Published:Updated:

அலகுமலையில் சீறிப்பாயும் காளைகள்! - களைக்கட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!

அலகுமலையில் சீறிப்பாயும் காளைகள்! - களைக்கட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!
அலகுமலையில் சீறிப்பாயும் காளைகள்! - களைக்கட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. 

அலகுமலையில் சீறிப்பாயும் காளைகள்! - களைக்கட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!

File photo

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்தப் போட்டியை மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு துவங்கி வைத்தார். இதில் 500 காளைகள் மற்றும் 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 1300 காவலர்கள்வரை ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

அலகுமலையில் சீறிப்பாயும் காளைகள்! - களைக்கட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!

தொழில் நகரமான திருப்பூரில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவதால் போட்டியை கண்டு ரசிக்க மக்கள் கூட்டம் அலைகடலெனத் திரண்டு கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அமர்ந்து பார்க்க வசதியாக பல்வேறு நிலைகளில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 80 ஆயிரம் கிலோ அளவுக்கு பாக்கு மரங்களை வாங்கி வந்து கேலரிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு தடை நீக்கத்துக்குப் பிறகு திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் இரண்டாவது ஜல்லிக்கட்டு திருவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது.