Published:Updated:

வழிகாட்டியது மோட்டார் விகடன் - எம்ஜி-க்கு ஸ்கேல் மாடல் செய்யப்போகும் நமது வாசகர்!

TT காரின் டிசைனர் பீட்டர் ஷ்ரேயருடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
TT காரின் டிசைனர் பீட்டர் ஷ்ரேயருடன்...

சாதனை: டிசைன் படிப்பு

``அம்மா, ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதா வந்துட்டேன்’’ என்பான் சிறுவன். “வெரிகுட், எத்தனை பேர் ஓடினாங்க?’’ என்றால், “ரெண்டு பேர்’’ என்பான். இது போன்ற காமெடியில்லை ஷரோன் ராமலிங்கம் சாதித்தது.

மாணவர்களுக்காக லண்டனில் நடக்கும் ஒரு பிரிட்டன் நிறுவனம் நடத்தும் போட்டி. 10 இல்லை; 100 இல்லை… மொத்தம் 700 பேர் கலந்து கொண்ட அந்தப் போட்டியில் டாப்-11 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அந்த டாப்-11-ல் திறமைசாலியான 4 பேரை மட்டும் ஃபில்டர் செய்து, தங்கள் நிறுவனத்தில் இன்டெர்ன்ஷிப் செய்ய ஒரு அரிய வாய்ப்பு அளிப்பதுதான் அந்தப் போட்டி!

வழிகாட்டியது மோட்டார் விகடன் - எம்ஜி-க்கு ஸ்கேல் மாடல் செய்யப்போகும் நமது வாசகர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த 700 பேரில் பாதிக்குப் பாதி… அதாவது 350 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். 300 பேர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். மீதம் உள்ள 50 பேர் மற்ற நாட்டுக்காரர்கள். அந்த 50 பேரில் வெறும் 4 பேர்தான் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள். அந்த 4 பேரில் ஒருவர்தான் ஷரோன் ராமலிங்கம். 700-ல் டாப்-11-க்குத் தேர்வாகி, அந்த 11-ல் 4-ல் ஒருவராக வருவதற்கு ஒரு மாணவருக்கு எத்தனை திறமையும் தன்னம்பிக்கையும் வேண்டும்!

“அந்தந்த நாட்டு மாணவர்களோட திறமையைப் பார்த்து முதல்ல பயந்தேன். இப்போ அந்த பயமெல்லாம் போயிடுச்சு. அந்த கம்பெனியில் நான் டிசைன் செய்யப் போற ஒரு கார், நம்மைப் பற்றிப் பேசணும். அதான் டார்கெட்!’’ என்று தன்னம்பிக்கையோடு சொன்னார் ஷரோன் ராமலிங்கம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

போட்டி நடத்திய அந்த நிறுவனம் எம்ஜி. அந்தப் போட்டி, கார் டிசைன் சம்பந்தமானது. அந்தப் போட்டியில் ஜெயித்த 4 பேரில் ஒருவர்தான் கோவில்பட்டியைச் சேர்ந்த ஷரோன் ராமலிங்கம். மோ.வி-யும், ஆயா டிசைன் அகாடமியும் சேர்ந்து நடத்திய ஒர்க்ஷாப் மூலம்தான் கார் டிசைனுக்கென்று இப்படி ஒரு துறையே இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டதாகச் சொல்லும் ஷரோன், இப்போது லண்டனில் உள்ள மிகப் பெரிய ராயல் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் (RCA ) கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அசோக் லேலாண்ட் டிசைன் சீஃப் சத்தியசீலன், தனது வொர்க்ஷாப்பில் அடிக்கடி இந்தக் கல்லூரியின் பெயரைக் குறிப்பிட்டுக் கொண்டே இருப்பார். காரணம் - டிசைனுக்கு, குறிப்பாக கார் டிசைனுக்கு இந்தக் கல்லூரிதான் உச்சம். இங்கே சீட் கிடைத்தாலே அவர்கள் தேர்ந்த டிசைனர் ஆவதற்கான பாதை உறுதி செய்யப்பட்டுவிடும்.

வழிகாட்டியது மோட்டார் விகடன் - எம்ஜி-க்கு ஸ்கேல் மாடல் செய்யப்போகும் நமது வாசகர்!

