பார்த்து, நான் அடைந்த சந்தோஷம் அளவிட முடியாதது’’ என்று உணர்ச்சிவசப்பட்டார். 

பரத் கிருஷ்ண சங்கர், தனக்குக் கிடைத்த விருதினைத் தனது தாய்க்குச் சமர்பிப்பதாகச் சொன்னார். ‘‘உன்னால் முடிந்ததை ஊருக்குக் கற்றுக்கொடு என்று என் அம்மா சொன்ன அறிவுரைதான் என்னை இந்தச் சமூகத்துக்காக உழைக்கக்கூடிய உந்துதலைத் தந்தது’’ என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கவர்னர், தொழில்முனைவோர்கள், நேர்மையான முறையில் வரி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும் என்றார். தனது தந்தை நாக்பூரில் பருத்தி விற்பனை செய்யும் தொழிலைச் செய்துவந்ததையும், கொடுத்த வாக்கைக் காப்பாற்று வதற்காக தனது அம்மா, பாட்டியின் நகைகளை அவர் அடகு வைத்ததையும் குறிப்பிட்டுப் பேசினார் கவர்னர்.

ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் புதிய தலைவர் சத்யநாராயண் ஆர்.தவே விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

தெ.சு.கவுதமன், படம்: ப.பிரியங்கா
 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism