பெங்களூரு என்றாலே ஐ.டி நிறுவனங்களும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும்தான் நம் நினைவுக்கு வரும். நவீனமான தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதில் முன்னணியில் நிற்கும் பெங்களூரு, வணிக இலக்கியத்தை வளர்த்தெடுப்பதிலும் நாட்டுக்கே முன்னுதாரணமாக இருக்கிறது. பெங்களூரில் கடந்த 7-ம் தேதி `வீ வொர்க்’ அரங்கில், ‘வணிக இலக்கிய விழா’ ஐந்தாவது ஆண்டாகச் சிறப்பாக நடந்தது. 14 அமர்வுகள், முப்பதுக்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், முந்நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். பார்வையாளர்கள் பணம் செலுத்தி நிகழ்ச்சியில் பங்குபெற்றது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கியமான விஷயம்.

கதை சொல்வது என்பது ஒரு கலை. அதிலும் வணிகம் சார்ந்த கதை சொல்வது என்பது அவ்வளவு எளிதாக யாருக்கும் கைகூடி வருவ தில்லை. இதுபற்றிப் பேசிய அமீன் ஹாக், “பிதாகரஸ் தேற்றம், ஆர்கிமிடிஸ் விதி, சார்பியல் கோட்பாடு என்றால் என்னவென்று பார்வை யாளர்களிடம் கேட்க, ஓரிருவரைத் தவிர யாரும் பதில் சொல்லவில்லை. இவையெல்லாம் அனைவரும் படித்தவைதான். ஆனால், அவை உடனடியாக நினைவுக்கு வருவ தில்லை. இந்த விதிகளையும், கோட்பாடுகளையும் கதை வடிவில் ஒரு சம்பவமாக, நிகழ்வாகச் சொல்லிக்கொடுத்திருந்தால் அனைவருக்கும் `டக்’கென்று நினைவுக்கு வந்திருக்கும் என்றார். உதாரணமாக, ‘யுரேகா, யுரேகா என்று கத்திக்கொண்டே நிர்வாண மாகத் தெருவில் ஓடியவர் யார்’ என கேட்க பெரும்பாலானோர் ‘ஆர்கிமிடிஸ்’ எனக் கூறினர். ஆக, ஒரு செய்தியை/நிகழ்வைக் கதை வடிவில் சொன்னால், அது ஆண்டாண்டுக் காலத்துக்கும் மனதில் நிற்கும் என்றார்.

அடுத்த அமர்வில் பிரபல பத்திரிகையாளர் ஆர்.ஜெகநாதன் எழுதி சமீபத்தில் வெளிவந்த நூலான `The Job Crisis – How can India Leverage its Strengths?’ பற்றி, அசீம் பிரேம்ஜி ஃபவுண் டேஷனைச் சேர்ந்த சுதீஷ் வெங்கடேஷ் உரையாடினார். அப்போது ஜெகநாதன், ‘‘வேலை நெருக்கடி என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் இருந்து வருகிறது. `எம்ப்ளாய்மென்ட் எலாசிடிசிட்டி’ என்கிற வேலைவாய்ப்புக்கான நெகிழ்ச்சித்தன்மை மிகவும் குறைந்துவிட்டது. பொருளாதாரம் 10% வளர்ச்சியடைந்தாலும் வேலைவாய்ப்பு என்பது 0.1 சதவிகிதமே வளர்ச்சியடையும். முன்பு இருந்ததைப்போல் இல்லாமல் இப்போதெல்லாம் பொருளாதார மந்தம் அல்லது தேக்கம் ஏற்பட்டு அது மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு நீண்ட காலம் ஆகிறது. இன்றைக்கு மூலதனம் என்பது அபரிமித மாக இருக்கிறது. அதில் அதிகபட்ச தொகையானது ஒரு தொழிலில் முதலீடாகும்போது, அந்தத் தொழிலில் பல புத்தாக்கம் (Disruptive Innovation) நிகழ்கிறது. உதாரணமாக, டிரைவர் இல்லாமல் ஓடக்கூடிய கார். இது பெருமளவில் சந்தைக்கு வரும்போது இப்போதிருக்கும் டிரைவர்களின் நிலை என்ன ஆகும்? அவர்கள் தங்கள் திறமையை உயர்த்திக் கொள்வதை (Reskill) செய்துகொள்வதைத் தவிர, வேறுவழியில்லை. தேவைக்கேற்ப திறமை யாளர்களைப் பயிற்றுவிக்க வேண்டுமே தவிர, ஒரு தொழிலுக்குப் பலரைப் பயிற்றுவித்து சந்தைக்கு அனுப்புவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை” எனக் கூறினார்.

அடுத்து ‘நிறுவனங்களின் வரலாறு’ என்கிற தலைப்பில் நடந்த கலந்துரையாடலில், டாடா குழுமத்தில் ரத்தன் டாடா, சைரஸ் மிஸ்திரி, சந்திரசேகரன் என மூன்று தலைவர்களின்கீழ் பணிபுரிந்த முகுந்த் ராஜனின் (இவர் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் சகோதரர்) சமீபத்திய நூலான `The Brand Custodian – My years with the Tatas’ என்ற நூல் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் `பிராண்டிங் குரு’ ஹரிஷ் பிஜூர், பேரா.ரிஷிகேஷ் டி.கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். ‘`இந்தியாவில் வெற்றிகரமாகப் பல நிறுவனங்கள் இயங்கிவந்தாலும், அதன் வரலாறு பரவலாக யாராலும் அறியப்படுவதில்லை. இதற்கு விதி விலக்கு டாடா குழுமம் குறித்தும் டாடா குடும்பத்தினர் குறித்தும் எழுதப்பட்ட, எழுதப்பட்டுவரும் புத்தகங்கள். இந்திய கார்ப்பரேட் உலகில் நெறிமுறை, பண்புகள் ஆகிய வற்றிற்கு அன்றிலிருந்து இன்றுவரை பெயர் போனது டாடா குழுமம். டாடா குழுமம் குறித்து சுமார் 21 புத்தகங்கள் வந்திருக்கிறது’’ என்றார்.