அடுத்த மாதம் எம்ஜி நிறுவனத்துக்காக ஷாங்காய் பறக்க இருக்கும் ஷரோனை வீடியோ காலில் பிடித்தேன். ஏதோ கார் ஒன்றை வரைந்து கொண்டு, ஸ்கேல் மாடல் டிசைன் செய்து கொண்டிருந்தவர், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

“எனக்குச் சின்ன வயசில் இருந்தே கார், பைக்னா ரொம்பப் பிடிக்கும். அதை வரையறது அதைவிடப் பிடிக்கும். நான் அடிப்படையில் ஓவியர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன். நீங்க காலண்டர்ல பார்ப்பீங்கள்ல… சாமி படங்கள்... அதில் பல எங்க தாத்தா ராமலிங்கம் வரைஞ்சது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2015-ல்தான் மோட்டார் விகடனும் சத்தியசீலன் சாரும் எனக்கு அறிமுகமா னாங்க! நான் BE படிச்சிட்டிருந்தபோது, எங்க காலேஜில் மோட்டார் விகடன் நடத்தின டிசைன் ஒர்க்ஷாப்பில் கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. அதில் கலந்துக்கிட்டப்புறம்தான் தெரிஞ்சது… ஆஹா டிசைனுக்குனு ஒரு படிப்பே இருக்குனு! சத்தியசீலன் சார்தான் கைடு பண்ணினார். அப்போதான் NID (National Institute of Design) CEED என்ட்ரன்ஸ் எக்ஸாம் பத்திச் சொன்னார். அந்த வருஷம் க்ளியர் பண்ண முடியலை. வேலை பார்க்கலாம்னு நெனைச்சேன். “மனசு தளராத… திரும்பவும் எழுது’’னு சொல்லி, சத்தியசீலன்தான் அவரோட ஆயா அகாடமியில் என்னை வேலைக்குச் சேர்த்துக்கிட்டார். அப்போதான் நிறைய கத்துக்கிட்டேன். திரும்பவும் NID எக்ஸாம் எழுதினேன். அந்த வருஷம் க்ளியர் பண்ணிட்டேன். அப்போதான் இன்னோரு ஐடியாவும் வந்துச்சு. லண்டன்ல இருக்கிற RCA காலேஜில் சேர்றதுதான் அது. அந்த காலேஜ் பத்தி எங்க வீட்ல சொல்லி சத்தியசீலன் சார்தான் ரெக்கமண்ட் பண்ணினார். ஸ்காலர்ஷிப் கிடைச்சிருந்தா நல்லா இருக்கும். ஆனா, சித்தப்பாவும் அப்பாவும்தான் என்னைக் கஷ்டப்பட்டு இந்த காலேஜ்ல சேர்க்க ஹெல்ப் பண்ணாங்க!’’ என்றார் ஷரோன்.

ஷரோன் ராமலிங்கம், ஆடி TT காரின் டிசைனர் பீட்டர் ஷ்ரேயருடன்...
ஷரோன் ராமலிங்கம், ஆடி TT காரின் டிசைனர் பீட்டர் ஷ்ரேயருடன்...

பீட்டர் ஷ்ரேயர் – இவர்தான் ஆடி TT – ஸ்போர்ட்ஸ் காரை டிசைன் செய்த டிசைன் இன்ஜினீயர். ஹூண்டாய், கியா போன்ற நிறுவனங்களின் டிசைன் தலைவராக இருக்கும் பீட்டர்தான், இப்போதைக்கு ஷரோனின் புராஜெக்ட் ஹெட் என்பதும் பெருமைப்பட வேண்டிய விஷயம். “ஜாகுவார், ஆடி என்று நான் பார்க்காத பல டிசைன் ஸ்டுடியோக்களுக்கெல்லாம் போயிட்டு வந்துட்டான் ஷரோன்” என்று தன் சிஷ்யனைப் பற்றிப் புகழ்கிறார், அசோக் லேலாண்டின் டிசைன் சீஃப் சத்தியசீலன்.

பொதுவாக, கார் நிறுவனங்கள் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் அவ்வளவு ஈஸியாகக் கொடுத்து விடாது. இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி அடுத்த மாதம், எம்ஜி நிறுவனத்துக்காக ஸ்கேல் மாடல் டிசைன் செய்யப் போகும் ஷரோனின் திறமைக்கு, நிச்சயம் நாம் பெருமைப்பட்டே ஆக வேண்டும்.