Published:Updated:

களைகட்டிய கல்வித் திருவிழா!

களைகட்டிய கல்வித் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
களைகட்டிய கல்வித் திருவிழா!

களைகட்டிய கல்வித் திருவிழா!

களைகட்டிய கல்வித் திருவிழா!

களைகட்டிய கல்வித் திருவிழா!

Published:Updated:
களைகட்டிய கல்வித் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
களைகட்டிய கல்வித் திருவிழா!

’என்ன மார்க்ஸ்?  என்ன கோர்ஸ்?’ என்ற தலைப்பில் பிளஸ்- 2  முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம் என்று கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வழி காட்டும் விதமாக சவீதா நிகர்நிலை பல்கலைக்கழகமும், ஆனந்த விகடனும் இணைந்து மதுரையில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை   ஏப்ரல் 27, 28 இருநாள்களில் நடத்தியது. ஆனந்த விகடனோடு கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி, ஹெச்.சி.எல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கைகோக்க, மதுரை லஷ்மி சுந்தரம் ஹால்,  மாணவர்கள், பெற்றோர்கள் வருகையில் களைகட்டியது. கல்வி வழிகாட்டு தலுக்காக  அமைக்கப் பட்டிருந்த 25 அரங்குகளையும்  பார்வையிட்ட அவர்கள் இருநாள்களிலும் கல்வியாளர்களின் ஊக்கமளிக்கும் உரையின்மூலம், தங்களுக்கிருந்த சந்தேகங்களைப் போக்கிக் கொண்டனர். 

களைகட்டிய கல்வித் திருவிழா!

மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் தன் மகளின் அட்மிஷனையே உதாரணமாக்கி, மாணவர்களுக்கு டிப்ஸ் வழங் கினார். கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சசி ஆனந்த், கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது மாணவர் கள் என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதை விளக்கினார்.

கல்வியியலாளர் நெடுஞ்செழியன் முதல்நாள் நிகழ்வை தன் அனுபவப் பேச்சால் சிறப்பாக்கினார். “எனக்குப் பிடிச்சது தயிர் சாதம்னு, பஃபேல போய் தயிர்சாதத்தை மட்டும் சாப்டுட்டு வர்றது தப்பு. அதேமாதிரி, ஆர்வம்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட படிப்புல, பிரிவுல சேரணும்னு அதமட்டுமே விசாரிக்காதீங்க. நிறைய வாய்ப்புகள் கண்முன்னால இருக்கு”  என்றார்.

களைகட்டிய கல்வித் திருவிழா!

கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சத்யஸ்ரீ பூமிநாதன்  “தமிழக மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி தேர்வு களுக்குக் காட்டும் ஆர்வத்தை சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராவதில் காட்டுவதில்லை. டிகிரி  வாங்கிய பிறகே யு.பி.எஸ்.சி தேர்வுகள் மீது மாணவர்களுக்கு நாட்டம் வருகிறது. கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராவது நல்ல பலனைக் கொடுக்கும். சிவில் சர்வீஸ் தேர்வுகள்மீது இருக்கும் தவறான புரிதல்களை மாணவர்கள் தவிர்த்தாலே போதும். மற்ற போட்டித் தேர்வுகளைவிட மிக எளிமை யானது இது. சமுதாய அக்கறை கொண்ட மாணவர்கள் தலைமைப்பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளாக வர வேண்டும்” என்றார்.

சவீதா நிகர்நிலைப் பல்கலைகழகத்தின் பேராசிரியர் மகேஷ், ஒரு மாணவருக்கு கல்வி நிலையத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருந்தால் அவை அவரது கல்வித்தரத்தை மேம்படுத்தும் என்பது குறித்துச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

களைகட்டிய கல்வித் திருவிழா!

கலசலிங்கம் கல்லூரியின் பதிவாளர், டாக்டர் வாசுதேவன், பொறியியல் படிப்பின் முக்கியத்துவம் பற்றிப் பகிர்ந்தார். ‘டாப் கிட்ஸ்’ நிறுவனர் தீப் பேசுகையில், “கல்லூரிப் படிப்பை  எளிமையாக நினைத்து ஆர்வத்தோடு படிக்க வேண்டும்” என்றார். ஹெலிக்ஸ் பள்ளி சேர்மன் செந்தில்குமார், “விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பலவற்றை நாம் தேர்வு செய்வதில்லை. பூச்சிகளை ஆய்வு செய்யும் படிப்பு உள்ளது அதிலும் அறுபதா யிரத்திற்கு மேல் சம்பளம் கிடைக்கும்” என்றார்.

சார்ட்டட் அக்கவுன்டன்ட் கோபால கிருஷ்ண ராஜூ , “சி.ஏ  தொடர்பான படிப்புகள் கடினம் அல்ல. படிப்புடன் சேர்த்துத் திறமையை வளர்த்துக்கொண்டால் போதும், வெற்றி நிச்சயம்” என்றார் உற்சாகமாக.

கேலக்ஸி குழும நிறுவனங்களின் சேர்மன் ரமேஷ் பிரபா, “பொறியியல் படிப்பில் வேலை வாய்ப்புகள் இல்லை என்று சொல்வது ஏற்புடைய தல்ல. பொறியியல்  படிப்பில் பல துறைகள் உள்ளன. நாம் கல்லூரி சேர நினைக்கும் போது முதலில் நல்ல கல்லூரியைத்தான் தேர்வு செய்ய வேண்டும். பிறகுதான் துறையைத் தேர்வு செய்வது பற்றி யோசிக்க வேண்டும்” என்றார்.

களைகட்டிய கல்வித் திருவிழா!

போட்டித்தேர்வுகள் குறித்துப் பேசிய சங்கர சரவணன், “பயிற்சி இருந்தால் எதிலும் எளிமையாக சாதிக்கலாம். போட்டித் தேர்வுகளுக்குக் கல்லூரிக் காலங்களிலேயே தயாராக வேண்டும். செய்தித்தாள், இதழ்கள், புத்தகங்கள் நிறைய வாசிக்க வேண்டும். போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்ய விகடன் நிறைய புத்தகங்களை வெளியிடுகிறது” என்று சுட்டிக்காட்டினார்.

நிறைவாக எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமாரின்  தன்னம்பிக்கையான பேச்சிலும், நகைச்சுவையிலும் அரங்கம் உற்சாகக் கைத்தட்டலில் அதிர்ந்தது. “நீங்கள் என்ன வேண்டு மானாலும் படியுங்கள்; ஆனால் இரண்டு மொழியிலாவது வல்லுநராக இருங்கள். அப்போதுதான் நிறைவான வெற்றியடைய முடியும்.  முதலில் தாய்மொழியை முழுதாகக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்ததாய் ஆங்கி லமும் அவசியம் என்று உணருங்கள். ப்ளஸ் டூ படித்த ஒரு மாணவன், கல்லூரியில் இயற்பியல் கடினம், வேதியியல் கடினம் என்பது அந்த சப்ஜெக்ட் கடினம் என்பதால் அல்ல. அவை ஆங்கிலத்தில் இருப்பதால், இவனுக்கு ஆங்கிலம் கடினம் என்பதால்தான்” என்றார் பாரதி கிருஷ்ணகுமார். 

நிகழ்ச்சி முடிந்த பின் நித்திலா என்ற மாணவியிடம் பேசினோம். ‘‘என் அப்பா ஜோசப், பள்ளி ஆசிரியர். நங்கள் நிறைய உரையாடிக் கொள்வோம். ப்ளஸ் டூ-வுக்குப் பின்னர் எதையும் நான் திட்டமிட்டுக் கொள்ளவில்லை. தேர்வு முடிவுகள் வந்ததும்தான் சிவில் இன்ஜினீயரிங் எடுத்துப் பண்ணலாம் என எண்ணம் தோன்றியது. எனது யோசனை சரிதானா, எனக்கு இது பொருந்துமா என்பதையெல்லாம் தெளிவுபடுத்திக் கொள்ளவே இங்கு வந்தேன். ஆனந்த விகடன் எங்களுக்குத் தேவையான நேரத்தில், இந்தக் கண்காட்சியையும் கருத்தரங்கையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஆனந்த விகடனுக்கு நன்றி’’ என்றார்.

-அருண் சின்னதுரை,  ச.பவித்ரா,  எம்.முத்துக்குமரன்

படங்கள்: வி.சதிஷ்குமார், ஈ.ஜெ.நந்தகுமார்

களைகட்டிய கல்வித் திருவிழா!