“ஆரம்பத்திலிருந்து இன்றுவரை டாடா குழுமம் `வேலையை உருவாக்குவதற்காகவே’ இருந்து வந்திருக்கிறது. உதாரணம், இன்றைக்கு டி.சி.எஸ் நிறுவனத்தில் மட்டும் சுமார் நான்கு லட்சம் பேர் வேலைபார்க்கின்றனர். அதுபோல, டாடா ஸ்டீல் மற்றும் பல நிறுவனங்களைச் சொல்லலாம். டாடா குழுமம் இன்று வரை சமூக அக்கறையுடனே இயங்கி வருகிறது’’ என்றார் முகுந்த்.

மேனேஜ்மென்ட் குரு சி.கே.பிரகலாத் நினைவாக, கடந்த ஆண்டிலிருந்து சிறந்த வணிக இலக்கிய நூலொன்றுக்குப் பரிசளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அலோக் கேஜ்ரிவால் எழுதிய `Why I Stopped Wearing My Socks’ என்கிற புத்தகத்துக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது. பரிசை வழங்கி விழாவைச் சிறப்பித்தவர் நாராயணமூர்த்தி. அவருடன், இந்த விழாவின் தலைமைப் பொறுப்பாளரும், `மேனேஜ்மென்ட் நெக்ஸ்ட்’ இதழின் ஆசிரியருமான பெனடிக்ட் பரமானந்த் உரையாடினார். நாராயணமூர்த்தி சொன்ன பல விஷயங்கள் சுவாரஸ்யமானதாக இருந்தது.

‘‘நான் `டெக்னிக்கல்’ சம்பந்தப்பட்ட புத்தகங் களையே பெரும்பாலும் படிக்கிறேன். நாவல்கள், இலக்கியம் அல்லாத புத்தகங்கள் எதையும் அதிகம் படிப்பதில்லை. நான் சமீபத்தில் வாசித்த புத்தகம் `Our Mathematical Universe: My Quest for the Ultimate Nature of Reality’ (Max Tegmark என்பவர் எழுதியது). என் மனைவி சுதா மூர்த்தி எழுதிய பல புத்தகங்களில் நான் படித்தது `Wise & Otherwise’ என்கிற புத்தகத்தை மட்டும்தான்.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் முக்கிய மானவர் `மேனேஜ்மென்ட் குரு’ பீட்டர் எஃப் ட்ரக்கர் (Peter F Drucker). `Culture eats strategy for Lunch’ (நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு இல்லையெனில் எந்த உத்தியும் பலனளிக்காது) என்று அவர் சொன்னது இன்றும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்குப் பொருந்தும்’’ என்றார்.

‘‘இன்ஃபோசிஸ் குறித்தும் உங்களைக் குறித்தும் புத்தகம் ஏன் எழுதக்கூடாது’’ என்று நாராயண மூர்த்தியிடம் கேட்டார் பெனடிக்ட். ‘‘சுயசரிதை எழுத வேண்டுமானால், மிகவும் நேர்மையாக இருக்கவேண்டும். நேர்மையாக இருந்தால், அது பலரின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டிவரும். மற்றும் சுயதம்பட்டம் அடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை’’ என்றார் நாராயணமூர்த்தி.

அன்றைய இளைஞர்களைவிட இன்றைய இளைஞர்கள் மிகவும் துடிப்புடனும், தன்னம்பிக்கையுடனும், சாதிக்க வேண்டும் என்ற வேட்கையுடனும் இருப்பதாகக் கூறிய அவர், இளைஞர்களுக்குக் கூறிய அறிவுரை – ‘‘ஒழுக்கமாக இருங்கள், கடினமாக நேர்மையுடன் பேரார்வத்துடன் வேலை செய்யுங்கள், திறந்த மனதோடு இருங்கள். 1991-ம் ஆண்டு தாராளமய மாக்கலுக்குப்பின் கடந்த 25 வருடங்களில் நமது பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருக்கிறது. இப்போதிருக்கும் 5 சதவிகித வளர்ச்சி குறைவாகத் தெரியலாம். இது தற்காலிகமானதுதான்” என்றார்.

ஐந்தாம் ஆண்டு வணிக இலக்கிய விழா காலையில் சரியான நேரத்தில் ஆரம்பித்து, ஒரு விநாடிகூடத் தவறாமல், மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைந்தது `நேர மேலாண்மைக்கு’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதற்குப் பொறுப்பாளர்கள், பங்கேற்பாளர்கள், பார்வை யாளர்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் முக்கியக் காரணமாகும்.

வணிக இலக்கிய விழாவுக்கு அடுத்த சில ஆண்டுகளிலாவது சென்னை தயாராகுமா?