பிரீமியம் ஸ்டோரி

Mi 10

வசதிகள்:

  • 6.67 இன்ச் Super AMOLED டிஸ்ப்ளே

  • Qualcomm Snapdragon 865 ப்ராசஸர்

  • 108 MP + 13 MP + 2 MP + 2 MP ரியர் கேமரா

  • 20 MP செல்ஃபி கேமரா

  • 8 GB RAM

  • 4780 mAh பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங்

  • ஆண்ட்ராய்டு 10, MIUI 12

Mi 10
Mi 10

ப்ளஸ்:

  • 108 MP கேமரா

  • செம பர்ஃபார்மென்ஸ்

மைனஸ்:

  • அதிக விலை

ஒன்லைன் ரிவ்யூ:

முதல்முறையாக ஷாவ்மி இந்திய ப்ரீமியம் செக்மென்ட்டில் இந்த போன் மூலம் தடம் பதித்திருக்கிறது. ஸ்பெக்ஸ் பக்காவாக இருந்தாலும், 108 MP மட்டுமே ஸ்பெஷல், மற்ற அனைத்துமே மற்ற போன்களில் இருப்பதுதான். ஷாவ்மி அதன் குறைவான ‘ப்ரைஸ் டேக்’குக்காகப் பெயர்பெற்றது. ஆனால், இந்த செக்மென்ட்டில் மற்ற போன்களுடன் ஒப்பிடுகையில் Mi 10 சற்றே அதிகமான விலையிலேயே அறிமுகமாகியிருக்கிறது. 108 MP கேமராவுக்காக மட்டும் ஐம்பதாயிரம் ரூபாய் செலவழிக்கத் தயாராக இருந்தால் Mi 10 வாங்கலாம்.

விலை:

8 GB RAM + 128 GB - 49,999 ரூபாய்

8 GB RAM + 256 GB - 54,999 ரூபாய்

iPhone SE (2020)

வசதிகள்:

  • 4.7 இன்ச் ரெட்டினா IPS LCD டிஸ்ப்ளே

  • ஆப்பிள் A13 பயானிக் (7 nm+)

  • 12 MP ரியர் கேமரா

  • 7 MP செல்ஃபி கேமரா

  • 3GB RAM

  • 1821 mAh பேட்டரி

  • iOS 13

iPhone SE (2020)
iPhone SE (2020)

ப்ளஸ்:

  • பவர்ஃபுல் பர்ஃபாமென்ஸ்

  • காம்பேக்ட் ஃபீல்

மைனஸ்:

  • சுமாரான பேட்டரி

  • ரொம்ப பழைய டிசைன் & லுக்

ஒன்லைன் ரிவ்யூ:

ஐபோன் 8-ன் அதே பழைய டிசைன், ஆனால் உள்ளே இருப்பது ஐபோன் 11 ப்ரோ ஸ்பெக்ஸ். குறைந்த விலையில் ‘ஆப்பிள்’ போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் ஐபோன் SE-யை டிக் அடிக்கலாம். மற்றவர்கள் யோசிக்கலாம்.

விலை:

3 GB RAM + 64 GB - 42,500 ரூபாய்

3 GB RAM + 128 GB - 47,800 ரூபாய்

3 GB RAM + 256 GB - ₹58,300 ரூபாய்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ

வசதிகள்:

  • 6.78 இன்ச் Fluid AMOLED டிஸ்ப்ளே

  • Qualcomm Snapdragon 865 ப்ராசஸர்

  • 48 MP + 48 MP + 8 MP + 5 MP ரியர் கேமரா

  • 16 MP செல்ஃபி கேமரா

  • 8 GB RAM

  • 4510 mAh பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங்

  • ஆண்ட்ராய்டு 10, OxygenOS 10.0

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ

ப்ளஸ்:

  • ஆண்ட்ராய்டு போன்களிலேயே சிறந்த டிஸ்ப்ளே

  • தரமான பர்ஃபாமென்ஸ்

மைனஸ்:

  • தேவையில்லாத 5 MP கலர் ஃபில்டர் கேமரா.

  • சற்றே பெரிய போன், இது சிலருக்கு அசௌகரியமாக இருக்கலாம்

ஒன்லைன் ரிவ்யூ:

குறைந்த விலையில் ப்ரீமியம் வசதிகள் என்பது மாறி ‘நாங்களே ஒரு ப்ரீமியம் பிராண்ட்தான்’ என ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு இந்த 8 ப்ரோ மூலம் சொல்ல முற்பட்டிருக்கிறது ஒன்ப்ளஸ். தற்போது சந்தையில் ஆண்ட்ராய்டு போன்களிலேயே சிறந்த டிஸ்ப்ளே, வேற லெவல் பர்ஃபாமென்ஸ் என அதை கிட்டத்தட்ட சாதித்தும் காட்டியிருக்கிறது . போன் வாங்க 50,000 ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட் உண்டு என்றால் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ செம சாய்ஸ்.

விலை:

8 GB RAM + 128 GB - 54,999 ரூபாய்

8 GB RAM + 256 GB - 59,999 ரூபாய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு