பிரீமியம் ஸ்டோரி

நிகழ்வு

மெடிக்கல் டூரிஸத்தில் இந்தி யாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது தமிழகம். மெடிக்கல் டூரிஸம் துறையில் உள்ள வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்தியத் தொழில் நிறுவனங் களின் கூட்டமைப்பு (CII), ‘தமிழ்நாடு டிராவல் மார்ட் மற்றும் மெடிக்கல் வேல்யூ டிராவல் மார்ட் - 2019’ என்ற கண்காட்சியைச் சென்னை டிரேட் சென்டரில் நடத்தவிருக்கிறது. ‘‘செப்டம்பர் 19 முதல் 22-ம் தேதி வரை நடக்கும் இந்த நிகழ்வில் சர்வதேச அளவிலான 110 நிறுவனங்களும், இந்திய அளவிலான 437 நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன’’ என சி.ஐ.ஐ தமிழ்நாடு பிரிவின் தலைவர் எஸ்.சந்திரமோகன் தெரிவித்தார்.

நம் நாட்டில் வேறு மாநிலங்களில் இருப்பவர்களோ அல்லது வெளிநாடுகளில் வசிப்பவர்களோ, மருத்துவ சிகிச்சை செய்துகொள்வதற்காகத் தமிழகத்துக்கு வரவிரும்பினால், எந்தெந்த ஊரில் என்னென்ன மருத்துவ வசதிகள் கிடைக்கும், தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள எவ்வளவு கட்டணம் என்பது பற்றி இந்தக் கண்காட்சியில் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

மெடிக்கல் டூரிஸம்... முதலிடத்தில் தமிழகம்..!

இந்தக் கண்காட்சியில் பல்வேறு தலைப்பின்கீழ் கருத்தரங்கமும் நடக்கவிருக்கிறது. மெடிக்கல் டூரிஸம் பிரிவில் உலக அளவில் முக்கியமான பல நிறுவனங்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள விருக்கின்றன. 22-ம் தேதியன்று பொதுமக்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்ளலாம். மெடிக்கல் டூரிஸத்தில் ஆர்வம் கொண்டவர்கள் இந்தக் கண்காட்சிக்குச் சென்றுவரலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு