Published:Updated:

ரூ.14 கோடி வருமானம்... உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சாதனை! - நபார்டு வங்கியின் தலைவர் பாராட்டு!

நிகழ்வில்..
பிரீமியம் ஸ்டோரி
நிகழ்வில்..

நாட்டு நடப்பு

ரூ.14 கோடி வருமானம்... உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சாதனை! - நபார்டு வங்கியின் தலைவர் பாராட்டு!

நாட்டு நடப்பு

Published:Updated:
நிகழ்வில்..
பிரீமியம் ஸ்டோரி
நிகழ்வில்..
ண்மையில் நபார்டு வங்கியின் தலைவராகப் பதவி ஏற்றுள்ள ஜி.ஆர்.சிந்தலா, முதன்முறையாகத் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். இதையொட்டி சென்னையில் உள்ள நபார்டு வங்கியின் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

தமிழ்நாடு மண்டல தலைமைப் பொதுமேலாளர் எஸ்.செல்வராஜ் பேசுபோது, “செப்டம்பர் 15-ம் தேதி விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் இயங்கிவரும், சீட்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்குச் சென்ற சிந்தலா, உழவர்களோடு கலந்துரையாடினார். அவர்களின் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி முயற்சி களைப் பாராட்டிய அவர், விவசாயிகள் ஒருங்கிணைந்து உழவர் உற்பத்தி நிறுவனங்கள் அமைப்பதன் மூலமாக உற்பத்தியை அதிகரிப்ப துடன், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் செல்வராஜ் மற்றும் சிந்தலா
பத்திரிகையாளர் சந்திப்பில் செல்வராஜ் மற்றும் சிந்தலா

16-ம் தேதி, மதுரையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், நபார்டு உதவியுடன் அமைத்துள்ள வேளாண் வர்த்தக அடைகாப்பு நிதி மையத்தின் நிர்வாகக் கட்டடத்தைத் தொடங்கி வைத்து, தொழிற்கூடத்துக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

17-ம் தேதி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கழகத்துக்குச் சென்ற சிந்தலா, வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனைச் சந்தித்துப் பேசினார். பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன், இந்தியாவின் விவசாய வளர்ச்சியிலும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்கும் திட்டத்துக்கும் நபார்டின் பங்களிப்பைப் பாராட்டினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்து, மறைந்த முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியம் உருவாக்கிய தேசிய அக்ரோ ஃபவுண் டேஷன் அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்றவர் அங்கே உழவர் உற்பத்தியாளர் நிறுவனப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.

நிகழ்வில்..
நிகழ்வில்..

மேலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தபோது, கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்துக்காக நபார்டின் 365 கோடி ரூபாய் கடனுதவிக்கான அனுமதிக் கடிதத்தை அவரிடம் வழங்கினார். தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் கூட்டுறவு வங்கிகள் மூலமாகக் கடனுதவியை அதிகரித்தல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குதல், சுயஉதவிக் குழுக்களை மின்னணு மயப்படுத்துதல், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களைக் கணினி மயப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். 18-ம் தேதி பல்வேறு வங்கியாளர்களுடன் கலந்துரையாடினார். நபார்டு வங்கி செயல் படுத்திவரும் திட்டங்களின் வளர்ச்சி நிலை பற்றியும் இன்னும் என்ன வகையான திட்டங்களை செயல்படுத்தலாம் என்பது பற்றியும் ஆலோசனை வழங்கினார்’’ என்றார்.

அடுத்து, நபார்டு வங்கியின் தலைவர் ஜி.ஆர்.சிந்தலா பேசும்போது, ``தமிழ்நாட்டின் சுற்றுப்பயணம் எனக்குப் புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சிறப்பாகவும் முன்னோடியாகவும் செயல்படுகின்றன. இந்திய அளவில் 8,000 நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 600 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். இதில் 3,400 விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர். ஆண்டுக்கு 14 கோடி ரூபாய்க்குப் பொருள்களை விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளார்கள்.

இந்தப் பெருந்தொற்று நேரத்தில், வேளாண் விளை பொருள்களை நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்து லாபம் பார்த்துள்ளார்கள். விவசாயிகள் தங்களை உற்பத்தியாளர்களாக மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், சந்தைப் படுத்தும் பணியிலும் ஈடுபடும்போதுதான், நல்ல லாபம் கிடைக்கும். அதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களே உதாரணம். வட இந்தியாவை ஒப்பிடும்போது, தமிழ் நாட்டில் உள்ள விவசாயிகள் தெளிவாகவும் முன்னோடி யாகவும் உள்ளனர்’’ என்றவர்,

‘‘வங்கிகளுக்கு கடன் வழங்குவது ரூ.4,000 கோடியிலிருந்து ரூ.8,000 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு தமிழகத்துக்குக் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.4,600 கோடி நிதி வழங்கப் படும். கொரோனா ஊரடங்கு காலத்திலும், அரசின் சிறப்பான நடவடிக்கையால், 3.4 சதவிகிதம் அளவுக்கு விவசாய உற்பத்தி அதிகரித்தது. இதனால், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். தென்மேற்குப் பருவமழையும் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு நல்ல பயனை அளித்துள்ளது. கடந்த ஆண்டு, தமிழகத்தில் விவசாய உள்கட்டமைப்புக்காக ரூ.16,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. கிராமப்புற வளர்ச்சிக்காக, 2.7 சதவிகித வட்டியில் கடன் வழங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டது. பெருந்தொற்று நேரத்திலும் அயராது விவசாயப் பணிகளைச் செய்துவரும், தமிழக விவசாயிகளைச் சந்தித்து பேசியது , உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. எனது தமிழகப் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது’’ என்றார், மகிழ்ச்சியுடன்.