பிரீமியம் ஸ்டோரி

ஒன்ப்ளஸ் நார்டு

வசதிகள்:

 • 6.44-இன்ச் Full-HD+ Fluid AMOLED டிஸ்ப்ள (90 Hz)

 • Qualcomm Snapdragon 765G ப்ராசஸர்

 • 48MP+ 8MP+ 2MP + 5MP ரியர் கேமரா

 • 8 MP+ 32 MP செல்ஃபி கேமரா

 • 6GB/ 8GB/ 12GB RAM

 • 4,115 mAh பேட்டரி

 • 30W ஃபாஸ்ட் சார்ஜிங்

 • ஆண்ட்ராய்டு 10, ஆக்ஸிஜன் ஓஎஸ் 10.5

கேட்ஜெட்ஸ்

ப்ளஸ்

 • டிசைன் & லுக்

 • டிஸ்ப்ளே

 • மென்பொருள் அனுபவம்

மைனஸ்

 • சம்பிரதாயத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு கேமராக்கள்

 • சுமாரான பெர்ஃபாமென்ஸ்

விலை

 • 6GB Ram + 64GB- ரூ.24,999

 • 8GB Ram + 128 GB- ரூ.27,999

 • 12GB Ram + 256 GB- ரூ.29,999

ஒன்லைன் ரிவ்யூ:

தங்களது ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் லைட் வெர்ஷன்களை வெளியிடுவதுதான் தற்போதைய ட்ரெண்ட். ஆப்பிள், சாம்சங், கூகுள் வரிசையில் இப்போது ஒன்-ப்ளஸ். இப்படி ப்ரீமியம் போன்களில் இருந்து மிட்-ரேஞ்ச் ப்ரீமியம் போன்களைக் கொண்டுவரும்போது, அதிலிருக்கும் ஒரு முக்கிய ஹைலைட்டை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற விஷயங்களைக் கைவிட்டுவிடுகிறார்கள். ஆனால், ஆல்-ரவுண்டு பேக்கேஜாக, முக்கியமான வசதிகளில் சமரசம் இல்லாமல் வெளிவந்திருக்கிறது ஒன்ப்ளஸ் நார்டு.

அசுஸ் ROG போன் III

வசதிகள்:

 • 6.59-இன்ச் Full-HD+ AMOLED டிஸ்ப்ளே (144 Hz)

 • Qualcomm Snapdragon 865+ ப்ராசஸர்

 • 8GB/ 12GB LPDDR5 RAM

 • 128GB/ 256GB UFS3.1 ஸ்டோரேஜ்

 • 64MP+ 13MP+ 5MP ரியர் கேமரா

 • 24MP செல்ஃபி கேமரா

 • 6000 mAh பேட்டரி

 • 30W ஃபாஸ்ட் சார்ஜிங்

 • ஆண்ட்ராய்டு 10

கேட்ஜெட்ஸ்

ப்ளஸ்

 • தாறுமாறு பெர்ஃபாமென்ஸ்

 • டிஸ்ப்ளே

 • பேட்டரி

மைனஸ்

 • சாதாரண பயன்பாட்டுக்குக் கொஞ்சம் பெரிய போன்தான்.

விலை

 • 8GB Ram + 128GB- ரூ.49,999

 • 12GB Ram + 256 GB- ரூ.57,999

ஒன்லைன் ரிவ்யூ:

50,000 பட்ஜெட், கேமிங்தான் முக்கியம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு இந்த போனை டிக் அடிக்கலாம். மற்றவர்களுக்கும் இது நல்ல சாய்ஸாகவே தெரிகிறது. முக்கியமாகப் பலரும் சீன தயாரிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்ற முடிவுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு ப்ரீமியம் செக்மென்ட்டில் சிறந்த மாற்று இந்த அசுஸ் ROG போன் III.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரெட்மி நோட் 9

 • 6.53-இன்ச் IPS LCD டிஸ்ப்ளே

 • MediaTek Helio G85 ப்ராசஸர்

 • 48MP+ 8MP+ 2MP + 2MP ரியர் கேமரா

 • 13 MP செல்ஃபி கேமரா

 • 3GB/ 4GB

 • 5020 mAh பேட்டரி

 • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்

 • ஆண்ட்ராய்டு 10, MIUI 11

கேட்ஜெட்ஸ்

ப்ளஸ்

 • தரமான பேட்டரி

 • விலைக்கேற்ற நல்ல பெர்ஃபாமென்ஸ்

மைனஸ்

 • மலிவான உணர்வைத் தரும் பிளாஸ்டிக் பில்டு

 • சுமாரான கேமரா

விலை

 • 4GB + 64GB- ரூ.11,999

 • 6GB+ 128GB- ரூ.14,999

ஒன்லைன் ரிவ்யூ:

ரெட்மி நோட் 8-ல் இருக்கும் சில விஷயங்கள் மேம்பட்டிருக்கின்றன. மற்றபடி குறிப்பிட்டுச் சொல்ல எந்த ஹைலைட்டும் இல்லை. எப்போதும் போல பேட்டரி நிறைவாக இருக்கிறது. மீடியாடெக் ப்ராசஸர் என்றாலும் பெர்ஃபாமென்ஸில் பெரிய குறைகள் இல்லை.

ஒப்போ வாட்ச் 41 mm

 • 1.6 Rigid AMOLED டிஸ்ப்ளே

 • 30.1 கிராம் எடை

 • 300mAh பேட்டரி

 • Watch VOOC Flash சார்ஜிங்

 • 1GB RAM+ 8GB ஸ்டோரேஜ்

 • 3ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ்

 • NFC, GPS, Bluetooth 4.2,

கேட்ஜெட்ஸ்

ப்ளஸ்

 • சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே

 • ஃபிட்னெஸ் வசதிகள்

மைனஸ்

 • ஒரு நாள் பயன்பாட்டுக்குள் தீர்ந்துவிடும் பேட்டரி

விலை

 • ரூ.14,990

ஒன்லைன் ரிவ்யூ:

ஸ்மார்ட்போன்களில் கொடிகட்டிப் பறந்தாலும், ஸ்மார்ட்வாட்ச் என்று வந்தால் ஆண்ட்ராய்டு கொஞ்சம் சுமார் ரகம்தான். ஸ்மார்ட்வாட்ச்சுகளுக்கான ஆண்ட்ராய்டு வியர் ஓஎஸ் ஆப்பிள், சாம்சங்குடன் போட்டி போட முடியாமல் பல காலமாக திணறி வருகிறது. முதல்முறையாக இந்த நிலையை மாற்றும் வகையிலான ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் வாட்ச்சைத் தயார் செய்திருக்கிறது ஒப்போ. பேட்டரி சுமார்தான். இன்னும் முழுமையான ஸ்மார்ட் வாட்ச் வேண்டுமென்றால் இதன் 46mm வெர்ஷனை முயற்சி செய்து பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு