Published:Updated:

துடைப்பத்தால் அடித்தால் உறவு மேம்படும் - ஆண்டிபட்டியில் நடந்த விநோத திருவிழா

ஆண்டிபட்டி அருகே துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா!

துடைப்பத்தால் அடித்தால் உறவு மேம்படும் - ஆண்டிபட்டியில் நடந்த விநோத திருவிழா
துடைப்பத்தால் அடித்தால் உறவு மேம்படும் - ஆண்டிபட்டியில் நடந்த விநோத திருவிழா

ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது.

துடைப்பத்தால் அடித்தால் உறவு மேம்படும் - ஆண்டிபட்டியில் நடந்த விநோத திருவிழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது மறவப்பட்டி கிராமம். இங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா மூன்று நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழாவின்போது மாமன், மைத்துனன் உறவு முறைகளைக் கொண்டவர்களை ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் அக்கிராமத்தினர். திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று இந்த விநோத நிகழ்வு நடைபெற்றது.

துடைப்பத்தால் அடித்தால் உறவு மேம்படும் - ஆண்டிபட்டியில் நடந்த விநோத திருவிழா

மேலும், சேற்றில் படுத்து உடல் முழுவதும் சேறு அப்பிக்கிடக்கின்றபோது தங்களின் உறவினர்களை அழைத்து துடைப்பத்தால் அடிவாங்கிக்கொள்ளும் நிகழ்வும் நடந்தது. இந்த திருவிழாவைக் காண அருகில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மறவப்பட்டிக்கு படையெடுத்துவந்தனர்.  `என்னதான் ஊரே சேர்ந்து மாமன் மைத்துனன் உறவுகளை துடைப்பத்தால் வெளுத்து வாங்கினாலும், மற்ற ஊர்க்காரர்கள் மீது துடைப்பத்தை வைப்பதில்லை. இப்படி துடைப்பத்தால் அடிக்கும்போது உறவு மேம்படும், தோஷங்கள் நீங்கும்’ என்கிறார்கள் மறவப்பட்டி கிராமத்தினர்.

Vikatan