Published:Updated:

`எனக்கு ரேஷன் அரிசிதான்; காளைகளுக்கு பால், முட்டைதான் உணவு!'- ரேக்ளாவில் சாதித்தவர் பெருமிதம்

இரா.கோசிமின்

காளை

`எனக்கு ரேஷன் அரிசிதான்; காளைகளுக்கு பால், முட்டைதான் உணவு!'- ரேக்ளாவில் சாதித்தவர் பெருமிதம்
`எனக்கு ரேஷன் அரிசிதான்; காளைகளுக்கு பால், முட்டைதான் உணவு!'- ரேக்ளாவில் சாதித்தவர் பெருமிதம்

`நாங்க ரேஷன் அரிசி சாப்பிட்டாலும் காளைகளுக்கு சத்தான உணவுகளைக் கொடுப்போம்' என மாட்டுவண்டிப் பந்தயத்தில் முதலிடம் பிடித்தவர் தெரிவித்தார்.

`எனக்கு ரேஷன் அரிசிதான்; காளைகளுக்கு பால், முட்டைதான் உணவு!'- ரேக்ளாவில் சாதித்தவர் பெருமிதம்

திருச்சுழி அருகே உள்ள பரளச்சி கிராமத்தில், 8 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சுந்தரவள்ளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு 11-ம் ஆண்டு மாட்டுவண்டிப் பந்தயம் இன்று காலை நடைபெற்றது. இதில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சிறிய மாடு மற்றும் பெரிய மாடு என 2 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாடுகள், பந்தய தூரத்தை நோக்கி ஓடி வந்தபோது, சுற்றி இருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். பெரிய மாடு பிரிவில், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளமாச்சம்பட்டியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரும், சிறிய மாடு பிரிவில் தூத்துக்குடி மாவட்டம் முத்தூரைச் சேர்ந்த மாடசாமி என்பவரும் முதலிடம்பெற்றனர்.

பெரிய மாடு பிரிவில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.20,000, இரண்டாம் பரிசாக ரூ.17,000, மூன்றாம் பரிசாக ரூ.15,000 வழங்கப்பட்டது. அதேபோல சிறிய மாடு பிரிவில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு, முதல் பரிசாக ரூ.17,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.12,000 வழங்கப்பட்டது.

`எனக்கு ரேஷன் அரிசிதான்; காளைகளுக்கு பால், முட்டைதான் உணவு!'- ரேக்ளாவில் சாதித்தவர் பெருமிதம்

பெரிய மாடு பிரிவில் வெற்றிபெற்ற செல்லப்பாண்டி கூறும்போது, ``கடந்த 40 ஆண்டுகளாக மாட்டுவண்டிப் பந்தயத்தில் பங்கேற்று வருகிறேன். நாம ரேஷன் அரிசி சாப்பிட்டாலும் பால், முட்டை என காளைகளுக்கு சத்தான உணவுகளைத்தான் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவை பலமாக இருக்கும். போட்டிகளில் பல கி.மீ தூரம் ஓடி வெற்றிபெற முடியும். இதுவரை மதுரை, திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி எனப் பல இடங்களில் நடந்த போட்டிகளிலும் எங்கள் மாடுகள் வெற்றிபெற்றுள்ளன'' என்று தெரிவித்தார்.

Vikatan