Published:Updated:

அன்னவாசல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு - கொதித்தெழுந்த பொதுமக்கள் சாலை மறியல்

அன்னவாசல்  ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு - கொதித்தெழுந்த பொதுமக்கள் சாலை மறியல்
அன்னவாசல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு - கொதித்தெழுந்த பொதுமக்கள் சாலை மறியல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அன்னவாசல் அருகே திடீரென ஜல்லிக்கட்டுப்  போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், கொதித்தெழுந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அன்னவாசல்  ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு - கொதித்தெழுந்த பொதுமக்கள் சாலை மறியல்


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள தான்றீஸ்வரத்தில், சத்ரு சம்ஹார மூர்த்தி கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஏற்கெனவே, மார்ச் 13-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிந்திருந்தது. 

 போட்டிக்காக, உள்கட்டமைப்புப் பணிகளான வாடிவாசல், காளை வெளியேறும் பகுதி, தடுப்புக் கட்டை, முக்கிய பிரமுகர்கள் அமரும் மேடை, காளைக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் இடம், மருத்துவ முகாம், வருவாய்த் துறை முகாம் உட்பட, பல்வேறு முன்னேற்பாடுகள் நிறைவடைந்த நிலையில், திடீரென நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு தேதியைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியை நிறுத்திவைத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். இந்த நிலையில், திடீரென  அனுமதி மறுக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விராலிமலை - புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த அன்னவாசல் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் விரைவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் கலைந்துசென்றனர். இந்த போராட்டம் காரணமாக 1 மணி  நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.