தஞ்சாவூரில் திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் ‘சமூகநீதிக்கான மாநில மாநாடு’ கடந்த 23, 24 தேதிகளில் நடைபெற்றது. அதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், வி.சி.க தலைவர் திருமாவளவன், சி.பி.எம் சார்பில் அருணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் திலகர் திடலில் நடந்த இந்த மாநாட்டில் பேசிய வைகோ, “பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் காலத்தில் வராத ஆபத்து, இப்போது மிகக் கொடுமையாக வடக்கிலிருந்து வருகிறது. மோடிக்கு ஒரு வாக்குகூடச் சென்றுவிடக் கூடாது. தி.மு.க தலைமையிலான கூட்டணி வெல்ல வேண்டும்” என்றார்.

திருமாவளவன் பேசுகையில், “மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வருவது ஆபத்து. அரசிலமைப்புச் சட்டத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கும் பி.ஜே.பி-யை வீழ்த்த வேண்டும்” என்றார்.

வீரமணி பேசுகையில், “பாசிசக் கொம்புகளை நொறுக்கி ஜனநாயகத்தைக் காக்க, திராவிட இயக்கத்தால்தான் முடியும். கலைஞர் இல்லையே என்ற குறையை நிவர்த்தி செய்கிறார் ஸ்டாலின். ஸ்டாலினின் பிம்பத்தை உடைக்கச் சிலர் முயற்சி செய்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இது, வெறும் தேர்தலுக்கான கூட்டணி அல்ல. அடுத்த தேர்தல் முக்கியம் என்பதைவிட, அடுத்த தலைமுறை முக்கியம் என அமைக்கப்பட்ட கூட்டணி” என்றார்.

பின்னர் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் திராவிடர் கழகமும், தி.மு.க-வும் இருக்கும்வரை எத்தனை மத அமைப்புகள் வந்தாலும், திராவிடர்களை வீழ்த்த முடியாது. சமூகத்தில் அநீதிகள் தலைவிரித்து ஆடுகிற நேரத்தில், இந்த மாநாடு நடக்கிறது. சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கிற ஓர் அரசாக, மத்திய அரசு உள்ளது. அதை நேரடியாகச் செய்யாமல் மறைமுகமாகக் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்ற பெயரில் செய்கிறது. நான் மிசாவில் கைதானபோது, ஆசிரியர் அவர்களுடன்தான் சிறையில் இருந்தேன். அவர்தான் எனக்குத் திராவிட உணர்வை ஊட்டி வளர்ந்தவர். நீங்கள் (வீரமணி) உங்கள் உடல் நலத்திலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். ஏனென்றால் பெரியார், கலைஞர் போல் நீங்கள் வாழ வேண்டும்” என்றார்.

அப்போது வீரமணியின் கண்கள் லேசாகக் கலங்கின.

- கே.குணசீலன், அப்துல்லா.மு
படங்கள்: ம.அரவிந்த், அ.சி.ஈஸ்வர்