பிரீமியம் ஸ்டோரி

விழிப்புணர்வு

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்திய விழிப்புணர்வுக் கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்டின் க்ளெஸ்டர் மேனேஜர் வினோத்குமார், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைப் பெற ‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எப்படி உதவும்’ என விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

முதலீடு செய்ய வேண்டிய  தருணம் இதுதான்!

சந்தை, இறக்கத்தில் உள்ள நிலையில் என்ன செய்வது என்ற குழப்பம் முதலீட்டாளர்களுக்கு உள்ளதைப் புரிந்துகொண்ட மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், அதற்குத் தெளிவான விளக்கம் தந்தார். “2008-ம் ஆண்டில் சந்தை சரிவைச் சந்தித்தபோது, எஸ்.ஐ.பி முதலீட்டிலிருந்து வெளியேறிய பலர், சந்தை ஏற்றத்தின்போது முதலீட்டின் பலனை அனுபவிக்கத் தவறினார்கள்” என்றவர், அதனைப் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார். ‘‘சந்தை இறக்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். நல்ல ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளவர்கள் சந்தை ஏற்ற இறக்கங்களைத் தாண்டி, தொடர்ந்து முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்’’ என்றார் அவர்.

முதலீடு செய்ய வேண்டிய  தருணம் இதுதான்!

இலக்குகளுக்கேற்ப ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்வது எப்படி, சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பன போன்ற பல கேள்விகளுக்கு நிபுணர்கள் பதிலளித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு