Published:Updated:

நீலகிரி அருகே குடியரசு தின கொண்டாட்டம் - ஆடல் பாடலுடன் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

நீலகிரி அருகே குடியரசு தின கொண்டாட்டம் - ஆடல் பாடலுடன் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்
நீலகிரி அருகே குடியரசு தின கொண்டாட்டம் - ஆடல் பாடலுடன் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில் பறை இசைத்தும் அதற்கேற்ப  'ஹுலா ஹுப்'புடன் நடனமாடியும்  அசத்திய அவ்வூர் பள்ளி மாணவர்களுக்கு  பாராட்டுகள் குவிந்தன. 

நாடுமுழுவதும் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் கோத்தகிரி அவ்வூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட குடியரசு தினவிழாவில் ஏராளமான பள்ளி  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.  இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.  வழக்கமாக கோத்தகிரி அவ்வூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வித்தியாசமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவது வழக்கம். இன்றும் இவர்களது பறை இசை நிகழ்ச்சி பட்டியலில் இடம் பெற்றிருந்தது.  

பள்ளி மாணவர்கள் 15க்கும் மேற்பட்டோர், பல்வேறு இசை கருவிகளை (பறைகள்) வாசித்தனர். இவர்களின் வாசிப்பிற்கு ஏற்றவாறு இடுப்பில் 'ஹுலா ஹுப்' வளையங்களை சுற்றிக் கொண்டே மாணவ, மாணவிகள் நடனமாடினர். நிகழ்ச்சியின் துவக்கம் முதலே கை தட்டல்களும், விசில் சத்தமும் காணப்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் இந்த பறை இசை நிகழ்ச்சி நடந்தது. இதனை பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் இறுதி வரை கண்டு ரசித்து பாராட்டினர்.