Published:Updated:

புதுக்கோட்டை மாசி மகத் திருவிழா - ஆசியாவின் பெரிய குதிரை சிலைக்கு நேர்த்திக்கடன்

புதுக்கோட்டை மாசி மகத் திருவிழா - ஆசியாவின் பெரிய குதிரை சிலைக்கு நேர்த்திக்கடன்
புதுக்கோட்டை மாசி மகத் திருவிழா - ஆசியாவின் பெரிய குதிரை சிலைக்கு நேர்த்திக்கடன்


புதுக்கோட்டை  அருகே, குளமங்கலம் கிராமத்தில் உள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் நடைபெற்ற மாசி மகத் திருவிழாவில், கோயிலின் முன்பு அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலையின் உயரத்திற்கு ஏற்ப பக்தர்களால்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர் மற்றும் காகிதப்பூ மாலைகள் நேர்த்திக்கடனாக அணிவிக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாசி மகத் திருவிழா - ஆசியாவின் பெரிய குதிரை சிலைக்கு நேர்த்திக்கடன்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம்  கிராமத்தின் வில்லுனி ஆற்றங்கரையில், பெருங்காரையடி மீண்ட அய்யனார்  கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முன்பகுதியில் 35அடி உயரமுள்ள ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு வருடமும் மாசி மகத் திருவிழா 2  நாள்கள் சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் மாசி மகத் திருவிழா இன்று  தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பிரமாண்ட குதிரை சிலைக்கு பக்தர்களால் குதிரையின் உயரத்திற்கு ஏற்ப மாலை அணிவிக்கப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் நேர்த்திக்கடன் செய்திருந்த பக்தர்கள்  கார், லாரி போன்ற வாகனங்களில், சிலை உயரத்திற்கு ஏற்ப மலர் மற்றும் காகிதப்பூ மாலைகளை  எடுத்து வந்து  நேர்த்திக்கடனாக  அணிவித்தனர்.  

புதுக்கோட்டை மாசி மகத் திருவிழா - ஆசியாவின் பெரிய குதிரை சிலைக்கு நேர்த்திக்கடன்


 

'புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, மதுரை, வேலூர், சேலம், கோவை எனப்  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டனர். ஆங்காங்கே அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  திருவிழாவிற்காக புதுக்கோட்டை, அறந்தாங்கியில் இருந்து சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  நாளை (20-ம் தேதி) தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.