Published:Updated:

நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கிறதா ‘சோஷியல் இன்ஜினீரிங்’?

நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கிறதா ‘சோஷியல் இன்ஜினீரிங்’?
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கிறதா ‘சோஷியல் இன்ஜினீரிங்’?

நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கிறதா ‘சோஷியல் இன்ஜினீரிங்’?

ளும் பி.ஜே.பி கட்சியின் அதிகாரபூர்வ இணையதளம், மார்ச் 5-ம் தேதி மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. கடைசிவரை அதை மீட்க முடியவில்லை. வேறு வழியில்லாமல், வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு முன்தினம் படாதபாடுபட்டு புதிய இணையதளத்தை உருவாக்கியிருக்கிறது பி.ஜே.பி. இதேபோல் மார்ச் 15-ம் தேதி குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் இணையதளமும் முடக்கப் பட்டிருக்கிறது. நாட்டின் இரண்டு மிகப்பெரிய கட்சிகளின் அதிகாரபூர்வத் தளங்களையே முடக்கியிருக்கிறார்கள் என்றால் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை ‘சைபர் க்ரைம்’ நடக்கக்கூடுமோ என்ற கவலை, கட்சிகளைத் தொற்றிக்கொண்டுள்ளது.

அடுத்த வருத்தம்... தேர்தல் பரப்புரை பற்றியது. ஒரு கட்சியின் வெற்றி, பரப்புரையில் மட்டும் கிடைப்பதில்லை. பரப்புரையை யாருக்கு, எப்படிப் பரப்புகிறோம் என்பதில்தான் அடங்கியிருக்கிறது. அந்தக் காலம்போல, தாரை தப்பட்டையுடன் ஊர்வலம், போஸ்டர், சுவர் விளம்பரம் என்று ஊரே அல்லோகலப்படும் சூழல் இப்போது இல்லை. எல்லாப் பரப்புரைகளும் உள்ளங்கைக்குள் உடனுக்குடன் வந்து விடுகின்றன. உதாரணத்துக்கு அம்மா கட்சி, அப்பா கட்சி என இரண்டு கட்சிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். இதில் அம்மா கட்சி செய்த சில தவறுகள், நீங்கள் அடிக்கடி பயன்படுத்துகிற தளத்தில் தேர்தல் நடக்கிற பத்து நாள்களுக்கு முன்பு செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், புகைப்படங்களாகவும் உங்கள் பார்வைக்கு வந்துகொண்டேயிருக்கும். எந்த இணையப் பக்கத்தைத் திறந்தாலும் அவை துரத்தும். அதுவரையிலும் நடுநிலையுடன் இருந்த உங்கள் மனது, அப்பாவின் கட்சிக்கே ஆதரவு என்ற முடிவை எடுக்கும். இது அப்பா கட்சியின் வேலைதான். இந்த அவசர யுகத்தில் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயும் அளவுக்கு, பொறுமையோ, அக்கறையோ யாருக்குமில்லை. அப்படி இருக்கையில் இப்படி வந்து விழும் செய்திகள், நம்மை ஒரு முடிவுக்குள் தள்ளுகின்றன. தேர்தல் காலத்தில் பரப்பப்படுகிற பல வதந்திகள், தேர்தலில் ஒருவரின் வெற்றிக்கோ, தோல்விக்கோ காரணமாகிவிடுகின்றன. இதுதான் ‘சோஷியல் இன்ஜினீரிங்’. அதாவது நாட்டின், நாட்டு மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இடத்துக்கு வந்துசேர்ந்துள்ளது ‘சோஷியல் இன்ஜினீரிங்’! 

நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கிறதா ‘சோஷியல் இன்ஜினீரிங்’?

