Published:Updated:

மிஸ்.கூவாகம் திருவிழா: சர்ச்சை கிளப்பிய வேதாந்தா ஸ்பான்ஸர்

மிஸ்.கூவாகம் திருவிழா: சர்ச்சை கிளப்பிய வேதாந்தா ஸ்பான்ஸர்
பிரீமியம் ஸ்டோரி

மிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருக்கும் திருநங்கைகளை ஒருங்கிணைத்து, தென்னிந்தியத் திருநங்கைகள் கூட்டமைப்பு நடத்தும் வருடாந்திர மிஸ் கூவாகம் விழா, சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் 2019-ம் ஆண்டுக்கான மிஸ்.கூவாகம் அழகியாக தர்மபுரியைச் சேர்ந்த நபீசா தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவையைச் சேர்ந்த மடோனா இரண்டாவது இடத்தையும் பவானியைச் சேர்ந்த ருத்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். வண்ணமயமாக நடைபெற்ற இந்த விழாவின் முக்கிய ஸ்பான்ஸர்களின் பட்டியலில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனமும் இடம் பெற்றிருந்தது. இதுதான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

மிஸ்.கூவாகம் திருவிழா: சர்ச்சை கிளப்பிய வேதாந்தா ஸ்பான்ஸர்

விழாவில் எழுத்தாளர் ரேவதி நடித்த ‘வெள்ளை மொழி’ நாடகம் மிஸ்.கூவாகம் மேடையில் அரங்கேறியது. நடிகர்கள் ஆரி, ஜெய் ஆகாஷ், தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். முதன்முறையாக இளம் திருநங்கை சாதனையாளர்கள் விருது மூன்று திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டது. இப்படி உற்சாகமாக விழா நடந்துகொண்டிருக்கும்போதே வேதாந்தா நிறுவனத்தின் ஸ்பான்ஸர் குறித்தத் தகவல் அங்கு பரவியது. இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் சிலர் போராட்டம் நடத்த முயற்சி மேற்கொண்டார்கள். பிறகு அது கைவிடப்பட்டது. இருப்பினும், ‘தனது ஆலைக்காக மக்கள் 13 பேரின் உயிரைப் பலி வாங்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்பான்ஸர்ஷிப்பை தென்னிந்தியத் திருநங்கைகள் கூட்டமைப்பு எப்படி ஏற்றுக்கொண்டது?’ என்கிற சர்ச்சை பல்வேறு தரப்பினரிடமும் எழுந்துள்ளது. மேலும் சமூக ஊடகத்தில், ‘சமூக அரசியலில் திருநங்கைகள் அதிகம் பங்கெடுத்துவரும் சூழலில், ஸ்டெர் லைட் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்பான்ஸர்ஷிப் பணத்தை ஏற்றுக்கொண்டது சரியா?’ என்கிற விவாதமும் கிளம்பியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்.கூவாகம் திருவிழா: சர்ச்சை கிளப்பிய வேதாந்தா ஸ்பான்ஸர்

இதுகுறித்துச் செயற்பாட்டாளர் கிரேஸ் பானுவிடம் பேசினோம். “இத்தனை காலமாக மிஸ்.கூவாகம் போட்டி என்றாலே வெறும் அழகிப் போட்டி என்பது மட்டும்தான் அதில் மையமாக இருக்கும். ஆனால், முதன்முறையாக இளம் திருநங்கைச் சாதனையாளர்களை மேடை ஏற்றி விருது வழங்கினோம். ‘திருநங்கைகள் பாலியல் தொழிலில் மட்டுமே ஈடுபடுவார்கள்’ என்கிற பார்வையை இப்படியான அங்கீகாரங்களே மாற்றி இருக்கின்றன. ஒருவகையில் இதுவே எங்களுக்குக் கிடைத்த வெற்றிதான். ஸ்டெர்லைட் வேதாந்தா ஸ்பான்ஸர் விவகாரத்தைப் பொறுத்தவரை, அது திருநங்கைகளான நாங்கள் கைதட்டி கடைகளில் பிச்சை கேட்பதுபோலத்தான். அதை இந்த நிகழ்வு நடத்துவதற்காக உபயோகித்தோம். அதற்காக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம் என்று அர்த்தம் அல்ல. 

மிஸ்.கூவாகம் திருவிழா: சர்ச்சை கிளப்பிய வேதாந்தா ஸ்பான்ஸர்

நிகழ்வு நடந்த மேடையில்கூட வேதாந்தா நிறுவனம் ஸ்பான்ஸர் செய்ததை மட்டும்தான் சொன்னோமே தவிர, அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் மேடையில் எதுவும் பேசவில்லை. 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டையும் நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை. பொதுச் சமூகம் எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு எந்தவித ஆதரவும் அளிக்கவில்லை என்றாலும், நாங்கள் பொதுமக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம். மிஸ்.கூவாகம் நிகழ்வு நடந்த அன்று திருநங்கைகள்,  தினம் என அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு எங்களை அங்கீகரித்து விழா எதுவும் நடத்த வில்லை. எங்களுக்கு நாங்கள்தான் ஆதரவு என்னும் நிலையில் இருக்கிறோம். எனவே, எங்களைப் போன்ற சிறுபான்மை மக்களிடம் இப்படி அரசியல் செய்ய வேண்டாம்” என்றார்.

- ஐஷ்வர்யா

படங்கள்: தே.சிலம்பரசன்