சாதனைப் பெண்களை மேடையேற்றி கௌரவிக்கும் ‘அவள் விருதுகள்’ விழா, பிப்ரவரி 15 அன்று சென்னையில் கொண்டாட்டமாக நடந்து முடிந்தது. 16 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட, விழாவைத் தொகுத்து வழங்கினார்கள் அஞ்சனாவும் மிர்ச்சி விஜய்யும்.

93 வயதான, கடந்த 63 வருடங்களாக புற்றுநோயாளிகளுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துவரும் டாக்டர் சாந்தாவுக்கு ‘தமிழன்னை விருது’ வழங்கப்பட்டபோது, அரங்கமே அந்த சமகால வரலாற்றுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியது. விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை சாந்தாவிடம் வழங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பில் சாதித்துவரும் ஈரோடு தமிழ்ச்செல்விக்கு ‘பசுமைப்பெண்’ விருது அளிக்கப்பட்டது.
‘பிசினஸ் குயின்’ விருதைப் பெற்றார் மதுசரண். ப்ளஸ் டூவுக்குப் பிறகு கல்லூரிக்குச் செல்ல முடியாத குடும்பச் சூழல். அடிப்படை கணினி பயின்று, மாதம் ரூ.750 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்த மதுசரண், இந்தியாவிலேயே முதல் டெஸ்ட்டிங் பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்தவர்... பல மாநிலங்களில், 45 கிளைகளைத் தொடங்கி நடத்தும் அளவுக்கு முன்னேறியவர்... ஐ.டி துறையின் வீழ்ச்சியால் வாழ்க்கையை மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலை.
இந்தியாவிலேயே முதல் டெஸ்ட்டிங் பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்த மதுசரண் ‘பிசினஸ் குயின்’ விருதைப் பெற்றார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் மதுசரண் காட்டியது அசுரப் பாய்ச்சல். பியூட்டி சலூன், ஸ்கின் கேர், ஹேர் கேர், ரெஸ்டாரென்ட், டே கேர் ஸ்கூல் என 10 நிறுவனங்களை நடத்தி, ஆண்டுக்கு 120 கோடி ரூபாய்க்கும் மேல் டர்ன் ஓவர் எடுத்து, 5,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களை உருவாக்கிய இவருக்கு ‘பிசினஸ் குயின்’ விருது வழங்கப்பட்டது. “ஆண்கள் நிரம்பிய கார்ப்பரேட் உலகில் தங்களை நிலைநிறுத்தப் போராடும் சிங்கப் பெண்களுக்கு நான் பெற்ற விருதை சமர்ப்பிக்கிறேன்’’ என்ற மதுசரணின் கம்பீரத்துக்கு சல்யூட்!

`பிசினஸ் குயின்’ விருதைத் தொடர்ந்து நாணயம் விகடனும், மார்க்கெட் ஆஃப் இந்தியாவும் இணைந்து வழங்கும் ‘டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ் 2020’-ன் லோகோவை எஸ்பிஆர் சிட்டி இயக்குநர் நவீன் ரங்கா மற்றும் தொலைக்காட்சிப் பிரபலமும் டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
இனிவரும் மாதங்களில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நாணயம் விகடன் சார்பில் சிறந்த வர்த்தகர்களுக்கான ‘டிரேட் சாம்பியன் விருதுகள்’ வழங்கும் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.