இந்த ஆபத்துக்குக் கட்சிகள் வைத்திருக்கிற பெயர் ‘வியூகம்’. நாம் எந்தச் செய்தியைப் பார்க்கவேண்டும் என்பதில் தொடங்கி நாம் எதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுவரை, எல்லாவற்றையும் ‘சோஷியல் இன்ஜினீரிங்’ தீர்மானிக்கிறது. 2014-ம் ஆண்டு மோடி ஆட்சியைக் கைப்பற்றியதற்கும், டிரம்ப்  அமெரிக்காவில் ஆட்சியைப் பிடிப்பதற்கும் காரணம் இந்த வியூகம்தான்.  இதற்காகப் பலர் இரவு பகலாகப் பணியாற்றிக்கொண்டிருக் கிறார்கள். இதற்கெனக் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. சில கட்சிகள் ஒப்பந்த அடிப்படையில் இந்த வேலையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிடுகின்றன. சம்பந்தப்பட்ட கட்சிகள் அவர்களிடம், ‘எங்களுக்கு இவ்வளவு லைக்குகள் வேண்டும், இவ்வளவு ஷேர்கள் வேண்டும்’ என டார்கெட் நிர்ணயிக்கின்றன. சம்பந்தப் பட்ட நிறுவனங்களும் கிடைக்கிற செய்திகளைப் போகிற போக்கில் பதிவு செய்துவிட்டுப் போய் விடுகிறார்கள்.

சைபர் க்ரைம் குறித்து உலகத் தகவல் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனத்தை அமெரிக்காவில் நடத்தி வருகிறார் சண்முகவேல் சங்கரன். அவர் நம்மிடம், ‘‘இந்தத் தேர்தலில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில், ‘சோஷியல் இன்ஜினீரிங்’ முக்கியக் காரணியாக இருக்கும். இன்றைக்கு 100-ல் 75 பேர், ஏதோ ஒரு தளத்தில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தையாவது செலவிடுகிறார்கள். எல்லாக் கட்சிகளுமே சமூக வலைதளங்கள் மூலமாகக் கட்சியை வளர்க்கலாம் என்பதை நம்புகிறார்கள். அதற்காக ஒவ்வொரு கட்சியும் தகவல் தொழில்நுட்ப அணியை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தங்களது கட்சிக்கு எதிராகப் பரப்பப்படுகிற ஒவ்வொரு குற்றச்சாட்டையும், முறியடித்து அதற்குப் பதிலடி கொடுப்பதும் - தங்களுக்கு எதிரான கட்சி மீது குற்றச்சாட்டை பரப்புவதுமே இந்த அணிகளின் வேலை.

நம்பத் தகுந்த செய்தித் தொலைக்காட்சிகளின் பெயர்களையும் லோகோவையும் பயன்படுத்திச் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டதுபோல, பல போலியான செய்திகளைப் பரப்புவதும் சமீபமாக அதிகரித்திருக்கிறது. அதன் உண்மைத் தன்மை குறித்து அறியாத ஒருவரிடம், அந்தத் தவறான செய்தி சென்று சேர்ந்தால், பொய் உண்மையாகிவிடும். இந்த விஷயத்தில் ஊடக நிறுவனங்கள் மிகுந்த கவனமுடன் இருந்தாலும், இவற்றை யார் எங்கிருந்து பரப்புகிறார்கள் என்பதைக் கண்டறிவது கடினம்” என்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கிறதா ‘சோஷியல் இன்ஜினீரிங்’?

இணைய உலகில் பொய் உண்மையாகவும், உண்மை பொய்யாகவும் மாறிவிடுகின்றன. மீண்டும் அதை உண்மை என நிரூபிப்பதற்கான காலக்கெடு இங்கே யாருக்கும் தரப்படவில்லை. பதிவிட்டவர் நினைத்தால் திரும்பப் பெறமுடியும். ஆனால், அதனால் எந்தப் பலனும் இருக்காது. காரணம், பதிவிட்டதுமே பலரும் ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்ட பல வகைகளிலும் அதை பரப்பியிருப்பார்கள். அவை அழிக்கவே முடியாத அளவுக்கு இணையம் முழுக்க வெவ்வேறு வடிவங்களில் நிரம்பி வழியும்.

அதனால், சமூகவலைதளங்களின் பங்களிப்பு, கட்சிகளுக்குப் பலத்தை விட, கவலைகளையே அதிகம் தருகின்றன. ஆனாலும், இவை எதையுமே பயன்படுத் தாதவர்களின் வாக்குகளை வாங்குவது தனி சவாலாகத்தான் இருக்கிறது. ஏனெனில், சாமானியர்களின் இதயங்களை இணையத்தால் ஒருபோதும் அறியமுடியாது!

- அ.ஜார்ஜ் அந்தோணி