Published:Updated:

விகடன் வழிகாட்டிய கல்வி எக்ஸ்போ!

விகடன் வழிகாட்டிய கல்வி எக்ஸ்போ!
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் வழிகாட்டிய கல்வி எக்ஸ்போ!

விகடன் வழிகாட்டிய கல்வி எக்ஸ்போ!

ப்ரல், மே என்றாலே, மாணவர்கள் ரிசல்ட் ஃபீவரில் இருப்பார்கள்தானே!

ஸ்கூல் லைஃப் டூ காலேஜ் லைஃப்க்கு புரமோட் ஆகும் நேரம். பொதுத்தேர்வு ரிசல்ட் அறிவிச்சதும் எல்லாப் பக்கமும் பரபரப்பு. ஆர்ட்ஸ், ஐ.டி.ஐ., இன்ஜினீயரிங், மெடிக்கல் சயின்ஸ்... ‘அப்பப்பா... இவற்றில் எதைப்  படிக்க?' என்ற குழப்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும், ‘கூல் ட்யூட்ஸ்.. வி ஆர் தேர்' என்று களத்தில்  குதித்தது, ஆனந்த விகடன்.

விகடன் வழிகாட்டிய கல்வி எக்ஸ்போ!

ப்ளஸ் டூ மாணவர்களுக்கென பிரத்யேகமாக `என்ன மார்க்ஸ்? என்ன கோர்ஸ்?' என்ற தலைப்பில், ஆனந்த விகடனும் சவீதா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் இணைந்து, கல்வி வேலைவாய்ப்புக் கண்காட்சியை மதுரையில் நடத்தியது.

கல்வியாளர்கள், துறை முன்னோடிகளின் பங்களிப்பில், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இரண்டு நாள்களும் நிகழ்வுகள் ஜோராக நடந்தன. மனம் நிறைய பல்வேறு வினாக்களையும் ஐயங்களையும் ஏந்தி வந்திருந்த மாணவர்களுக்கு, அரங்கின் கீழ்த்தளத்தில் விடைகளும், மேல்தளத்தில் விளக்கங்களும் சுடச்சுடக் காத்திருந்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விகடன் வழிகாட்டிய கல்வி எக்ஸ்போ!

பிரபலமான தரம்மிக்க பல்கலைக் கழகங்களின் கல்லூரிகளின் ஸ்டால்கள் இடம்பெற்று இருந்தன. ஸ்டால் வைத்தவர்கள், தங்கள் கல்வி நிறுவன விவரங்களை வருவோரிடம் விளக்கியதோடு வண்ணமயமான பேம்ப்ளட்ஸ், வீடியோக்கள் மூலம் ஈர்த்தனர்.

‘‘என்ன நடக்குதுன்னு சும்மா பார்க்க வந்தேன்’’ என்ற ஒரு மாணவர், நிகழ்ச்சியின் முக்கியத்துவம்  உணர்ந்து, மறுநாள் தனது நண்பர்களோடும் வந்திருந்தார். மொத்தக் குடும்பத்துடன் இரண்டு நாளும் வந்திருந்த ஒரு தந்தை, ‘‘அடுத்த வருஷம் பொண்ணு ப்ளஸ் டூ, பையன் இந்த வருஷம் டென்த். இப்போவே காலேஜ் விஷயங்களைப் பார்த்து வெச்சுக்கிட்டா தெளிவா இருப்பாங்க’’ என்றார். கிளம்பும்போது விகடனுக்கு ஹார்ட்ஃபுல் தேங்க்ஸ் சொன்னார். ஓகே... சீனை கட் பண்ணி கருத்தரங்கத்துக்கு லாங் ஷாட் வைக்கலாம்.

விகடன் வழிகாட்டிய கல்வி எக்ஸ்போ!

இன்றைய கல்விச்சூழலிலுள்ள ‘புதிய படிப்புகளும் வாய்ப்புகளும்' குறித்த தெளிவை மாணவர்கள் பெறுகின்ற வகையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் உரையாற்றினார். மாணவர்கள் தாம் பெற்றிருக்கின்ற மதிப்பெண்ணுக்கேற்ற படிப்புகள் என்னென்ன, அவற்றை இனம் காண்பது எப்படி என்பது பற்றி கல்வியியலாளர் நெடுஞ்செழியன் பேசினார்.

மன அழுத்தமின்றி கல்லூரிப் படிப்பை எளிமையாக எதிர்கொள்ளத் தேவையான உளவியல் ஆலோசனைகளை வழங்கினார், உளவியல் வல்லுநரும், ‘டாப் கிட்ஸ்’ நிறுவனருமான, தீப். பொறியியல் படிப்பின் முக்கியத்துவம், அதன் எளிதான கற்றல் தன்மையைப் பற்றி டாக்டர் வாசுதேவன் சொன்னார். ‘எந்தப் படிப்பும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல' எனப் பேசிய ஹெலிக்ஸ் பள்ளி சேர்மன் செந்தில்குமார், கல்விக்குப் பொருத்தமான வேலைவாய்ப்பு குறித்து விளக்கினார்.

விகடன் வழிகாட்டிய கல்வி எக்ஸ்போ!

சாட்டர்டு அக்கவுன்டன்சி படிப்பு பற்றி பேசுகையில், ‘சான்றிதழ் மட்டுமே திறமை, தகுதி ஆகியவற்றின் முழு அளவீடல்ல. நேரடிச் செயல்பாட்டில் திறமையை வெளிப்படுத்தும் ஆற்றல் மாணவர்களுக்கு வேண்டும்' என்றார் கோபால கிருஷ்ண ராஜு.

‘முதலில் நல்ல கல்லூரியைத் தேர்வுசெய்ய வேண்டும். அதன்பிறகு, துறைகளைப் பற்றி யோசிக்கலாம்' என்றார் ரமேஷ்பிரபா. கல்லூரிக் காலங்களிலேயே போட்டித் தேர்வுக்களுக்கான தயாரிப்புகளைச் செய்யவேண்டிய அவசியத்தை சங்கர் சரவணன் எடுத்துச் சொன்னார்.

விகடன் வழிகாட்டிய கல்வி எக்ஸ்போ!

கல்லூரியில் படிக்கும்போதே ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகி வெற்றிபெறுவது குறித்த வழிகாட்டுதல்களோடு ‘கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி’ மேலாளர் சத்யஸ்ரீபூமிநாதன் பேசினார். ஐ.ஏ.எஸ். படிப்பில் நிறைய பேருக்கு ஆர்வமிருந்ததை காணமுடிந்தது.

இறுதியாக சிறப்புரை ஆற்றிய பாரதி கிருஷ்ணகுமார், ‘‘மொழிகள் பலவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும். தற்போதைய வெற்றிகளுக்கு அவசியப்படாவிட்டாலும், எதிர்காலத்தில் நம்மைத் தற்காத்துக் கொள்ள  மொழியறிவு அவசியம்’’ என மொழிக்கல்வி குறித்துப் பேசினார். சிரிப்பு வெடிகளுக்கு நடுவே சிந்திக்கவும் வைத்த பேச்சால் அரங்கைக் கட்டிப்போட்டார் பாரதி கிருஷ்ணகுமார்.

கண்காட்சியில் பார்த்தவற்றையும், கல்வியாளர்கள் பேச்சில் கேட்டவற்றையும் எடுத்துக்கொண்டு கலக்குங்க மாணவர்களே!

- மு.முத்துக்குமரன்,  படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதிஷ்குமார்