Published:Updated:

iPod: 'ஐ-பாட்டிற்கு குட்-பை' புதிய இசை கேட்கும் கருவியை விரைவில் அறிமுகப்படுத்தும் ஆப்பிள்!

Mp3 வடிவில் சுமார் 1000 பாடல்கள் வரை சேமிக்கக்கூடிய இந்த கையடக்கக் கருவி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

iPod: 'ஐ-பாட்டிற்கு குட்-பை' புதிய இசை கேட்கும் கருவியை விரைவில் அறிமுகப்படுத்தும் ஆப்பிள்!

Mp3 வடிவில் சுமார் 1000 பாடல்கள் வரை சேமிக்கக்கூடிய இந்த கையடக்கக் கருவி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

Published:Updated:

டிரான்சிஸ்டர் ரேடியோ தொடங்கி நவீன யுக ஸ்பாட்டிபை வரை எத்தனையோ மாற்றங்களை தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டிருக்கிறது தொழில்நுட்பம். ஆனால் இசை ஏற்படுத்தும் தாக்கத்துக்கு எந்த மாற்றமும் இல்லை. அதை கேட்கும் இசைப்பிரியர்களும் மாறவில்லை. காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்வதில் ‘ஆப்பிள் நிறுவனம்’ மற்ற அனைவரையும்விட ஒரு படி முன்னோடி. இந்நிறுவனத்தால் கடந்த 2001-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கருவி ‘ஐ பாட்’. Mp3 வடிவில் சுமார் 1000 பாடல்கள் வரை சேமிக்கக்கூடிய இந்த கையடக்கக் கருவி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

iPod
iPod

பாக்கெட் வடிவில் வடிவமைக்கப்பட்டதே இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததற்கான முக்கிய காரணம். அதேபோல அவரவர் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வண்ணங்களிலும் புதிய மாடல்கள் பலவும் கொண்டுவரப்பட்டது. அதேபோல தொலைபேசி அழைப்புகளைத் தவிர `ஐ மெசேஜ்' வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஐபாட்’ உற்பத்தியை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். தற்போது சந்தையிலுள்ள ‘ஆப்பிள் ஐபாட்’ தவிர புதிய உற்பத்தி எதையும் இனி செய்யப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி புதிய தொழில்நுட்பம் கொண்டு தங்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் புதிய இசை கேட்கும் கருவியை ஒன்றை வெகு விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாகவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism