Published:Updated:

பறக்கலாம்... கலக்கலாம்! - ஒரு 3D ஜாலி அனுபவம்

கேம்
பிரீமியம் ஸ்டோரி
கேம்

என்ன பாஸ், சென்னை டு நியூயார்க் ட்ரிப் அடிக்க ரெடியா...?

பறக்கலாம்... கலக்கலாம்! - ஒரு 3D ஜாலி அனுபவம்

என்ன பாஸ், சென்னை டு நியூயார்க் ட்ரிப் அடிக்க ரெடியா...?

Published:Updated:
கேம்
பிரீமியம் ஸ்டோரி
கேம்
சென்னைல இருந்து செங்கல்பட்டு தாண்டுறதுக்கே இ-பாஸ் கேக்குற இந்த நேரத்துல உலகம் முழுக்க சுத்த ஆசைப்படுறீங்களா... உங்களுக்காகவே சுடச் சுட வெளிவந்திருக்கிறது ஒரு கேம். மைக்ரோசாப்ட் வெளியிட்டிருக்கும் ‘ப்ளைட் சிமுலேட்டர்’தான் (Flight Simulator) கேமிங் உலகின் தற்போதைய சென்சேஷன்.

விமானம் ஓட்டும் அனுபவத்தை முழுவதுமாகத் தருவதே இந்த கேமின் இலக்கு. ஒரு விமான காக்பிட்டில் என்னவெல்லாம் இருக்கும், எந்த உயரத்தில் என்ன வேகத்தில் பறக்க வேண்டும், விமானத்தைத் தரையிறக்குவது எப்படி, குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்க எவ்வளவு எரிபொருள் தேவைப்படும், மோசமான வானிலையைக் கையாள்வது எப்படி என அனைத்தையும் சொல்லித்தருகிறது இந்த கேம்.

கேம்
கேம்

இது புது கான்செப்ட் எல்லாம் இல்லை. 37 வருடங்களாக ‘ப்ளைட் சிமுலேட்டர்’ கேம்களை மைக்ரோசாப்ட் வெளியிட்டுவருகிறது. சொல்லப்போனால் விண்டோஸ் ஓஎஸ்ஸை அறிமுகம் செய்வதற்கு முன்பே முதல் ப்ளைட் சிமுலேட்டர் கேம்மை அறிமுகம் செய்துவிட்டது மைக்ரோசாப்ட். அதன் பிறகு சின்னச் சின்ன விஷயங்களாக மேம்பட்டுக்கொண்டே இருந்தது இந்த கேம். ஆனால், இப்போது வந்திருப்பது கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகான ‘ப்ளைட் சிமுலேட்டர்’ அப்டேட். கேமுக்கு மொத்தமாக மூடுவிழா நடத்திவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்குக் கடந்த வருடம் வெளிவந்த இதன் டிரெய்லர் செம சர்ப்ரைஸ். அப்போதே எதிர்பார்ப்பு தீயெனப் பற்றிக்கொண்டது. இப்போது சில நாள்களுக்கு முன்பு கேமும் வெளிவந்துவிட்டது. சரி, இந்த எடிஷனில் அப்படி என்ன ஸ்பெஷல்?

கேம்
கேம்

ப்ளைட் சிமுலேட்டர் 2020-ல் உங்களால் உலகின் எந்த ஏர்போர்ட்டிலிருந்தும் எந்த ஏர்போர்ட்டுக்கும் பறக்க முடியும். மொத்தம் இருக்கும் 36,000 விமான நிலையங்களையும் அப்படியே மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். அனைத்தும் நிஜத்தில் இருப்பதுபோன்ற ஹை-கிராபிக்ஸில். தூத்துக்குடி, புதுச்சேரி என இங்கிருக்கும் சிறிய விமான நிலையங்கள்கூட துல்லியமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. விமான நிலையங்கள் மட்டுமல்ல மைக்ரோசாப்ட் பிங் மேப்ஸ் (bing maps) மூலம் சாட்டிலைட் டேட்டா அனைத்தையும் கொண்டு மொத்த உலகையும் இப்படி 3D-யில் உருவாக்கி யிருக்கிறார்கள். இதனால் பறக்கும்போது கீழே உங்கள் வீட்டைக்கூடப் பார்க்க முடியும். இதுதான் இந்த கேமை விளையாட வேண்டும் எனப் பலரையும் தூண்டுகிறது. இத்துடன் Live-Weather mode ஒன்றும் வைத்திருக்கிறார்கள். அதாவது இப்போது சென்னையில் கடும் மழை பெய்து கொண்டிருக்கிறது என்றால் இந்த மழையில் விமானத்தைச் சென்னையிலிருந்து டேக் ஆஃப் செய்வது எவ்வளவு சவாலாக இருக்கிறது எனப் பார்க்க முடியும்.

