Published:Updated:

அன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்!

அன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்!

பயிற்சி

அன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்!

பயிற்சி

Published:Updated:
அன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்!

‘நாணயம் விகடன்’ மற்றும் ‘பசுமை விகடன்’ ஆகிய இதழ்கள் இணைந்து... கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, சென்னை எழும்பூரில் ‘லாபம் தரும் வேளாண் ஏற்றுமதி’ என்ற ஒருநாள் பயிற்சி வகுப்பை நடத்தின. இந்த ஒருநாள் பயிற்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து 64 பேர் கலந்துகொண்டனர். 

அன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்!

ஏற்றுமதி குறித்துப் பயிற்சியளித்த ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீன், “ஏற்றுமதி வணிகத்தில் தொடர் முயற்சி எடுப்பவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள். இத்தொழிலில் இறக்குமதியாளரைக் கண்டறிவதுதான் சவாலான விஷயம். இதற்கு ‘இ.சி.ஜி.சி’ (Export Credit Guarantee Corporation of India-ECGC) என்ற அமைப்பு வழிகாட்டுகிறது. ஏற்றுமதிக்கான பொருளின் விலையை நிர்ணயிக்கும்போது… போக்குவரத்து, பேக்கிங், நமக்கான லாபம் என அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். டாலரில்தான் விலை சொல்ல வேண்டும். பணத்தை வங்கியின் மூலமாகத்தான் பெற வேண்டும்.

அரிசி, வெல்லம், மஞ்சள், வாழை, காய்கறிகள், மா, தேங்காய், பெரிய வெங்காயம், நிலக்கடலை, கைவினைப் பொருள்கள், அவல், பால் உள்ளிட்ட பல வேளாண் சார்ந்த பொருள்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு 2 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதம் வரை மானியம் வழங்குகிறது. கிட்டத்தட்ட 10 ஆயிரம் வகை பொருள்கள் 256  நாடுகளுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன. கடந்தாண்டு 1.19 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் ஆகியுள்ளது. ஆனாலும், மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது நமது ஏற்றுமதியின் அளவு குறைவுதான். இங்கே ஏற்றுமதி குறித்த விழிப்பு உணர்வு இல்லை. அதை முன்னெடுத்திருக்கும் பசுமை விகடனின் முயற்சி அளப்பரியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்!

ஏற்றுமதி செய்யும்போது, ஆவணங்கள் (டாக்குமென்ட்) தயாரிப்பது முக்கியமான விஷயம். இதை மட்டும் சரியாகச் செய்தால் ஏற்றுமதியில் பாதி வெற்றியை எட்டிவிட முடியும். அதேபோல வேளாண் ஏற்றுமதிக்கு அதிக முதலீடு தேவைப்படும் என்றும் பலர் நினைக்கிறார்கள். 1 டன் அரிசியை ஏற்றுமதி செய்ய 50,000 ரூபாய்த் தேவைப்படும். 1 டன் முந்திரியை ஏற்றுமதி செய்ய 10,00,000 ரூபாய் தேவைப்படும். இப்படி நாம் ஏற்றுமதி செய்ய இருக்கும் பொருளைப்பொறுத்து முதலீட்டுத்தொகை மாறுபடும். வாரம் 3 ஷிப்மென்ட் என்ற கணக்கில் ஏற்றுமதி செய்தால், மாதம் 1,20,000 ரூபாய் சம்பாதிக்க முடியும்” என்றார்.

தொடர்ந்து பேக்கேஜிங் குறித்து வகுப்பெடுத்தார், தஞ்சாவூர், இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானி எஸ்.அனந்தகுமார். “மதிப்புக்கூட்டும் பொருள்களுக்குத்தான் இன்று மவுசு. இன்னும் 20 ஆண்டுகளில் நம் வீடுகளில் சமைக்க வேண்டி இருக்காது. ரெடிமேட் உணவுகள்தான் இருக்கும். அவற்றைச் சூடுபடுத்தியோ, குளிர் நிலையில் வைத்தோ சாப்பிட வேண்டியதுதான் நம் வேலையாக இருக்கும். தற்போது பெரம்பலூர் வெங்காய உற்பத்தியாளர் உழவர் நிறுவனம் வெங்காயத் தோல் நீக்கும் கருவியைக் கொண்டு, தாங்கள் விளைவிக்கும் வெங்காயத்தைத் தோல் நீக்கி நேரடியாகச் சென்னையில் உள்ள உணவகங்களுக்கு அனுப்புகின்றனர். இதனால், அவர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

