Published:Updated:

ஆப்ஸ்

ஆப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆப்ஸ்

ஆப்ஸ்

160. Mentalup:

ஞாபகத்திறன். கவன ஒருங்கிணைப்பு, கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றுக்கு உதவும் ஆப். குழந்தைகளின் அறிவு மற்றும் மொழியியல் திறன்களை மேம்படுத்த உதவுகிறது. தினசரி டாஸ்க்குகளைச் சிறப்பாகச் செய்வதன் மூலம் அதிக மதிப்பெண்ணைக் குவிக்கலாம்.

161. Code spark:

குழந்தைப் பருவத்திலேயே கோடிங் (Coding) சம்பந்தப்பட்ட விஷயங்களின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப். தினசரி கொடுக்கப்படும் டாஸ்க்குகளைச் சிறப்பாகச் செய்வதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்.

162. Brain it on:


இயற்பியல் அடிப்படையிலான புதிர்களை விடுவிப்பதே ப்ரெய்ன் இட் ஆன். ஒவ்வொரு புதிரையும் சரியான உருவத்தை வரைவதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும். ஒரு புதிரை தீர்க்க பல வழிகள் இருந்தாலும், மிகச் சரியான முறையில் வரைந்தால் அதிகமான ஸ்டார்களை வென்று அடுத்தடுத்த லெவல்களுக்குச் செல்லலாம்.

ஆப்ஸ்

163. Nova launcher:

பல வருடங்களாக லான்ச்சர் ஆப்களில் முதல் சாய்ஸாக இருப்பது நோவா லான்ச்சர். அனைவருக்கும் ஒரே மாதிரியான விஷயங்கள் என்றில்லாமல், உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் வசதிகொண்டுள்ளது. இதிலேயே பணம் கட்டி உபயோகப்படுத்தும் ப்ரைம் வெர்ஷன் ஒன்றும் உள்ளது.

164. Swift keyboard:

உலக அளவில் 250 பில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. டைப் செய்ய ஆரம்பிக்கும்போதே யூகித்து முன்கூட்டியே சொற்களைக் காண்பிக்கும்.

165. Google maps:

அனைவரது மொபைலிலும் இருக்கும் ஒரு செயலி. இந்தச் செயலி உலகில் உள்ள 200 நாடுகளின் மொத்த வரைபடத்தையும் தன்னுள் வைத்திருக்கிறது.

166. Google duo:

வீடியோ காலிங்குக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் செயலி. லாக் இன் செய்து நம்பரை சரிபார்த்துவிட்டால் போதும். சாதாரணமாக போன் கால் செய்வதுபோல யூடியூபில் வீடியோ காலிங் செய்யலாம்.

167. Google assistant:

அஸிஸ்டன்டாக இருக்க தகவல்கள் மிக மிக முக்கியம். அஸிஸ்டன்ட் ஆப் வரிசையில் கூகுளுக்கே முதல் இடம். ஒரு வார்த்தை சொன்னால் போதும், ஓராயிரம் தகவல்களைக் கொட்டும்.  ஸ்மார்ட்போனில் மட்டுமல்ல, ஸ்மார்ட் வாட்ச்சிலும் வேலை செய்யும்.

168 Evernote:

பேனா, பென்சிலுக்கு ஓய்வுகொடுக்கும் எவர்நோட் செயலி. எந்த வகையான ஃபார்மெட்டிலும் நோட்ஸ் எடுக்கலாம். எழுத்து, ஓவியம், படம், ஆடியோ, வீடியோ என அனைத்தும் ஒத்துப்போகும். எடுத்த நோட்ஸை ஹோம் ஸ்கிரீனிலும் வைக்கலாம். மாணவர்களுக்கு அவசியமான செயலி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆப்ஸ்

169.  Feedly:

இணையப் பத்திரிகை, வலைப்பூக்கள், யூடியூப் வீடியோக்கள் என அனைத்துச் செய்திகளையும் ஒரே இடத்தில் காணப் பயன்படும் செயலி.

170 . Google news and weather:

பிடித்த தலைப்புகளில் செய்திகளைப் பெறவும், துல்லியமான வானிலை நிலவரத்தை அறியவும் பயன்படும் சிறந்த செயலி. அருகில் உள்ள இடத்தின் வானிலை நிலவரத்தையும் துல்லியமாகச் சொல்லிவிடும்.

171. Tiny scanner:

எந்த வகையான டாக்குமென்ட்டையும் ஸ்கேன் செய்து படமாகவோ, பி.டி.எஃப் ஆகவோ வைத்துக்கொள்ள உதவும் செயலி. தகவலை எடிட் செய்யலாம். மெயில் மூலமும் பகிரலாம். ஒரு பாஸ்கோட் மூலம் தகவல்களைப் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ளலாம்.

172. Shazam:

இசைப் பிரியர்களால் பெரிதும் விரும்பப்படும் செயலி. எங்கேனும் ஒரு பாடல் ஒலிக்கும்போது, அதன் அருகில் இந்தச் செயலியை ஆன் செய்தால் போதும். அது என்ன பாடல் எனத் தேடி, மொபைலில் டவுன்லோடு செய்துவிடும்.

173. Unified remote:

ப்ளூடூத் அல்லது வை-பை மூலம் தொலைவிலிருந்தே உங்கள் கணினியை மொபைல் மூலம் இயக்கலாம். விண்டோஸ், லினக்ஸ், மேக் என அனைத்து இயங்கு தளத்தையும் சப்போர்ட் செய்யும்.

174. Pics art:

100 மில்லியன் பயனர்களின் அமோக ஆதரவைப் பெற்ற போட்டோ எடிட்டர் செயலி. எடிட் செய்த புகைப்படத்தைப் பகிர்ந்துகொள்ள அதனுள்ளேயே ஒரு சமூக வலைதளத்தை வைத்திருக்கக் கூடிய ஒரே செயலி.