பறக்கலாம்... கலக்கலாம்! - ஒரு 3D ஜாலி அனுபவம்

மக்கள் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஏர்பஸ், போயிங் நிறுவனங்களின் பெரிய விமானங்கள் தொடங்கி இருவர் அமரும் குட்டி விமானங்கள் வரை கிட்டத்தட்ட அனைத்து ரக விமானங்களையும் தேர்வு செய்து இந்த கேமில் ஓட்ட முடிகிறது. ராணுவ விமானங்கள் மட்டும் இல்லை. அனைத்து விமானங்களுமே அப்படியே நிஜ வாழ்வில் எப்படி இருக்கின்றனவோ அப்படியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. செயல் பாடுகளையும் அப்படியே எடுத்து வந்திருக்கிறார்கள். விமானம் ஓட்டுவதில் இருக்கும் அத்தனை சூட்சமங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதற்கு ப்ரோ மோடு ஒன்று வைத்திருக்கிறார்கள். ஆனால் அதில் விமானம் ஓட்டுவது சாதாரண காரியம் இல்லை. ஜாலியாக ஆட நினைப்ப வர்களுக்குச் சில கட்டுப்பாடுகளை மட்டும் கொடுக்கும் எளிய மோடு ஒன்றும் இருக்கிறது. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊருக்குப் பறந்து ‘ப்ளைட் சிமுலேட்டர்’ வீடியோக்களால் யூடியூப்பை நிரப்பிவருகின்றனர். நிஜ விமானிகளுக்கும்கூட இதுபோன்ற சிமுலேட் டர்கள் மூலம்தான் முதற்கட்டப் பயிற்சி அளிக்கப்படுகின்றன. பல இடங்களில் அவர்களும் விரைவில் ‘ப்ளைட் சிமுலேட்டர் 2020’-க்கு அப்டேட் ஆகிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேம்
கேம்

Xbox கேமிங் கன்சோலிலும், விண்டோஸ் கணினிகளிலும் இந்த கேமை ஆடலாம். இருப்பினும் கொஞ்சம் கிராபிக்ஸ் ஹேவி கேம்தான் என்பதால் உயர்ரகக் கணினிகள் இருந்தால்தான் ஒழுங்காக ஆட முடியும். இன்று கணினிகளின் விற்பனை சரிந்துவரும் இந்த நேரத்தில் இந்த கேம் மட்டும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான கணினி ஹார்டுவேர் விற்பனையை ஊக்குவிக்கும் எனக் கணிக்கின்றனர். ஆனாலும் மாறிவரும் தொழில்நுட்ப உலகில் சில வருடங்களில் இதை போனிலேயே ஆடக்கூடிய சூழல் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

பறக்கலாம்... கலக்கலாம்! - ஒரு 3D ஜாலி அனுபவம்

இந்த கேமுக்கான டேட்டா அனைத்துமே இன்டர்நெட்டிலிருந்து லைவாக வருகிறது என்பதால் அதிவேக இணையத் தொடர்பும் இந்த கேம் ஆட அவசியம். சாதாரணமாக கீபோர்டு, ஜாய்ஸ்டிக்கிலேயே ஆட முடியும் என்றாலும் இதற்கான ஸ்பெஷல் உபகரணங்களும் உண்டு. அவற்றை வாங்கி கியர் பாக்ஸ், பிரேக், மற்ற கட்டுப்பாடுகள் என மொத்தமாக ஒரு விமான காக்பிட்டையே உருவாக்கி அதை வைத்து இதில் விமானம் ஓட்டலாம்.

என்ன பாஸ், சென்னை டு நியூயார்க் ட்ரிப் அடிக்க ரெடியா...?