இப்படி மா, தக்காளி, வாழை, பலா போன்றவற்றில் மதிப்புக்கூட்டி நல்ல வருமானம் பார்க்கலாம். ஒவ்வொரு நாட்டுக்கும் எப்படிப் பேக்கிங் செய்வது, என்னமாதிரியான பேக்கிங் மெட்டீரியல் புதிதாக வந்திருக்கிறது உள்ளிட்ட பல விஷயங்களை எங்கள் மையத்தின் மூலமாகச் சொல்லிக் கொடுக்கிறோம். தேவைப்பட்டால் உங்கள் இடத்துக்கேகூட வந்து சொல்லிக் கொடுக்கிறோம். இதுசம்பந்தமாகத் தகவல் தேவைப்படுவோர் எங்கள் மையத்தை அணுகலாம்” என்றார்.ஏற்றுமதியாளர் நாகராஜ் வீரய்யா, “நாணயம் விகடன் இதேபோல நடத்திய ஏற்றுமதிப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்தவன்தான், இன்று ஏற்றுமதியாளராக உங்கள் முன் நிற்கிறேன். முதலில் எளிமையான, அதேசமயம் நல்ல விற்பனை வாய்ப்புள்ள வாழையை ஏற்றுமதி செய்யலாம் என்று முடிவு செய்து… ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ஜி-9 எனப்படும் மோரீஸ் ரக வாழையைச் சவுதிக்கு ஏற்றுமதி செய்தேன். 

அன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்!

அடுத்து, பசுமை விகடனில் வெளிவந்த ‘அள்ளித் தரும் அக்கரைச் சீமை’ என்ற ஏற்றுமதி குறித்த தொடரில் என்னுடைய பேட்டி வெளியானது. அதைப் படித்துவிட்டு முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். முன்பு ஐ.டி கம்பெனியில் 30,000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நான், இப்போது வாழை ஏற்றுமதியில் மாதம் 3,00,000 ரூபாய் வருமானம் எடுத்து வருகிறேன். அடுத்து 2 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி ஆர்டர் கிடைத்திருக்கிறது. ஏற்றுமதி குறித்த முழுத் தகவல்களையும் தெரிந்துகொண்டு நம்பிக்கையோடு இறங்கினால், ஏற்றுமதியிலும் நல்ல வருமானம் பார்க்க முடியும். அதற்கு நானே உதாரணம்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

ஏற்றுமதியாளர்களுக்கான கடன்கள்குறித்துப் பேசிய ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த மோகனபிரபு, “ஏற்றுமதி, நம் நாட்டுக்கு அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவதால், அதற்குக் கடன்களும் நிறையவே கிடைக்கின்றன. இதை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்றுமதிக்குக் கடன் பெற ஐ.இ கோடு (Importer Exporter Code) அவசியம்” என்றார். நிகழ்ச்சியின் நிறைவில், பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

த.ஜெயகுமார் - படங்கள்: பெ.ராக்கேஷ்

அன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்!

“நிறையப் பயிற்சிகளை நடத்துங்கள்!”

அன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்!

சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த உஷா, “நான் ஒரு தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டுப்பண்ணையைத் தொடங்கி நடத்திட்டிருக்கோம். ஆடுகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாகத் தெரிஞ்சுக்க வந்தேன். உயிருள்ள பிராணிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டுமென்றால், சிறப்பு உரிமம், நோ அப்ஜக்‌ஷன் சர்ட்டிபிக்கேட்டை வாங்கி அனுப்ப வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டேன். இதைத்தவிர ஏற்றுமதி சம்பந்தமான பயனுள்ள தகவல்களைத் தெரிஞ்சுகிட்டேன். இதுபோல நிறையப் பயிற்சிகளைப் பசுமை விகடன் நடத்த வேண்டும்” என்றார்.

அன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்!

போரூரைச் சேர்ந்த ஜெயபாலன், “எனக்கு 20 ஏக்கர் மானாவாரி நிலம் இருக்கு. அதுல சிறுதானியச் சாகுபடி செய்றேன். சிறுதானியங்களை ஏற்றுமதி செய்யணுங்கிற ஐடியா இருக்கு. அதற்கான விஷயங்களைத் தெரிஞ்சுகிறதுக்காகத்தான் வந்தேன். நாம ஏற்றுமதி செய்ற நாடுகள்ல நம்மோட உறவினர்களோ, நண்பர்களோ இருந்தா ஏற்றுமதி இன்னும் எளிமையாயிடும்கிறதைப் புரிஞ்சுகிட்டேன்” என்றார்.

அன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்!

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரைச் சேர்ந்த விவேக் சுந்தர், “இயற்கை முறையில் காய்கறிகள், கீரைகளைச் சாகுபடி செய்றேன். ஏற்கெனவே வாழை ஏற்றுமதி செஞ்சுட்டுருக்கேன். இப்போ கீரையை வெளிநாடுகளுக்கு அனுப்புற யோசனை இருக்கு. அதற்கான தகவலுக்காகத்தான் வந்தேன். ரொம்பப் பயனுள்ளதா இருந்துச்சு” என்றார்.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism