Published:Updated:

உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உணவுக் கொண்டாட்டம்!

யம்மி விருதுகள்
பிரீமியம் ஸ்டோரி
யம்மி விருதுகள்

யம்மி 2019

உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உணவுக் கொண்டாட்டம்!

யம்மி 2019

Published:Updated:
யம்மி விருதுகள்
பிரீமியம் ஸ்டோரி
யம்மி விருதுகள்

ணவுடன் சுவை, தரம், திருப்தியையும் சேர்த்துப் பரிமாறும் கரங்களுக்கு அங்கீகாரம் அளித்துக் கொண்டாடும் அவள் விகடன் கிச்சன் ‘யம்மி விருதுகள்’, கடந்த செப்டம்பர் 22 அன்று சென்னை ஃபெதர்ஸ் ஹோட்டலில் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. ருச்சி மேஜிக் பிக்கிள்ஸ் - ஏழாம் சுவை, SKM Best Egg White Cube மற்றும் ஆம்பூர் ஸ்டார் பிரியாணி நிறுவனங்கள், இந்தக் கொண்டாட்டத்தை இணைந்து வழங்கின.

உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உணவுக் கொண்டாட்டம்!

‘சிறந்த சைவ உணவக'த்துக்கான விருதை திருவாரூரின் ‘வாசன் கபே’ பெற்றது. திருவாரூருக்குப் புகழ் கடப்பா என்றால், கடப்பாவுக்கே புகழ் ‘வாசன் கபே’தான்! உரிமையாளர் முருகானந்தத்துக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை இயக்குநரும் பரதநாட்டியக் கலைஞருமான கவிதா ராமு ஐ.ஏ.எஸ் விருது வழங்கி கௌரவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`சிறந்த தீம் உணவக'த்துக்கான விருதை, சென்னை ஆழ்வார்பேட்டை யிலுள்ள ‘ட்விஸ்டி டெயில்ஸ்’ உணவகம் பெற்றது. `நேர்கொண்ட பார்வை’ அபிராமியும் இசைக் கலைஞர் மோகன் வைத்யாவும் விருதை வழங்க, ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் ரேகா, விக்ரம் நாய்க்குட்டிகளையும் தங்களோடு அழைத்து வந்து விருதைப் பெற்றனர். “இதுவரை செல்லப்பிராணிகளை கொஞ்சுவதற்காக மட்டுமே எங்கள் ரெஸ்டாரன்டுக்கு வந்தவர்கள், வரும் நாள்களில் தங்கள் வீட்டுச் செல்லங்களையும் அங்கு அழைத்து வரலாம். நாய்களுக்கான ஸ்பெஷல் மெனு ஒன்றை நாங்கள் தயாரித்து வருகிறோம்’’ என்றனர்.

உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உணவுக் கொண்டாட்டம்!

‘சிறந்த பாரம்பர்ய உணவகம்’ விருதைப் பெற்றவர்கள், ‘99 கிலோமீட்டர் காபி ஸ்டாப்’பின் உரிமையாளர்கள் ஜெனிபர் சாலமன் மற்றும் ஜெயா சாலமன். அசத்தலான இந்த நெடுஞ்சாலை உணவகத்துக்கு, ஈரோடு மகேஷ் மற்றும் புகைப்பட நிபுணர் ஜி.வெங்கட்ராம் விருதளித்தனர்.

‘சிறந்த மெஸ் விருது’, தொழுதூர், ‘அக்கா கடை’க்குக் கிடைத்தது. அதன் உரிமையாளர் வசந்தி அக்கா மற்றும் அங்கு 20 வருடங்களாகப் பணிபுரியும் நான்கு அக்காக்களுக்கு, கோபிநாத், பொன்ப்யூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சேர்மன் பொன்னுசாமி மற்றும் அவர் மனைவி மனோரஞ்சிதம் ஆகியோர் விருதை வழங்கினர். அசைவ உணவுகளைக் கொண்டு விருந்துவைக்கும் அக்கா, சுத்த சைவமாம்! “இத்தனை வருஷத்துல, `சாப்பாடு போதுமாப்பா’னு நாங்க யாரையும் கேட்டதே இல்ல. `சாப்பாடு போடவா’ன்னுதான் கேட்போம்’’ என்று வசந்தி அக்கா சொல்ல, ‘`இப்படியான மனுஷங்களைத் தேடிக்கண்டுபிடிச்சு அங்கீகாரம் கொடுக்கிற அவள் விகடன், கீப் ராக்கிங்!” என்றார் கோபிநாத்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘சிறந்த இன்னோவேஷன்' விருது, `இட்லி' இனியவனுக்கு வழங்கப்பட்டது. இரண்டு இட்லிப் பானைகளுடன் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்குப் பிழைக்கவந்த இவருக்கு இன்று இட்லிதான் அடையாளம், அங்கீகாரம். இனியவனுக்கு விருது வழங்கி கௌரவித்தனர் நடிகை சாக்‌ஷி மற்றும் `ருச்சி மேஜிக் பிக்கிள்ஸ் - ஏழாம் சுவை'யைச் சேர்ந்த வெற்றிவேல்.

உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உணவுக் கொண்டாட்டம்!

‘சிறந்த உணவு அலங்கார நிபுணர்’ விருதைப் பெற்றவர், ஃபுட் ஸ்டைலிஸ்ட் வசந்தா தின்கர். தன் அம்மாவுக்கு விருது கொடுக்க சர்ப்ரைஸாக மேடையேறினார் சின்னத்திரை நடிகர் தீபக். கேன்சர் சர்வைவரான வசந்தாவை, ‘இவங்க ஒரு சூப்பர் வுமன்’ என்று கொண்டாடினார். தீபக்குடன் இணைந்து வசந்தாவுக்கு விருது அளித்தார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உணவுக் கொண்டாட்டம்!

‘சிறந்த இணையதள செஃப்’ விருதை, `தி டைனி ஃபுட்ஸ்’ சேனலின் ராம்-வளர்மதி தம்பதி பெற்றனர். மமதி சாரி, சின்னத்திரை பிரபலம் மோனிகா ஆகியோர் இவர்களுக்கு விருதளித்தனர்.

‘சிறந்த ஊட்டச்சத்து நிபுணர்’ விருதை பி.கிருஷ்ணமூர்த்திக்கு சின்னத்திரை நடிகர் ஸ்ரீ வழங்கினார்.

‘சிறந்த பிரியாணி’க்கான விருதை ‘தொன்னை பிரியாணி ஹவுஸ்’ பெற்றது. அதன் உரிமையாளர் ஜெயேந்திரன் தன் பணியாளர்களையும் மேடையேற்றி அழகு பார்க்க, அவர்களுக்கு விருதை வழங்கினார்கள் செஃப் தாமு, சின்னத்திரை நடிகை ரேமா மற்றும் நடிகர் சாய்சக்தி.

உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உணவுக் கொண்டாட்டம்!
உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உணவுக் கொண்டாட்டம்!

எஸ்கேஎம் பெஸ்ட் எக் வொயிட் க்யூப் யம்மி ஆப் விருதை ஸ்விகிக்கு வழங்கினார்கள் சின்னத்திரை நட்சத்திரங்கள் அமித் பார்கவ் மற்றும் நீலிமா ராணி. “ஸ்விகி இல்லைன்னா எனக்குப் பல நாள் சாப்பாடு இல்லங்க. அதனால விருது தர்றதுக்கு முன்னாடி, ஒரு ஹார்ட்ஃபுல் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்’’ என்று கலகலத்தார் நீலிமா ராணி.

ருச்சி மேஜிக் பிக்கிள்ஸ் ஏழாம் சுவை வழங்கும் அவள் விகடன் கிச்சன் யம்மி செஃப் விருது, சமையற்கலையில் இந்த வருடம் தன் ஐம்பதாவது ஆண்டைத் தொட்டிருக்கும் ‘மெனுராணி’ செல்லத்துக்கு வழங்கப்பட்டது.

75 வயதாகும் செல்லம்மாவுக்கு விருதளித்த செஃப் தேவ், தொகுப்பாளினி மகேஷ்வரி மற்றும் நடிகர் பவித்ரன், ‘நாங்க உங்க ஃபேன்ஸ்மா’ என்று சொல்ல, உச்சிகுளிர்ந்துவிட்டார் செல்லம்! இவரின் முன்னாள் மாணவிகளான நடிகை ஸ்ரீப்ரியா ஆடியோ வாழ்த்தும், தொகுப்பாளினி பிரியதர்ஷினி வீடியோ வாழ்த்தும் அனுப்பிவைக்க, நெகிழ்ந்துபோனார் செல்லம்மா.

உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உணவுக் கொண்டாட்டம்!

ஆம்பூர் ஸ்டார் பிரியாணி வழங்கும் டாப் டிரென்ட்செட்டர் விருதை ‘சாய் கிங்ஸ்’ நிறுவனம் பெற்றது. நடிகர் சதீஷ், நடிகை ரம்யா பாண்டியன், சாந்தி வில்லியம்ஸ், `நம்ம வீடு வசந்த பவன்' ரவி, `அடையாறு ஆனந்த பவன்' சீனிவாச ராஜா ஆகியோர் விருது வழங்கினர்.

‘சிறந்த அசைவ உணவகம்’ விருதைப் பெற்றுக்கொண்டனர், ஈரோடு, யுபிஎம் உணவகத்தின் நிறுவனர்கள் கருணைவேலும் அவர் மனைவியும்.அவர்களுக்கு ‘செம்பருத்தி’ சீரியல் நாயகி ஷபானாவும், ‘ஊர்வம்பு’ லக்ஷ்மியும் விருதை அளித்தனர். ஷபானாவிடம், `பார்வதியின் டிரேட் மார்க் புதினா டீயின் ரெசிப்பியைச் சொல்லச் சொல்லி அரங்கத்தைச் சிரிப்பொலியில் நிறைத்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா.

உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உணவுக் கொண்டாட்டம்!

விருதுகளின் இடையே `நீயா? நானா?' கோபிநாத், டாக்டர் செஃப் தாமு, ஈரோடு மகேஷ், மருத்துவர் சொக்கலிங்கம், நல்லெண்ணெய் சித்ரா , ரியோ ஆகியோர் கலந்துரையாடிய `ஃபுட் டாக்’ நிகழ்ச்சி கலகலப்பாக இருந்தது.

நிலவும் நட்சத்திரங்களும் வானில் தோன்றி ‘ஹாய்’ சொல்ல, விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அறுசுவை விருந்துண்டு ‘பை’ சொல்லி விடைபெற்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism